18 – காற்றின் நுண்ணுறவு
நாக் அவசர அவசரமாக மரத்தில் தாவி ஏறி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டிருந்தான்.
ரிஷி கொடுத்த சத்தம் அந்த பழங்குடி கிராமத்தில் இருந்தவன் காதுகளில் விழுந்ததும், பதற்றமாகவும் ஜாக்கிரதையாகவும் அடர்ந்த மரங்களுக்கிடையில் தாவிச் சென்றவன், அந்த டென்ட்களில் இருந்து ஆட்களைனைவரையும் இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்தது, இவன் கண்களில் விழுந்தது.
இளவெழிலி வெளியே வரமுடியாதென தர்க்கம் செய்துக்கொண்டிருக்க, வேறொருவன் வந்து அவளை ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.
“எங்களால எங்கயும் வரமுடியாது…. நாங்க இங்கயே தான் இருப்போம். எவனா இருந்தாலும் அவன இங்க வரசொல்லு…. எங்க ப்ரோபசர கொன்னதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்…. இல்ல அவனுக்கு தேவையான எதுவும் அவங்க கைக்கு எப்பவும் கிடைக்காம பண்ணிடுவோம்”, அப்போதும் தைரியமாகவே பேசினாள்.
“சும்மா நொய்யி நொய்யின்னு இருக்காத…. வான்னா வரணும். உங்கள கொல்லாம அங்க கூட்டிட்டு போகணும்னு நினைக்கறோம். தேவையில்லாம சாவாதீங்க எவனும்”, அக்கூட்டத்தின் தலைவன் எரிச்சலுடன் கூறினான்.
“எங்கள கொன்னுக்க… அதனால எந்த பிரச்சினையும் எங்களுக்கு இல்ல… உங்கள அனுப்பினவனுக்கு தான் அத்தனை பிரச்சினையும் வரும்”, என ரிஷியும் திமிராக பதில் கொடுத்தான்.
“உங்க வீட்ல உள்ளவங்கள கொன்னா?”, என்ற குரல் மற்றொரு அடியாளின் கையில் இருந்த போனில் இருந்து ஒலித்தது.
“இத்தனை நாள்ல அவங்க பாதி செத்திருப்பாங்க .. முழுசா கொன்னுடு… எல்லாருமே நிம்மதியா போவோம்”, என இளவெழிலி அடக்கப்பட்டக் கோபத்துடன் கூறினாள்.
“சரி…. வினோத் .. உங்க அப்பா மார்கெட்ல நிக்கறாரு இன்னும் இரண்டு நிமிஷத்துல நீ வண்டில ஏறல… அவர் கண்ணு முன்னால உன் தங்கச்சிய நாலு பேர் ரேப் பண்ணுவாங்க…. எப்படி வசதி?”, எனக் கூறினான் ம்ரிதுள்.
“உனக்கு என்னடா வேணும்? ஏன்டா எங்கள டார்ச்சர் பண்ற?”, வினோத் ஆத்திரமும் அழுகையும் கலந்துக் கேட்டான்.
“இப்போதிக்கு நீங்க எல்லாரும் வண்டில ஏறுங்க. அங்க இருக்கற பொருளெல்லாம் தானா வரவேண்டிய இடத்துக்கு வந்துடும்….”, எனக் கூறி போனை கட் செய்துவிட்டு நிமிர்ந்தான்.
எதிரில் நாச்சியார் அருவருப்பான முகபாவனையோடு அவனை தீயென முறைத்துக்கொண்டிருந்தாள்.
“உள்ள போ”
“ஆம்பள தானே நீ?”, நாச்சியார் எகத்தாளமாக கேட்டாள்.
“ஏய்ய்….”, யோகேஷ் சீறினான்.
“ஸ்ஸ்ஸு….. ஒருத்தர மிரட்ட அவங்க வீட்டு பொண்ண துருப்பு சீட்டா எத்தனை காலத்துக்கு தான் நீங்க பயன்படுத்துவீங்க? அவன் கிட்ட இருந்து அந்த வேலைய சாமர்த்தியமா செய்ய வைக்க வக்கில்ல…. உங்களுக்கெல்லாம்…….”, என கெட்டவார்த்தையில் திட்டியவள் அங்கிருந்து ராகவியை மற்றொரு கையால் இழுத்தபடிச் சென்றாள்.
“ம்ரிதுள்… ஏன் நீ இவ்வளவு அமைதியா இருக்க? அவ என்ன பேச்சு பேசிட்டு போறா…. கம்முனு விடக்கூடாது…. இப்பவே அடிச்சி அவள ஒரு வழி பண்றேன்”, எகிறியபடி நகர்ந்தவனை ம்ரிதுள் மர்மமான மென்னகையுடன் அவள் செல்லும் திக்கைப் பார்த்தபடி இழுத்து நிறுத்தினான்.
“பொண்ணுங்களுக்கு பொதுவா திமிரு இருக்கும்… அழகும் இருந்தா அது இரண்டு மடங்கு இருக்கும்… இவளுக்கு அறிவும் இருக்கு, அது சரியான நேரத்துல உபயோகப்படுத்தவும் தெரியுது… அதனால தெனாவட்டும் அதிகமா தான் இருக்கும்… நான் சொன்னத செய்….. நான் விலங்க வேட்டையாடிட்டு வரேன்… சமைக்க தேவையானத ஏற்பாடு பண்ணு… “, எனக் கூறிவிட்டு அதிநவீன வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
அந்த பங்களாவின் கேட் அருகில் நின்ற மானைக் கண்டவுன் அதை குறி வைத்தான்.
மாடியில் இருந்து இவன் குறி வைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் நாச்சியார்.
நொடியில் மான் அம்பினில் தைத்து நான்கடி தள்ளி விழுந்தது.
அதை அடியாட்கள் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தனர்.
அவன் பின்னே நான்கு பேர் காட்டிற்குள் சென்றனர்.
நாச்சியார் மனதில் எழுந்த கலக்கம் கண்களில் எட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டே , அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தாள்.
“பேபி… அடுத்து என்ன பண்றது?”, ராகவி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடிக் கேட்டாள்.
“அதபத்தி அப்பறம் பேசிக்கலாம் … நான் குளிச்சிட்டு வரேன்… தனியா எங்கயும் போகாத.. யார் கூப்டாலும் எது கேட்டாலும் பதில் சொல்லாத ரா… பத்து நிமிஷத்துல வந்துடறேன்”, ராகவிக்கு மேலே சைகை காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
ராகவியும் ஏதோ புரிந்து வேறெதும் பேசாமல் உள்ளே கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.
நாச்சியார் குளிக்கும் போதும், அந்த அறையைச் சுற்றி நன்றாக ஆராய்ந்துவிட்டு உடலில் துணி போர்த்தியபடியே குளித்துவிட்டு வந்தாள்.
அதற்கு நடுவில் அவர்களின் உடைகளை ஒருவன் கொடுத்துவிட்டுச் சென்றான்.
நாச்சியார் அதையும் ஆராய்ந்துவிட்டே அணிந்துக் கொண்டாள்.
“ஏன் பேபி உன் ட்ரஸ் தானே அது… அதை ஏன் இவ்வளவு நேரம் ஆராய்ச்சி பண்ணணும்?”
“அது அவங்களோட சின்ன வயசு பழக்கம் மிஸ். ராகவி…. அவங்க யாரையும் எதையும் எப்பவும் நம்பறதே இல்லை”, எனக் கூறியபடி ம்ரிதுள் அந்த அறையின் உள்ளே வந்தான்.
“நீ எதுக்கு வந்த?”, ராகவி வரவழைக்கப்பட்டத் தைரியத்துடன் கேட்டாள்.
“பரவால்லயே… பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும்னு சொல்றதுக்கு தகுந்தமாதிரி உங்களுக்கும் தைரியம் கொஞ்சம் வந்திருக்கு போலவே”, என ராகவியை மேலிருந்து கீழே வரை ஆராய்ந்தபடிக் கூறினான் ம்ரிதுள்.
“என்ன பேசணும்?”, என நாச்சியார் ராகவியை தன் பின்னால் மறைத்தபடிக் கேட்டாள்.