மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க….
புகை பிடிக்க இஷ்டமில்லை….
புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை…
மது நாட நாட்டமில்லை…
என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்…
மாதுவான நானே மாதுவை தேட முடியாது….
ஹாஹாஹாஹா….
மாதனை தேட இஷ்டமில்லை…
மனிதனின் மேல் நம்பிக்கையில்லை….
இவ்வாழ்வின் மீது பிடிப்பும் இல்லை….
ஆனாலும் ஏதோ ஒன்று….
என்னை உயிர்வாழ வைக்கிறது….
உயிர் மட்டுமே இயங்குகிறது…
உணர்வில்லை….
உணர்ச்சிகள் இல்லை….
வெறுமை…
சூன்யம் நிறைந்த வெறுமை…..
வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது….
வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்…
சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது போல...
கூட்டமாக சிரித்து பேசுபவர்கள் அருகில் இருந்தும்…..
அச்சிரிப்பு என்னை எட்டாத காரணம் என்ன?
ஏன்….?
அச்சூழல் மனதை எவ்விதத்திலும் தாக்காது போனது…
உணர்ச்சிகளற்ற மனதாக…
உணரமுடியாத ஊனமாக…
உருமாறியதோ என் மனம்….?!
– ஆலோன் மகரி