உழைப்பின் மீதிருக்கும் காதல் – இப்போது
உழைப்பை காதலிப்பவர்கள் மீதும் வருகிறது…
இறுக்கியணைத்து தோளில் தூக்கி வைக்க வேண்டும்….
ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாய் மறைந்திருப்பவர்களை எல்லாம்….
தோள் கொடுத்து கொண்டாடவேண்டும்….
உழைப்பின் மீதான காதலை அருகிருந்து….
வியர்வையின் வாசம் நுகர்ந்து….
கடினமென்றதெல்லாம் சுக்குநூறாக்கும் லாவகத்தைக் கண்டு….
உழைக்க உழைக்க உணரும் நுணுக்கங்களைக் கண்டு….
எப்படியெல்லாம் காதல் வருகிறது பாருங்கள்….
உழைப்பை காதல் செய்கிறேன்….
உழைக்க நினைக்கும் மனதையும்….
உழைக்க துவங்கும் உடலையும் விட….
எதுவும் கவர்ச்சி இல்லை….
– ஆலோன் மகரி