வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் -1
2. படிப்பு – இளங்கலை கணிதம்
3. தொழில்/வேலை – சினிமா
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
2012-ல் இருந்து
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
சூழ்நிலை அமைத்துக் கொண்டெல்லாம் வாசிக்கத் தொடங்கவில்லை. வாசிக்க நேரம் காலாமெல்லம் கிடையாது.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
புத்தகங்களும் கூடவே கிண்டிலும்..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வாங்குவது சம்பாதிப்பதைப் பொறுத்தது.
வாசிப்பது புத்தகங்களைப் பொறுத்தது.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இரண்டிலும்..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
2016 காலங்களில் நான் முழுமையாக கஞ்சா போதைக்கு அடிமை. எந்த மறுவாழ்வு மையத்திற்கும் சென்றதில்லை. இன்று கஞ்சாவைத் தொடுவதில்லை. ஆகச்சிறந்த தாக்கம்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை வாசிப்பு ஒன்றே தீர்மானித்தது. இப்போதும் முட்டாளே.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
எழுத்தாளர்,
புத்தகம் கூறும் கருத்து.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?
(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
யாவும்..
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
ஆசானாக கூடவே தோழனாக …
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
ஒரு மனிதன்
ஒரு வீடு
ஒரு உலகம்
(அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் எனத்தொடங்கி, அந்த வீட்டில் ஒரு ஊரே இருந்தது என முடித்திருப்பார் ஜெயகாந்தன்.)
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
நான் வாசித்தவரை எந்த மாறுதல்களும் இல்லை. அவரவர் பாணியில் அவரவர்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
இருக்கலாம். மொழி பற்றி நான் அறிந்த வகையில் பயமாய் இருக்கிறது.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
1) என் பெயர் எஸ்கோபர், இறவான்- பா.ராகவன் (வழக்கு மொழி)
2) ரெண்டாம் ஆட்டம்- லஷ்மி சரவணகுமார்(மதுரை வட்டார மொழி)
3) தலைமுறைகள்(கன்னியாகுமரி அல்லது நாகை வட்டார மொழி)
4) வேள்பாரி, பொன்னியின் செல்வன்(செந்தமிழ்)
அறிந்துக் கொள்ளத்தானே மொழி. அதில் யாவும் நெருக்கமாகத்தான் இருக்கிறது.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
செங்கனி
வேள்பாரி
பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம்
அசுரன்
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
கிளிஷேவ்வா இருக்கு..
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
ம்ம்..
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
நேரம் ஒதுக்குவதெல்லாம் கிடையாது. ஒருநாளில் 50 முதல் 100 பக்கங்கள் நிச்சயம் வாசித்துவிடுவேன்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
விமர்சனம் கொடுக்கலாம். ஆனா நான் விமர்சனம் கொடுக்க ஆரம்பிக்கல. இன்னும் எழுத்துகள் சரியா கை கூடலன்னு வெச்சிக்கலாம்.
ஆனா வாசிச்ச புத்தகங்களை பற்றி நிறைய நண்பர்களுடன் பகிர்ந்துக்குவேன். முடிஞ்சவரைக்கும் அந்த புத்தகங்கள நண்பர் வாசிக்கிற அளவுக்கு கொண்டு வந்திருவேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
இறவான்
ரூஹ்
நட்சத்திரவாசிகள்
தலைமுறைகள்
இடக்கை
சஞ்சாரம்
ரசவாதி
சஹீர்
கழிவறை இருக்கை
ஹாஃப் கேர்ள்பிரண்ட்
இன்னும் லிஸ்ட்ல நெறைய இருக்கு.
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
அபத்தங்களை உருவாக்காத கலைஞன் இந்த உலகில் இல்லை. அவனே உருவாக்கும் அத்தனை அபத்தங்களையும் மீறி அவன் கலை கோலோச்சுவதைக் காணும் கணத்துக்காகவே அவன் வாழ்கிறான். என்று நிகழும் என்று தெரியாத அந்த அற்புதத்துக்காக அவன் உழைக்கிறான். உயிரே போனாலும் பரவாயில்லை என்று அடிக்கடி நினைப்பவனாக அவன் இருப்பதால்தான் வாழ்வின் அசுரப் பிடியில் சிக்கி மீளும் ஒவ்வொரு தருணமும் அவனுக்கு மறு பிறப்பாகிறதுன்னு இறவான் நாவல்ல பா.ராகவன் சொல்லுவார். நான் இதை அடிக்கடி நெனச்சு பார்த்துப்பேன்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நானே நிறைய கத்துக்கணும். So சொல்றதுக்கு என்கிட்ட ஒன்னும் இல்ல
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
கொண்டாட மறுக்கறதுன்னு இல்ல, கொண்டுபோய் சேர்க்கத் தவறிடுறாங்களோன்னு தோணுது.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
ஜெயகாந்தன்
கரிச்சான்குஞ்சு
நீல பத்மநாபன்
புதுமைபித்தன்
பிரபஞ்சன்.
ராஜம் கிருஷ்ணன்
பா.ராகவன்
லஷ்மி சரவணகுமார்
கார்த்திக் பாலசுரமணியன்
லதா அருணாச்சலம்
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எதையுமே எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அந்த புத்தகம் நம்மை ஏமாற்றிவிடும். பிறகு அந்த புத்தகம் சரி இல்லைன்னு சொல்லத்தோணும். அங்க என்ன இருக்கோ அத நம்ம, நம்ம வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தாப் போதும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
ரெண்டுபேர் கிட்டயும் இருக்கு.
என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்ல விரும்பல..
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
அப்படியெல்லாம் எந்த ஆசையும் இல்ல.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எடுத்துக்கொண்ட கருபொருளுக்கு எது தேவையோ அதன் வழியில் பயணப்படும்போது நானும் அதனோடு ஒத்துப்போகிறேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஸ்டோரிடெல்ல நெறைய கேட்ருக்கேன். ஒரு சிலத தவிர எல்லாம் நல்லாவே இருக்கு.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அந்தாதி ஒன்னும் தப்பிலையே.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
வேறென்ன, எல்லாரும் சந்தோஷமா இருங்க. அவ்ளோதான்.
இது ஒரு புது வகையான முயற்சி. சில வாசகர்கள் யாரையும் புண்படுத்திட கூடாதுன்னு நேர்காணல் குடுக்க தயங்கினாங்க, அவங்களுக்காகவே இந்த “வம்பு வேண்டாத அன்பு வாசகர் – எண்கள்” ஆரம்பிச்சி இருக்கோம்.
ரொம்பவே ஆழமா வாசிப்பை நேசிக்கற ஒரு வாசகர் அவரோட அனுபவங்கள ரொம்ப அழகா ஆழமா சில விஷயங்களை நம்ம கூட இங்க பகிர்ந்து இருக்கார்.
உங்களோட புத்தக வகைகளும், அதுல நீங்க பயணபடறதும் ரொம்பவே ரசிக்க கூடியதா இருக்கு .. நிறைய எழுத்தாளர்களுக்கு ஆசையாவும் இருக்கும் இப்டி ஒரு வாசகர் நமக்கு கிடைக்கணும்னு ..
உங்க பொன்னான நேரத்தை எங்கக்கூட முகம் தெரியாம செலவிட்டதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான். நனி நன்றிகள் சகோ.
வாசிப்பை நேசிப்போம் ..
அப்பட்டமான உண்மையை உண்மையில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. நானும் சாதாரண மனிதனே…
தங்கள் வாசிப்பு பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹💐💐🌺🌸