வீண் தான்….
இதுநாள் வரையிலும்…..
காட்டிய ஆசையும்….
உணர்ந்த நேசமும்…..
மூழ்கிப்போன இதயமும்….
கொடுத்த அரவணைப்பும்….
கிட்டாத காதலும்…..
இடிந்த குடும்பமும்….
உடைந்த புத்தியும்…..
நொறுங்கிய அனைத்தும்…..
வீண் தான்…..
இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்…..
உள்ளாவியின் குரல் கேட்டு……
அக்கண்ணில்படா விரல் பிடித்து…..
நொறுங்கிய மொத்தத்தையும்….
மீண்டும்….
முதலில் இருந்து….
அக்குரல் மொழியும் வழியே….
இவளை இவளே தெளிவுப்படுத்தி….
திடம் கொடுத்தபடி…..
அஞ்சிய மனதை அதட்டி…..
உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து….
இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்….
இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்….
எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்….
மொத்தமும் வீண் தான்….
அவளின் இப்பிறவி…..
– ஆலோன் மகரி