வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர். இவங்க ஒரு brownie கேக் ன்னு கூட சொல்லலாம்.. ஒரு நல்ல வாசகர்..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் –ஜீனத் சபீஹா
2. படிப்பு -B.com
3. தொழில்/வேலை – Home Baker
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
பள்ளிக் காலங்களில் தொடங்கியது என் வாசிப்பு அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்த காலங்கள் அவை…
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் வாசிப்பை நான் மிகவும் விரும்புவேன்… மன வருத்தங்களும் துயரங்களும் இருக்கும் போது அதிகமாக வாசிப்பை நாடுவேன்..
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இப்பொழுது அதிகமாக கணினி வாயிலாகத்தான் வாசிப்பு உள்ளது இடையிடையில் புத்தகமும் படிப்பேன்..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
ஒரு வருடத்தில் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை ஆனால் வாங்குவது இப்போது அதிகமாக குறைந்து விட்டது புத்தகக்கண்காட்சி வரும் போது பிடித்த எழுத்தாளர்கள் அல்லது படிக்க நினைக்கும் புத்தகங்களை வாங்கிக் கொள்கிறேன்…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இரண்டிலுமே வாசிப்பு முழுமை அடைவதாக தான் நினைக்கிறேன் பெரிதாக வித்தியாசம் தெரிவதில்லை…
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
தாக்கம் என்று சொல்ல முடியாது… ஆனால் சிறுவயதில் படிக்கும் அம்புலிமாமா பாப்பா கதைகள் போன்ற புத்தகங்களை படிக்கும்போது அந்த பேண்டஸி உலகில் அதை கற்பனை செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வமும் ஆனந்தமும் இருந்தது…
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
நான் பொதுவாக கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள் தெரியாத வெளியாட்களிடம் பேச தயங்கியவள்.. தைரியமான பெண்களைப் பற்றி கதைகளை படித்த பின் எனக்குள் அந்த தைரியத்தை வளர்த்துக் கொண்டு உள்ளேன்..
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
நிச்சயமாக ஆசிரியர்… பின்பு தலைப்பும் கூட..
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
குடும்பம் காதல் மர்மம் திகில் சரித்திர புராண கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும்..
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
ஒரு நல்ல நட்புறவாக தெரிகிறார்கள்…
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
வாழ்வில் திருப்பம் ஏற்படுத்திய கதை என்று சொல்வதற்கு எதுவுமில்லை ஆனால்.. srikala சிஸ்டர் அவர்களின் “நாளை விடியல் நமதே” கதை மனதை விட்டு செல்ல வெகு நாட்கள் ஆனது…
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
வித்தியாசங்கள் என்று பெரிதாக எதுவும் தோன்றவில்லை… இன்றைய எழுத்தாளர்களின் சிந்தனைகளும் கதையின் நகர்வும் புது விதமாகவும் அதிக இன்ஃபர்மேஷன்களுட னும் இருப்பதாகத் தோன்றுகிறது…
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக … மொழி வளர்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை…
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வட்டார மொழி பேச்சு மொழி வாசிப்பதற்கு மிக நெருக்கமாக உணர்கிறேன்… செந்தமிழ் மற்றும் வழக்கு மொழியும் வாசிக்க விரும்புவேன்..
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வரலாற்று நாவல்கள் இதுவரை வாசித்ததில்லை… வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது விரைவில் வாசித்து விடுவேன் என நம்புகிறேன்….
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
காதல் குடும்ப நாவல்கள் ஜனரஞ்சகமாகவும் தற்போதைய வாழ்வின் எதார்த்ததோடும் குடும்ப வாழ்வில் ஏற்படும் சில சிக்கல்களை தீர்க்க கூடிய வழி முறைகளும் இருப்பதாகவே நான் கருதுகிறேன்..
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கதை கரு கொண்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்போது நிறைய எழுத்தாளர்கள் அப்படி எழுதுகிறார்கள்… அறிவியல் சார்ந்த கதைகளும் படிக்க மிகவும் பிடிக்கும்… அப்படி va Nisha sister எழுதிய “உயிர்விடும் வரை உன்னோடுதான்” கதையில் பிசிஓடி பற்றிய நிறைய தகவல்கள் படித்து தெரிந்து கொள்ள முடிந்தது.. திஷி சிஸ்டர் எழுதிய அம்பு தேவ் கதைகளிலும் நிறைய தெரிந்து கொண்டேன்… அந்த ஸ்கால்பெல் மறக்க முடியாதது….
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
ஆம்… மதியம் சாப்பிட்ட பின்பு சில நேரம் தூங்குவதற்கு முன்பு சில நேரம் சில கதைகள் நம்மை இழுத்துக் கொண்டே இருக்கும் அப்போது வேலைகளுக்கு இடையில் சிறிது நேரமும் 😀
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கண்டிப்பாக விமர்சனம் கொடுப்பேன்… அவர்களின் எழுத்தில் எனக்கு பிடித்த இடங்களைச் சுட்டிக்காட்டி சொல்வேன் ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் பொதுவெளியில் கூறாமல் அவர்களிடம் தனியே அதை கூறிவிடுவேன்… எழுதும் எழுத்தாளர்களுக்கே அந்தக் கதையின் தன்மையும் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களும் புரியும் எனவே அதில் அதிகமாக குறை கூற விரும்பாமல் அவர்களின் எண்ண போக்கிலேயே அந்த கதையை படிக்க விரும்புவேன்….
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ஐயையோ அப்படி நிறைய இருக்கிறதே..
இந்தக் கேள்வியை ஸ்கிப் செய்து கொள்ள முடியுமா 😀
தமிழ் மதுரவின் “சித்ரங்கதா”
சிரஜூனிசாவின் “கன்னி வைக்கும் மானே”
ஜானு நவினின் “தெவிட்டாத தீஞ்சுவை நீ”
மல்லிகா மணிவண்ணன் அவர்களின் “சத்தமின்றி முத்தமிடு”
ராஜி அன்பு வின் “போற்றிப் பாடடி நம் காதலை”
Jb mam “மலரினும் மெல்லியவள் உதயேந்திர வர்மன்”
இன்னும் நிறைய இருக்கு ….
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
Srikala சிஸ்டர் எழுதிய தாயுமானவன் கதையில் கர்ப்பப்பை உடன் இருந்த ஆணைப் பற்றிய கதையில் அவன் அனுபவிக்கும் துயரங்கள் மனதை மிகவும் பாதித்தது..
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றைய எழுத்துலக மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறது… வித்தியாசமான சிந்தனைகளுடன் வாழ்வில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதும் கதைகளும் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றன..
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
அவர்கள் கொண்டாடப்படுவதில்லை என்பதை ஏற்க முடியாது நல்ல கதைகள் நிச்சயமாக மக்களை சென்றடையும் சிறிது காலதாமதம் ஆனாலும்… என்னைப்போன்ற விமர்சகர்கள் நிச்சயமாக அதற்கு துணை புரிவார்கள் நானே நிறைய பேரின் முதல் கதைக்கு விமர்சனம் கொடுத்திருக்கிறேன்…
என்ன அவர்கள் சிறிது காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்…
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
இதுவும் கடினமான கேள்வியே 😀
அன்றைய எழுத்தாளர்களில் ரமணிச்சந்திரன் அம்மா, லட்சுமி அம்மா, இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், தேவிபாலா .
இவர்களின் கதைகள் திகில் மர்மம் குடும்பம் என அனைத்தும் இருக்கும்
இன்றைய காலகட்டத்தில் நிறைய எழுத்தாளர்கள் எனக்கு பிடிக்கும் ஐந்திற்கு பதில் 50 என்று கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும் அதில் சிலரை பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டு இருந்ததால்,
கவி சந்திரா, சரண்யா ஹேமா, குளோரியா, பர்வீன் பானு, மேக வாணி, விஜயமலர், அருணா வேணு, பொம்மு துமி…. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வித்தியாசம் சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்வதே இவர்களின் வெற்றி.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எந்த கதையையும் எதிர்பார்ப்போடு படிப்பதில்லை… சுவாரசியம் குறையாமல் இருப்பதோடு அதிக எழுத்துப்பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
மொழி ஆளுமை நிச்சயமாக பெண் எழுத்தாளர்களிடம் அதிகமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்..
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
ரமணிமாவின் ஆட்டோகிராஃப் வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை..
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதைகளில் எதிர்மறை முடிவுகளை நான் பெரிதும் விரும்புவதில்லை அப்படி இருந்தாலும் அது மனதை விட்டு நீங்க எனக்கு சில நாட்கள் தேவைப்படும்… அப்படி நான் படிக்கும் புத்தகத்தில் எழுத்தாளர்களிடம் புலம்பித் தள்ளி விடுவேன் அது என்னை தெரிந்த எழுத்தாளர்களுக்கும் தெரியும் 🥰
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
இதுவரை ஒரு ஆடியோ நாவலையும் நான் கேட்டதில்லை அதனால் அதைப் பற்றிய புரிதல் எனக்கு இல்லை..
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் தவறில்லை என்பதே என் கருத்து அது சுவாரஸ்யத்தை இன்னும் அதிகமாக்கும் என்றே நான் நினைக்கிறேன்…
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எழுத்தாளர்கள் அவர்களின் மனமகிழ்வுக்காகவும், எழுத்தில் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகவும் எழுதுகிறார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக பொங்கல் போஸ்ட் என தனிநபர் தாக்குதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது அப்படி வரும் எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளாமல் அதை தாண்டி செல்ல வேண்டும் என்பதே என் கருத்து… பிடிக்காதவர்கள் இரண்டு பேர் இருந்தால் அவர்களை பிடித்தவர்கள் நூறு பேர் இருப்பார்கள்… அதனால் தேவையில்லாத குப்பைகளைத் தள்ளி விட்டு அவர்கள் எழுத்துப் பணியில் அவர்கள் மென்மேலும் ஜொலிக்க வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன்..
மிகவும் அருமையான நேர்காணல் ஜீனத் சகோ.. எழுத்தாளர்கள் விரும்பும் வாசகர் தான் நீங்கள்.. உங்களின் அழகான, தெளிவான பதில்கள், உங்கள் வாசிப்பு எல்லாமே மிகவும் எளிதாகவும், எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம் நீங்கள் செய்யும் கேக் போலவே அத்தனை மிருதுவாக இருந்தது..
யாரையும் கடிந்து பேசாமல், அனைவரையும் அரவணைத்து பேசும் விதம் மிகவும் அருமை. நீங்கள் கூறியதில் நான் அதிகம் ரசித்த ஒரு வரி, “நிறைய எழுத்தாளர்களின் முதல் கதையை படித்து விமர்சனம் கொடுத்துள்ளேன்” என்று கூறியது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நானும் எழுத்தில் ஆரம்பநிலையில் இருப்பவள், யாரும் அதிகம் படிக்காத, அறியாத இடத்தில் இருக்கும் என் போன்ற சகாக்களின் கதையை நீங்கள் படித்து விமர்சனம் கொடுப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
உங்களின் வாசிப்பு என்றென்றும் தொடரட்டும், உங்களின் வார்த்தைகள் அனைவரையும் மகிழ்வித்திருக்கட்டும்.. உங்களுடன் பயணிக்க கொடுத்த நிமிடங்களுக்கு நனி நன்றிகள் …
மீண்டும் ஒரு அற்புதமான வாசகருடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்..
வாசிப்பை சுவாசிப்போம் …