• About us
  • Contact us
Thursday, June 18, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

10 – வலுசாறு இடையினில்

March 16, 2024
Reading Time: 1 min read
0
1 – வலுசாறு இடையினில் 

10 – வலுசாறு இடையினில்

 

இளவேணி நங்கையின் கல்லூரி வாசலில் நின்றுக்கொண்டு இருந்தாள்.

“நங்க.. நங்க .. உன்ன பாக்க ஒரு பொண்ணு வந்து இருக்கு “, என ஒருத்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள்.

“என்ன பாக்கவா ? யாரு ? “

“தெரியல .. பாத்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாறி இருக்கு .. போய் கேன்டீன்ல பாரு.. டிபார்ட்மெண்ட் ஹெட் கூப்பிட்டு இருக்கு .. நான் அங்க போறேன் “, எனக் கூறியபடி அவள் வேகமாகச் சென்றுவிட்டாள்.

“வினி .. வா டி .. யாருன்னு பாத்துட்டு வரலாம்”

“உன்ன பாக்க யாரு புள்ள இங்க வராங்க ? உனக்கும் தங்கச்சி இல்ல எனக்கும் தங்கச்சி இல்ல .. உனக்கு சொந்தத்துல யாராவது இருக்காங்களா ?”, வினிதா வழவழத்தபடியே வந்தாள்.

“அப்டி யாராவது இருந்தா உனக்கு தெரியாம இருக்குமா என்ன? அது யாரு நம்ம காலேஜ்ல தாவணி போட்டுட்டு வந்து இருக்கறது ?”, கேன்டீன் வாசலில் ஒரு பெண் தாவணியுடன் நிற்பது கண்டுக் கேட்டாள்.

“நம்ம காலேஜ்ல படிக்கற புள்ள மாதிரி தெரியல நங்க .. வா யாருன்னு போய் விசாரிப்போம் “, எனக் கூறியபடி அந்த பெண்ணை நோக்கிச் சென்றாள் வினி.

“அதுலாம் ஒண்ணும் வேணாம்.. வா நம்மல பாக்க வந்தது யாருன்னு மொத பாப்போம் “, என நங்கை அவளின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தாள்.

“என்னைய ஏன்டி இப்பிடி இழுத்துகிட்டு போற ? நான் என்ன உன் புருஷனா ? வேற பொண்ணு கிட்ட பேசபோறேன்னு சொன்னதும் இப்பிடி பண்ற ?”, வினிதா சிரிப்புடன் சோக பாவனையை முகத்தில் காட்டிப் பேசினாள்.

“உங்க ஃப்ரெண்ட்க்கு அடுத்தவன் புருஷன இழுக்கறது தான் கை வந்த கலை ஆச்சே “, எனக் கூறியபடி இளவேணி அவர்கள் அருகில் சென்று நின்றாள்.

“ஏய் .. யாரு நீ ? “, நங்கை கோபத்துடன் கேட்டாள்.

“உன்னய கட்டுவேன்னு ஒருத்தர் சவால் விட்டுட்டு போனாறே அவரோட வருங்கால பொண்டாட்டி “, என தாவணியை இடுப்பில் சொருகிக்கொண்டு பதில் கூறினாள்.

“இந்தா புள்ள .. யாரு கிட்ட பேசற ? பள்ளு கொட்டிரும் பாத்துக்க.. யாரு நீ ? சம்பந்தம் இல்லாம கன்னாபின்னான்னு பேசிக்கிட்டு இருக்க “, வினிதா கண்டிப்புடன் கேட்டாள்.

“நான் எல்லாம் சம்பந்தத்தோட தான் பேசறேன்.. என் மாமா சிம்ம வர்மன் தெரியும்ல “

“அவன் உனக்கு என்னவா வேணா இருந்துட்டு போகட்டும்.. நீ அவன கட்டினாலும் சரி அவன கொன்னாலும் சரி..  அதுக்கு நீ எதுக்கு என்னை பாக்க வந்திருக்க ?”, நங்கை.

“அடேங்கப்பா .. என்ன சத்தம் எல்லாம் பலமா தான் வருது.. என் மாமன் அதான் கட்டினா உன்ன தான் கட்டுவேன்-ன்னு இல்லாத கோக்குமாக்கு வேலை எல்லாம் பாக்கறாரு போல.. இங்க பாருங்க நான் தான் அவர கட்ட போறேன்.. உங்க மனசுல அவரு மேல ஏதாவது எண்ணம் இருந்தா இத்தோட மறந்துடுங்க .. அத சொல்ல தான் வந்தேன்”, என இளவேணி நங்கையை அளவெடுத்தபடி பேசினாள்.

“லூசா நீ? அவன நான் கட்டுறதா யாரு சொன்னா உனக்கு ? எனக்கும் அவனுக்கும் எப்பவும் எந்த சம்பந்தமும் வராது.. போய் நீயே அவன கட்டி சாவடி.. ஊருல ஒரு இம்சை கொறையும் .. வா வினி போலாம் “, என நங்கை அவளை முறைத்துவிட்டுச் சென்றாள்.

“சரியான திமிரு பிடிச்ச பொண்ணா இருக்கும் போலவே.. “, என மனதிற்குள் நினைத்தவள் மீண்டும் நங்கை  முன்பு சென்று வழிமறித்து நின்றாள்.

“மறுபடியும் என்ன ?”, என நங்கை எரிச்சலுடன் கேட்டாள்.

“உன்னைய நம்பரேன் ஆனா என் மாமன நம்ப முடியாது.. இப்போவே உன்ன கட்ட உன் அப்பாருக்கு பிரச்சனை மேல பிரச்சனை குடுத்துட்டு இருக்கு என் மாமா.. உன் வீட்ல சொல்றாங்கன்னு நீ கழுத்த நீட்டிட்டா ?”

“இந்தா பொண்ணு.. உனக்கு அவர கட்டிக்க இஷ்டம்னா போய் அவருகிட்ட சொல்லு.. தேவை இல்லாம இங்க வந்து ஏன் இம்சை பண்ணிட்டு இருக்க ?”, வினிதா பொறுமையை இழுத்துப் பிடித்தபடிப் பேசினாள்.

“அவர எப்டி கட்டிக்கணும்-ன்னு எனக்கு தெரியும்.. அதுக்கு தான் உங்கள பாக்க வந்தேன்.. நீங்க மட்டும் திடமா இருந்தா போதும்.. மத்தத நானும் என் அப்பாரும் பாத்துப்போம்.. உங்க அப்பாவுக்கு பண நெருக்கடி அதிகமா இருந்தா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க எவ்ளோ நாளும் ஒடனே உங்க வீட்டுக்கு வரும்.. “, என அவள் நம்பரை கொடுத்துவிட்டுச் சென்றாள்.

“யாரு இந்த லூசு ? அந்த லூச கட்டணும்-ன்னு இப்டி வந்து பேசிட்டு போகுது.. இதுக்கு முன்ன இத பாத்த ஞாபகம் கூட எனக்கு இல்ல.. உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா வினி ?”, நங்கை இளவேணியை பார்த்தபடிக் கேட்டாள்.

வினிதா அமைதியாக இருக்கவும், அவளை தட்டி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ என்ன யோசனைல இருக்க?”

“இல்ல அந்த பொண்ணு சொன்னத யோசிச்சிட்டு இருந்தேன் நங்க.. “

“அது ஒளறிட்டு போகுது”

“ஒளறிட்டு தான் போகுது.. ஆனா உண்மைய சொல்லிட்டு போகுது நங்க.. கொஞ்சம் யோசிச்சி பாரு.. உன் அப்பாவுக்கு திடீருன்னு எப்டி எல்லா பக்கமும் பண நெருக்கடி வருது? என் அப்பா கிட்ட கூட உன் அப்பா ரெண்டு லட்சம் வாங்கிட்டு போய் இருக்காரு”, என வினிதா சொன்னதும் வீட்டில் அம்மா புலம்பியது நினைவில் வந்தது.

“பணம் பணம்ன்னு எல்லாரும் ஒரே நேரத்துல வந்து நின்னா பாவம் அந்த மனுஷன் எங்க போவாரு.. ஒருத்தனும் பொறுக்க மாட்டேங்கறாங்க.. என்ன தான் பண்றதோ தெர்ல.. இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைச்சா கடைசில கோவில்ல வச்சி மஞ்ச கயிறு தான் கட்ட முடியும் போல “, என இரண்டு நாட்களுக்கு முன்பு புலம்பியது இன்று காரணத்துடன் புரிந்தது.

“ஏன் வினி.. அவன் நிஜமாவே சவாலா எடுத்துகிட்டானா ?”, நங்கை மனதில் பயம் எழுந்தது.

“ஆமா நங்க.. இந்த புள்ள சொல்றதும், உங்க வீட்ல நடக்கறதும் வச்சி பாத்தா வர்மண்ணே தான் எல்லாம் பண்ணுது போல “, வினிதாவும் தோழியை கலக்கத்துடன் பார்த்துக் கூறினாள்.

“அவன் ஏதோ வழக்கம் போல வெளாட்டுக்கு சொல்றான்-ன்னு தானே நினைச்சேன்.. அய்யயோ இப்போ என்ன பண்றது வினி “, நங்கை பதற்றம் கொண்டு வினவினாள்.

“இதுக்கு தான் சொன்னேன் கம்முன்னு வான்னு .. எப்பவும் ஊமையா இருக்கறவ அன்னிக்கி தான் வாய தொறந்த வந்துச்சி பாரு எப்டி-ன்னு.. “

“அன்னிக்கி அவன் பேசினது மட்டும் சரியா.. அவனே தான் வம்பு இழுத்தான்.. பொறுக்கி தனமா நடந்தா வேற என்ன சொல்வாங்கலாம் ?”, நங்கை தன்பக்க நியாயத்தை உரைத்தாள்.

“என்கிட்ட பேசி என்ன ஆக போகுது நங்க ? அந்த அண்ணே அன்னிக்கி பேசினது தப்பு தான்.. இப்போ என்ன பண்றது ?”

“அவன அண்ணே-ன்னு இப்போ ரொம்ப மரியாதையா தான் பேசணுமாடி? அவன் கிட்ட இருந்து எப்டி தப்பிக்கறதுன்னு சொல்லுடி “, நங்கை கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“ஏய் நங்க.. இப்ப என்ன ஆச்சின்னு கண்கலங்கற ? இரு யோசிப்போம்.. பயபடாத .. வா “, என அவளை சமாதானம் செய்தபடி அழைத்துக்கொண்டு நடந்தாள் வினிதா.

“பேசாம அந்த அண்ணே-கிட்ட போய் சாரி கேட்டுரு  நங்க.. அப்பிடி பேசினதுக்கு தானே அவருக்கு கோவம் வந்து சவால் விட்டாரு .. இப்போ நீயே போய் மன்னிப்பு கேட்டுரு .. அவரு விட்டுருவாரு ..”

“அவனா ? அவன் ஒரு  முடிவு பண்ணா அத சாதிக்க எந்த அளவுக்கு வேணா போவான் டி.. அவன் தாத்தாவ கொண்ண வீட்டு ஆளுங்க என்ன ஆனாங்கன்னு உனக்கு நல்லா தெரியும்ல வினி.. இப்போ தான் ஒரு வேலை கெடச்சதுன்னு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன்.. அதுக்குள்ள வரிசையா பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு.. ச்ச.. பொண்ணா பொறந்தா வாழ்க்கைல நிம்மதியே இருக்காது போல “, என தலையைக் கவிழ்ந்தபடி அமர்ந்துவிட்டாள்.

“ஏன் நங்க இப்டி மனசு ஒடைஞ்சி பேசற.. நான் அந்த அண்ணே கிட்ட பேசி பாக்கறேன்.. “

“அவன் யாரு பேச்சையும் கேக்கமாட்டான் வினி”

“அவங்க ஆச்சி சொன்னா ?”, வினி கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தாள்.

“கேப்பானா?”, கொஞ்சம் நம்பிக்கை மனதில் முளைக்கக்கேட்டாள்.

“நான் அந்த ஆச்சிகிட்ட பேசி பாக்கறேன் நங்க.. அவங்க சொன்னா கேக்கும்-ன்னு தான் நினைக்கறேன்.. அந்த அண்ணே ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து, அது அந்த அண்ணேகிட்ட பேசவே இல்லைன்னு கேள்வி பட்டேன். இப்போ உனக்காக பேச சொல்லலாம் .. ஒரு வார்த்தை சொன்னா போதும்ல .. கேட்டு பாக்கலாம்..”

“சரி பேசு வினி.. எனக்கு என்னமோ பயமா இருக்கு.. இவன் கிட்ட எல்லாம் ஒரு நிமிஷம் பேசினாலே நெஞ்சு வலி வந்துரும்.. வாழ்க்கை முழுக்க எல்லாம் என்னால நெனைச்சி கூட பாக்க முடியாது வினி.. “

“ஹாஹாஹா .. “

“எதுக்கு டி சிரிக்கற ?”, நங்கை கோபத்துடன் கேட்டாள்.

“இல்ல .. சப்போஸ் அந்த அண்ணே உன்னை கட்டி, இந்த லூசு உங்கள எப்டி பிரிக்கலாம்ன்னு ஐடியா கேட்டா நீயே போய் ஐடியா குடுப்ப-ல ? ஹாஹாஹா .. ஆனாலும் இந்த பொண்ணு பாவம்.. தப்பான நம்பிக்கை வச்சிட்டு இருக்கு.. ஸ்கூல் தான் முடிச்சி இருக்கும் போல”

“உன்ன கொன்றுவேன் வினி.. இன்னொரு தடவ அந்த வார்த்தைய சொல்லாத.. அதுக்கு நானே தூக்கு மாட்டிக்கலாம் .. அவன் ஒரு லூசு.. இந்தபொண்ணு ஒரு லூசு .. ரெண்டும் கட்டிக்கிட்டு எப்டியோ போகட்டும்.. என்னை வாழவிடுங்கடா”

“நங்க .. விடு கவலை படாத .. இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.. நல்லதே நடக்கும்-ன்னு நினை”, என வினிதா அப்பொழுதிற்கு அவளை சமாதானம் செய்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்றாள்.

இளவேணி நங்கையிடம் பேசிவிட்டு சென்றது சில நிமிடங்களில் வட்டியின் காதுகளுக்குச் சென்றது.

“அப்டியா ? எப்ப ?”

“**********************”

“சரி சரி .. அத நான் பாத்துக்கறேன்.. நீ வேலைய கவனி”, எனக் கூறி அழைப்பை வைத்துவிட்டு வர்மனுக்கு அழைத்தான்.

“சொல்லு மாப்ள “, வர்மன் தன் சூப்பர்மார்க்கெட்டில் இருந்து வேலையை கவனித்துக் கொண்டுக் கேட்டான்.

“மச்சான் .. அந்த சிங்காரி என் தங்கச்சி படிக்கற காலேஜ் போய் இருக்கா.. ”

“யாரு டா ?”

“அதான் உங்ககிட்ட நேத்து மல்லுக்கு நின்னாலே அவதான்.. “

“அங்கயா அவ படிக்கபோறா ?”

“அவ படிக்க போல .. உங்க வாழ்க்கைய கெடுக்கலாம்-ன்னு போய் இருக்கா .. “, என ஆரம்பித்து நங்கை இளவேணி இடையில் நடந்த சம்பாஷனைகளைக் கூறி முடித்தான்.

“இந்த அளவுக்கு வேலை பாக்கறாளா அவ ? அவ அப்பன தட்டுனா சரியா இருக்குமா ?”

“அவளுக்கு ஸ்கெட்ச் போட்டு குடுக்கறதே அவ அப்பன் தான்.. அதனால உங்க நடவடிக்கை எப்படி இருந்தாலும் அதுக்கு ஒரு ஸ்கெட்ச் வச்சி இருப்பான்.. “

“அப்ப அடுத்து நம்ம ஆச்சிய வச்சி அந்த ஆள ஊரவிட்டு வெரட்டிடலாம் ..”

“அதுக்கு வாய்ப்பு இல்ல.. அதுவும் அவன்கிட்ட சவால்விட்டு இருக்கு”

“சரி .. சீக்கிரம் முத்த நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் .. அதுக்கு ஏற்பாடு பண்ணு மாப்ள “

“ஏன் மச்சான்.. எனக்கு ஒரு சந்தேகம் .. அந்த பொண்ணு உங்கள வெறுத்துரிச்சின்னா என்ன பண்ணுவீங்க ?”

“நம்ம ஊர்ல பொம்பலைங்க விருப்பப்படி எத்தன நடக்குது ? விருப்பா அத மாத்திக்குவாங்க .. இவளும் அப்டியே பண்ணிக்கட்டும் “,, என கூறிவிட்டு ஏகாம்பரத்தை அடுத்த பிரச்சனைக் கொண்டு தாக்க தயார் ஆனான் சிம்மவர்மன்.

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க ..

 

முதல் அத்தியாயம் படிக்க.. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,999

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (384)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (164)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    563 shares
    Share 225 Tweet 141
  • 1 – அகரநதி

    506 shares
    Share 202 Tweet 126
  • 1 – அர்ஜுன நந்தன்

    484 shares
    Share 193 Tweet 121
  • 1 – வலுசாறு இடையினில் 

    456 shares
    Share 182 Tweet 114
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    400 shares
    Share 160 Tweet 100
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply