• About us
  • Contact us
Thursday, February 12, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

2 – வலுசாறு இடையினில்

March 16, 2024
Reading Time: 3 mins read
0
1 – வலுசாறு இடையினில் 

2 – வலுசாறு இடையினில்

 

“ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட கூடாது “, என மருதன் என்பவன், கரும்பு காட்டுக்கு மத்தியில் இருந்த பாதையில் முள்ளை போட்டு மேலே மண்ணை தூவிக் கொண்டு இருத்தனர் இருவரும்.

“டேய் கண்டிப்பா இந்த எடத்துல தான் செய்யணுமா ? கரும்பு காடு அவனுக்கு ரொம்ப வசதியா இருக்கும் டா .. வேற எடத்த பாக்கலாம் ல ?”, பாண்டி என்பவன் கேட்டான் .

“இதான் டா சரி .. இந்த இடம் தான் அவன அடிக்க முடியும் .. அவன் மட்டும் தான் கரும்ப வச்சி அடிப்பானா ? நம்ம அடிச்சாலும் கரும்பு அடிக்கும் “, மருதன் வன்மத்துடன் கூறினான் .

“எனக்கு என்னமோ சரியா படல மருது .. டேய் வண்டி சத்தம் வருது .. வா அந்த பக்கம் போய் மறைஞ்சிக்கலாம் .. “, என பாண்டி அங்கிருந்த டிராக்டர் பின்னால் சென்று ஒளிந்தான்.

புல்லட் வண்டியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் கேட்டது .. பாண்டி எதிர் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தான் .

“ஏய் .. யாருடா அவன் டிராக்டர் பக்கத்துல ? டயர கழட்ட வந்தீங்களா டா ?”, என கேட்டபடி பாண்டிக்கு பின்னால் வந்து நின்று கேட்டான் சிம்ம வர்மன் .

“அதுலாம் இல்லண்ணே .. சும்மா தான் நின்னுட்டு இருந்தோம் “, பாண்டி தயங்கி தயங்கி கூறினான் .

“ஏலேய் நீ அந்த மேலூர் கார பைய்யன் தானே ? உனக்கு இங்க என்ன வேலை ?”, கையில் இருந்த காப்பை மேலே ஏற்றிய படி அருகில் வந்தான் சிம்ம வர்மன்.

அந்த நேரம் மருது சூரியை எடுத்து சிம்ம வர்மனை நோக்கிப் பாய்ந்தான் .

பாண்டி பயந்து கத்தவும் , வர்மன் திரும்பும் சமயம் கத்தி அவன் கையில் லேசாக கீறி ரத்தம் வந்தது .

சிம்ம வர்மன் சிரித்தபடி, “ இதான் விஷயமா ? சம்பவம் பண்ண தான் காத்துட்டு இருந்தீங்களோ ? வெடலை பசங்க கூடலாம் நான் சண்டை போடறது இல்லை .. உன் ஊர்ல ஆம்பள எவனாது இருந்தா கூட்டிட்டு வாங்க டா “, என சிரித்தபடி மருதுவின் தாக்குதலில் இருந்து விளையாட்டு போலவே நகர்ந்துக் கொண்டு பேசினான் .

“உன்ன முடிக்க நானே போதும் டா “, மருது கோபத்துடன் பாய்ந்தான்.

“ஹாஹாஹா .. டேய் வெண்ணை .. மொதல்ல கத்திய ஒழுங்கா புடி டா .. “, வர்மன் அவன் கையை பிடித்து இழுத்துக் கத்தியை சரியாக பிடிக்கச் சொல்லி கொடுத்தான் .

அதன் பிறகும் கால் மணி நேரம் கழிந்தும், மருதுவால் வர்மன் அருகில் கூட நெருங்க முடியாமல் போக, பின் ஆவேஷம் கொண்டுத் தாக்க ஆரம்பித்தான் .

“வர்மா என்னடா நடு ரோட்ல சண்டை கத்து தர ஆரம்பிச்சிட்ட ?”, எனக் கேட்டபடி ஒருவர் அங்கே வந்தார்.

“மேலூர் பயலுக சம்பவம் பண்ணலாம்ன்னு வந்தானுங்க சித்தப்பு .. கத்திய கூட ஒழுங்கா பிடிக்க தெர்ல .. அதான் கத்து குடுத்துட்டு இருக்கேன் “, என பேசியபடி மருதுவின் கையை பிடித்து பின்னால் மடித்து , “ டேய் .. நீயெல்லாம் கொசு அளவுக்கு கூட பெறுமானம் இல்லாதவன் .. போ .. போய்ட்டு நல்லா சம்பவம் பண்ண கத்துகிட்டு வா .. “, என அவன் கை மணிக்கட்டை திருப்பினான் வர்மன் .

“வர்மா .. இவனுங்கள இப்படியே விடக்கூடாது .. உன் மேல கை வைக்க வர அளவுக்கு தைரியம் வந்துரிச்சி.. ஒரு பஞ்சாயத்த போற்றுவோம் யா “, வந்தவர் கூறினார் .

“அட என்ன சித்தப்பு நீங்க .. சின்ன பசங்களுக்காக பஞ்சாயத்துக்கு போனா நம்ம கௌரவம் என்ன ஆவறது ? நீங்க போங்க .. நான் ரெண்டு தட்டி அனுப்பிட்டு வீட்டுக்கு வரேன் .. சித்திய கோழி அடிச்சி நல்லா காரமா கொழம்பு வைக்க சொல்லுங்க .. “, என அவரிடம் கூறி அனுப்பினான் .

“சரி .. நான் வட்டி பயல அனுப்பி வைக்கறேன். சீக்கிரம் வா வர்மா .. “

“இங்க பாருங்க டா .. நேரா கூனி ஆச்சி வீட்டுக்கு போய் கைய நீவிட்டு வீட்டுக்கு போங்க .. “, எனக் கூறிவிட்டு வண்டியை எடுக்கச் சென்றான்.

“அண்ணே .. ஒரு நிமிஷம் “, என பாண்டி அவசரமாக வழியில் இருந்த முள்ளை எடுத்து ஓரமாக போட்டு விட்டு மருது அருகில் வந்து நின்றான் .

“இது வேறயா டா ? உங்க அப்பா பேரு சிவசாமி தாணு ?”, பாண்டியைப் பார்த்துக் கேட்டான் .

“ஆமாண்ணே .. “, பயந்தபடி மண்டையை ஆட்டி கூறினான் .

“வந்து என்னை தோப்புல பாரு “, என கூறி விட்டு மீசையை நீவி விட்டபடி வண்டியில் கிளம்பினான் .

வர்மன் தூரமாக சென்ற பின் தான் மருதுவின் வாயில் இருந்த துண்டை எடுத்தான் .

வர்மன் மருதுவின் கையை திருப்பும் போதே துண்டை அவன் வாயில் அடைத்து இருந்தான் பாண்டி .

“டேய் நாதாரி நாயே .. அவன அடிக்க உன்ன கூட்டிட்டு வந்தா, நீ அவன் என்னை அடிக்கறப்ப வாய பொத்தற .. அம்மா .. வலி உயிர் போகுது டா .. “, என பாண்டியை எட்டி மிதித்தான் மருது .

“கைய திருப்பனதோட விட்டாருன்னு சந்தோஷபடு டா .. வா கூனி ஆச்சி கிட்ட கூட்டிட்டு போறேன் .. “என பேசியபடி பாண்டி கைத்தாங்களாக அவனை அழைத்துக் கொண்டுச் சென்றான் .

“அவன சும்மா விடக்கூடாது டா .. “, மருது வலியில் சுணங்கியபடி கூறினான் .

“உங்க அண்ணன் பிரச்சனைக்கு நீ ஏன்டா உள்ள போற ? கம்முன்னு படிக்கற வேலைய மட்டும் நம்ம பாக்கலாம் .. “, பாண்டி அவனை ஒதுங்கி இருக்கும்படி கூறிய படி ஆச்சி வீடு அருகில் வந்து இருந்தனர் .

“அவன் என் அண்ணன்-அ அடிச்ச அடி அப்படி பாண்டி .. கால் ஊன ரெண்டு மாசம் ஆகும்-ன்னு சொல்லிட்டாங்க டா .. அவன் படர அவஸ்தைய பாக்க முடியல அதான் அவன் காலை உடைக்கணும்ன்னு வந்தேன் ..”

“அப்பறம் எதுக்கு டா சூரிய கொண்டு வந்த ?”

“ஒரு பாதுகாப்புக்கு தான் .. ஆனா அதை எப்டி பிடிக்கணுமின்னு அவனே சொல்லி குடுத்து அசிங்கபடுத்திட்டான் டா பாண்டி “, வலியை தாள முடியாமல் அவன் கூறியது பாண்டிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“எரும சாணி .. சிரிக்கவா செய்ற நீ ? “, என மீண்டும் அவனை எட்டி உதைத்தான் மருது.

“நீ சொன்னதும் சிரிப்பு வந்துரிச்சி மாப்ள .. அவர சம்பவம் பண்ண நம்ம சுத்து ஊர்ல ஒருத்தனுக்கு கூட தில்லு இல்லடா, அதுவும் அவரு ஊருல போய்.. நினைச்சி கூட பாக்க கூடாது .. அப்டி பட்ட ஆள நம்ம சின்ன பசங்க சுலபமா சம்பவம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறது முட்டாள் தனம் டா .. வந்து உக்காரு ஆச்சிய பாத்து கூட்டிட்டு வரேன் .. “, என வீட்டின் உள்ளே சென்றவன் கூன் விழுந்த ஒரு பாட்டியை வெளியே அழைத்து வந்தான் .

“யாரு டா .. வர்மன் கிட்ட அடி வாங்கிட்டு வந்தியோ ? பொச கேட்ட மண்டுங்களா இருக்கீங்களே டா .. இவன் கிட்ட அடி வாங்கிட்டு வாரவனுக்கு நீவி விட்டே என் முதுகு கூன் விழுந்து போச்சி “, என திட்டிய படி சூடு செய்து எண்ணையை மருதுவின் கையில் நீவி முன்னாள் திருப்பினார் ஆச்சி .

“ஏன் ஆச்சி எத்தன பேருக்கு அப்படி நீவி விட்டீங்கலாம் ? உமக்கு வயசாகி கூன் விழுந்ததுக்கு வர்மண்ணே என்ன பண்ணும் ?”, பாண்டி மருதுவின் பின்னால் நின்று கேட்டான் .

“வாரத்துக்கு இருபது பேரு வாரணுக டா பேராண்டி .. எல்லாத்தையும் திருப்பி விட்டுட்டு என்கிட்ட அனுப்பி வச்சிருவான் . பெண்ட் எடுக்கற சைக்கிள்கடையா நடத்தறேன் ? முறுக்கரவனுக்கு நேராக்க தெரியாத ?”, என சலித்தபடி ஆச்சி மருதுவிற்கு எண்ணையை இரண்டு நாள் நீவி கொள்ள கொடுத்து அனுப்பினார் .

“என்னத்தா ரொம்ப தான் சலிச்சிக்கற .. என் மச்சானால தானு உனக்கும் வியாபாரம் நடக்குது .. இல்லைனா இந்த அடி புடிச்ச எண்ணை வாங்க எவன் வருவான் ?”, என கேட்டபடி வட்டி என்கிற வைத்தியநாதன் அங்கே வந்தான் .

“போடா அரமண்டையா .. உன் நொண்ண போடற பிச்சை சோத்தையா நான் பொறுக்கி திங்கறேன் .. எவனையும் இங்க அனுப்பாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது ..”, ஆச்சி அவனிடம் சீறினார் .

“அடேங்கப்பா .. ஏன் ஆச்சி உன் புருஷன் கிட்ட கூட இப்படி தான் பொறி பறக்க பேசுவியோ ? அதான் மனுஷன் சின்ன வயசுலயே போய் சேந்துட்டாரு போல ”, என கேட்டுக்கொண்டு லுங்கியை அவிழ்த்து கட்டியபடி முன்னே வந்தான் .

“எடு சீவக்கட்டைய நாயே .. என் புருஷன பத்தி பேச இந்த சுத்து பத்து ஊருல ஒரு பயலுக்கும் அருகதை கிடையாது .. பொத்திக்கிட்டு போடா “, என ஒரு கட்டையை வட்டியை நோக்கி வீசியது .

“உன் புருஷன நீயே தான் கொன்னு இருப்பன்னு இப்பவும் ஊருக்குள்ள பேசறது சரி தான் போல .. பேசிக்கிட்டு இருக்கறப்போவே கட்டைய வீசுற ..”, வட்டி தாவி குதித்து தள்ளி நின்றான் .

படார் என்று கதைவை தள்ளி தாழிட்டு விட்டு உள்ளே சென்று விட்டார் ஆச்சி .

“இப்போவே இப்டி இருக்கு .. இன்னும் வயசுல இருந்து இருந்தா என்ன தூக்கி போட்டு இருக்கும் .. வட்டி உனக்கு இன்னிக்கி நல்ல நேரம் போல டா .. மர்டர் அட்டெம்ப்ட் ல இருந்து தப்பிச்சிட்ட “, எனச் சத்தமாக பேசியபடி திண்ணையில் இருந்த ஒரு கூடையை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான் .

அங்கிருந்து கிளம்பிய வர்மன் தன் மாந்தோப்பிற்குச் சென்றான் .

“டேய் வெளக்கெண்ண .. எந்த எடத்துல குடுசைய போட சொன்னா எங்க போடற ? வந்தேன் வகுந்து அங்கனயே உன்னைய்யும் பொத்தச்சிருவேன் .. பிரி டா .. அந்த பக்கம் போய் கட்டு டா “, வேட்டியை மடித்துக் கட்டியபடி நடந்தான் .

நிமிடத்திற்கு ஒரு முறை அந்த மீசையை நீவியபடி, காப்பை மேலே ஏற்றி சுற்றிலும் வேலை செய்பவர்களை பார்த்தபடி இருந்தான் .

“ஏண்டா சொம்ப .. இத வாங்கிட்டு வர உனக்கு இவ்ளோ நேரமா ? எங்கடா அடி வாங்கிட்டு வர ?”, என வட்டியைப் பார்த்துக் கேட்டான் .

“ஏன் மச்சான் பேசமாட்டா ? ஆமா நான் அடி வாங்குனது உனக்கு எப்புடி தெரியும் ? அந்த ஆச்சிக்கு எகத்தாளம் கூடிரிச்சு மச்சான் .. பேசிக்கிட்டு இருக்கறபோவே கட்டைய வீசுது “, என சுமந்து வந்த கூடையை வர்மா கூறிய இடத்தில் வைத்தான் .

“நீ என்ன அதுக்கிட்ட வம்பிலுத்த ?”, வர்மன் அந்த கூடையில் இருந்த எண்ணை ஜாடிகளை வைக்கபுல்லில் சாயாமல் வைத்து கொண்டே கேட்டான்.

“ஆமா அதுக்கு இப்ப தான் பதினாறு வயசு பாரு .. இழுக்கறாங்க வம்பு .. சரி அத விடு மச்சான் .. இந்த எண்ணைய என்ன பண்ண போறீங்க ?”

“வட்டி இதான் டா நான் நம்ம சூப்பர் மார்க்கெட்ல விக்க போற புது பொருள் .. நம்ம ஊருகாரவங்க பொருள நம்ம தான் விக்கணும் .. போய் நான் சொல்லி இருந்த அரிசி பருப்பு சரக்கு எல்லாம் எப்ப வருதுன்னு கேளு டா .. “

“ஓ .. சமுதாய சீர் திருத்தம் பண்ண போறீங்களா மச்சான் ? “

“வெங்காயம் .. பொத்திக்கிட்டு சொன்னத செய் டா வெண்ண”

“நீங்க ஊரு பெரிய தலைக்கட்டு .. சொன்னா கேட்டுக்கறேன் .. “

“டேய் .. “, என ஆள் காட்டிவிரலை நீட்டி அவனை மிரட்டி விட்டு, மற்ற வேலை ஆட்களை மிரட்ட சென்று விட்டான்.

“போங்க போங்க .. உங்கள மெரட்ட என் தங்கச்சி சீக்கிரமே வரும் .. அப்போ உங்கள பாத்து கை கொட்டி நான் சிரிக்கறேன் .. “

“கைய ஒடைச்சி மரத்துல காக்கா ஓட்ட கட்டிருவேன் டா .. என்னைய மெரட்ட எவளுக்கு டா தில்லு வரும் .. கொன்னுடுவேன் .. போய் சொன்ன வேலைய பாரு டா என் ”, என வந்து வட்டியை தலையில் அடித்து விட்டு வண்டி எடுக்க சென்றான் .

“மச்சான் .. தங்கச்சிய பாக்கவா போறீங்க ?”, வட்டி தலையை தேய்த்தபடி கேட்டான் .

“இப்டியே பேசிக்கிட்டு இரு .. வந்து உன்ன இந்த தோப்புக்கு ஒரம் ஆக்கிடறேன் “, என கண்ணாடியை போட்டு கொண்டு வண்டியை கிளப்பினான் சிம்ம வர்மன்.

அங்கே காலேஜில் நங்கை புன்னகை முகத்துடன் வினிதா இருக்குமிடம் சென்றாள் .

“ஹே வினி .. எனக்கு வேலை கெடச்சிரிச்சி டி .. “, எனக் கூறி சந்தோஷமாக அவளை பிடித்துச் சுற்றினாள் .

“சூப்பரு நங்க.. வா கேண்டீன் ல உனக்கு பிரியாணி வாங்கி தரேன் .. மொத மாச சம்பளத்த என்கிட்ட குடுத்துரு டி “, வினிதா அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

“உஷாரு தான் .. பத்து ரூவா பிரியாணி வாங்கி குடுத்துட்டு என்கிட்ட பத்தாயிரம் வாங்க பாக்கற .. “, என கூறியபடி இருவருக்கும் பிரியாணி வாங்கி கொண்டு , சாப்பிட்டு முடித்ததும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்தாள் நங்கை .

“சரி வேலை கெடைச்ச விஷயத்த வீட்ல சொல்றியா இல்லயா ?”

“சொன்னா அவ்வளவு தான் வினி.. வேலைக்கும் போகணும் . அப்போ தான் கொஞ்சமாது என் வாழ்க்கைய வாழ முடியும் . ஆனா என்ன பண்றது-ன்னு தான் தெர்ல.. “, நங்கை முகத்தில் வருத்தமும் கவலையும் நன்றாகவே தெரிந்தது .

“விடு நங்க .. இன்னும் 3 மாசம் இருக்கு .. பேசிக்கலாம் .. அதுக்குள்ள உன் அப்பா எவனையும் மாப்பிளையா கொண்டு வந்து நிறுத்த கூடாது-ன்னு சாமி கும்பிட்டுக்க “, என கூறவும் நங்கை அவளை அடித்தாள்.

நங்கையின் அப்பாவும் அம்மாவும் ஜோசியர் வீட்டிற்குச் சென்றனர் .

“வாங்க வாங்க ஏகாம்பரம் ஐயா .. வாங்க மா “, ஜோசியர் .

“ஜோசியரே .. பொண்ணுக்கு வரன் பாக்கலாம்ன்னு இருக்கேன் .. எப்படி பட்ட ஆளுங்கள பாக்கலாம் .. எப்போ கல்யாணம் முடியும்ன்னு சொல்லுங்க .. “, ஏகாம்பரம் வேண்டா வெறுப்பாக கேட்டார் .

“இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் முடிஞ்சிடும் ஐயா .. ஆனா .. “, என இழுத்தார் ஜோசியர்.

 

முந்தின அத்தியாயம் படிக்க…

அடுத்த அத்தியாயம் படிக்க ... 

Click to rate this post!
[Total: 2 Average: 5]
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,809

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (371)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (152)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (211)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    536 shares
    Share 214 Tweet 134
  • 1 – அகரநதி

    488 shares
    Share 194 Tweet 122
  • 1 – அர்ஜுன நந்தன்

    459 shares
    Share 183 Tweet 115
  • 1 – வலுசாறு இடையினில் 

    414 shares
    Share 165 Tweet 103
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    395 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply