20 – அகரநதி
மரகத கம்பளி போன்ற ஊரை விட்டுச் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில், நதியாள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடிக் கண்களில் ஒருவித ஏக்கத்துடன் பின்னால் பார்த்தபடி வந்தாள்.
“என்ன வண்டி சைலண்ட்ஆ வருது”, சரண் கூறியபடி பின்னால் திரும்பிப் பார்த்தான்.
நதியாள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு,”ஓய் யாள்….என்ன அமைதியாகிட்ட? ஊரை விட்டு வர மனசு இல்லையா?”, சரண்.
“ஆமா சரணா….. ரொம்ப வருஷம் கழிச்சி இந்த தடவை தான் ஊருல ரொம்ப சந்தோஷமா நிறைவா இருந்தேன். மறுபடியும் இந்தமாதிரி எப்ப இருக்கும்னு தெரியாதுல்ல”,நதியாள்.
“ஏன் நதிமா இப்படி சொல்ற? நம்ம ஊருக்கு எப்ப வந்தாலும் சந்தோஷம் தானா வந்துடும்ல. ஏன் எப்ப வருமோன்னு சொல்ற?”, அகரன் காரை ஓட்டிக்கொண்டே கேட்டான்.
“அப்படி இல்ல அகன். சந்தோஷம் வேற நிறைவு வேற.எப்பவும் சந்தோஷம் இருக்கும். இரண்டும் இந்த தடவை கிடச்சது தான் ஸ்பெஷல். நாம ஸ்கூல்ல படிச்சப்ப இருந்த சந்தோஷமும் , நிறைவும் உங்கள பாக்காத இத்தனை வருஷத்துல நான் அனுபவிச்சதா நியாபகம் இல்ல. அதே ஊரு அதே வீடு தான். ஆனா ஒவ்வொரு சமயமும் மனசுக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த தடவை ரொம்பவே ஹேப்பி. இனிமே நாம ஒன்னா தானே இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”, எனத் தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டுத் தன்னை உற்சாகம் படுத்திக்கொண்டாள் நதி.
“சரி. உனக்கு என்ன என்ன பிராஜெக்ட் டைடில் குடுத்து இருக்காங்க?”, அகரன்.
“அப்படி எதுவும் சொல்லல அகன். எந்த டைட்டிலா இருந்தாலும் கம்பெனில அலோவ் பண்ணா செஞ்சிகோங்கன்னு சொல்லிட்டாங்க. சோ யோசிச்சிட்டு இருக்கேன்”, நதியாள்.
“டேய் சரண்… நதிகிட்ட இன்டீரியர் அண்ட் எக்டீரியர் டிசைன் பண்ண சொல்லலாமா?”, அகரன்.
“ம்ம்…. அவ ஆல்ரெடி செஞ்ச டிசைன்ஸ் இருந்தா பாத்துட்டு பேசிக்கலாம் அகர். அதுவும் இல்லாம அவள இன்டீபென்டண்ட்ஆ ஓவர்ஆல் டிசைனிங் செய்ய வைக்கலாம்ல”, சரண்.
“ம்ம்….அதுவும் பண்ண வைக்கலாம். இந்த செம்ல இன்டர்ன்ஷிப் இருந்து இருக்குமே நதிமா. அது எங்க பண்ண?”, அகரன்.
“அப்படி எதுவும் பண்ணல அகன். பிரண்டுக்கு தெரிஞ்ச கம்பெனில செர்டிபிகேட் மட்டும் வாங்கி குடுத்துட்டோம்”, நதியாள்.
“இப்படி பண்ணா எப்படி நீ பீல்ட் பத்தி தெரிஞ்சிப்ப யாள்? அரியர்ஸ் வச்சாலும் பரவால்ல பட் நம்ம இன்டஸ்ட்ரில பீல்ட் வர்க் தான் ரொம்ப முக்கியம். இனிமே நம்ம கம்பெனில பிராஜெக்ட் பண்ணு. அடுத்து ஹையர்ஸ் எங்க போடலாம்னு இருக்க?”, சரண்.
“தெர்ல சரணா… பர்ஸ்ட் ஒரு வருஷம் வர்க் எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிட்டு தான் அப்ராட்ல போடணும். நீங்க அப்ராட்ல தானே செஞ்சீங்க எங்க பண்ணீங்க இரண்டு பேரும்?”, நதியாள்.
“அப்படின்னா த்ரீ இயர்ஸ் வர்க் பண்ணிட்டு பேரிஸ்ல இருக்க காலேஜ்ல ஹையர்ஸ் போடலாம். இல்லைன்னா லண்டன் ஆர் யூஎஸ்ல போடலாம். எல்லாமே பெஸ்ட் காலேஜ் ஆர்கிடெட்க்கு”, அகரன்.
“அப்ப மூனு வருஷம் உங்க கம்பெனிலயே வர்க் பண்ணிகலாமா?”, நதியாள் ஆர்வத்துடன் கேட்டாள்.
“இந்த மூனு வருஷம் மட்டுமில்ல யாள் நீ படிச்சிட்டும் நம்ம கம்பெனில வர்க் பண்ணணும். பாண்ட் சைன் பண்ணிட்டு தான் உன்ன சேத்துக்குவோம்”, சரண்.
“பாண்ட் லாம் நான் சைன் பண்ணமாட்டேன் போடா”, நதியாள்.
“அது அப்ப பாத்துக்கலாம். நீ செம் முன்னாடி எனக்கு உன்னோட டிசைன்ஸ் எல்லாம் அனுப்பு. அத பாத்துட்டு தான் உனக்கு என்ன பிராஜெக்ட் குடுக்கறதுன்னு டிசைட் பண்ண முடியும். நம்மலோடது இப்ப தான் வளர்ந்துட்டு இருக்கற கம்பெனி சோ நீ நிறைய கத்துக்கலாம் நதிமா. அட் த சேம் டைம் உன்னோட ஐடியாஸ்யும் டைரக்ட்டா எங்ககிட்ட சொல்லலாம். பட் ஆபீஸ்ல அந்த ஹையர்ஆர்கி படிதான் நடந்துக்கணும். சரணையும் மரியாதையா தான் கூப்பிடணும்”, அகரன்.
“அது மட்டும் தான் ரொம்ப கஷ்டம் அகன். உங்க இரண்டு பேரையும் நான் மரியாதையா கூப்பிட்டா யாரோ மாதிரி பீல் ஆகுமே”, நதியாள் முகத்தைச் சுருக்கிக் கூறினாள்.
“ஆபீஸ்ல கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கணும் நதிமா. நீ பிராஜெக்ட் ஸ்டூடண்ட்ஆ தான் உள்ள வரப்போற, சோ இதுலாம் மன்டேடரி யூ நோ”, அகரன் அவளுக்குப் புரியும்படிக் கூறினான்.
“ஓகே அகன். என் பிரண்டஸ்யும் வரலாம்ல?”, நதியாள்.
“மேக்ஸிமம் பத்து பேர் தான் அலோவ் பண்ண முடியும் நதிமா. அத நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க”, அகரன்.
“அது போதும் அகன் நாங்க பேசி அரேஞ்ச் பண்ணிக்கறோம்”, நதியாள்.
இப்படி வளவளத்தபடியே மூவரும் ஊரிற்குள் வந்துச் சேர்ந்தனர்.
“நதிமா… லன்ச் சாப்டுட்டு போலாமா?”, அகரன்.
“இல்ல அகன். நான் ரூம் போய் பிரண்ட்ஸ் கூட சாப்டுக்கறேன். எல்லாரும் இந்த கருவாட்டு குழம்புக்காக வையிட் பண்ணிட்டு இருப்பாங்க. நானும் அவங்கள எல்லாம் பாத்து ஒரு வாரம் ஆச்சி. கைன்டா மிஸ்ஸிங் தெம்”,நதியாள்.
“சரி. இவள டிராப் பண்ணிட்டு நாம சாப்டுட்டு வீட்டுக்கு போலாம்”, சரண்.
“சரி. எந்த பக்கம் போகணும் நதிமா?”, அகரன்.
நதியாள் வழி கூற அவளின் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.
“இத பாத்தா காலேஜ் ஹாஸ்டல் மாதிரி இல்லையே நதிமா”, அகரன் சந்தேகமாக அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டுக் கேட்டான்.
“இது இனிமே நாங்க தங்கப்போற வீடு அகன். பிராஜெக்ட் டைம்ல ஹாஸ்டல் செட் ஆகாதுன்னு வீடு எடுத்துட்டோம். வாங்க வாங்க கேட் ஓபன் பண்ணிட்டாங்க”, நதியாள் காரில் இருந்துக் குதித்தபடி அந்த காம்பவுண்டிற்குள் ஓடினாள்.
“மச்சா….. என்னடா இது? நாம படிக்கறப்ப ஒரு ரூம் தான் எடுத்து தங்கி படிச்சோம். இவங்க ஒரு பங்களாவ எடுத்து தங்கறாங்க…. என்னடா நடக்குது?”, சரண்.
“வா. உள்ள போய் பாக்கலாம். கண்டிப்பா இந்த வீட்டுக்கு வாடகை குடுத்து தங்க முடியாது. யாராவது தெரிஞ்சவங்க வீடா இருக்கணும். அப்படியே இவங்களுக்கு செக்யூரிட்டி அரேஞ் பண்ணணும்”, அகரன்.
இவங்க இவ்வளவு பீல் பண்ணி பேசற அளவுக்கு வீடு எப்படி இருக்குன்னு நாமலும் பாக்கலாம் வாங்க….
அந்த தெருவில் இருந்தவை அனைத்துமே பங்களா டைப் வீடுகள் தான். பணத்தில் குளிப்பவர்கள் தான் இந்த ஏரியாவில் சென்னையில் இடம் வாங்கி இப்படி வீடு கட்டமுடியும்.
இவர்கள் வீடு அந்த தெருவின் கடைசி இரண்டு வீடுகளுக்கு முன்னால் இருந்தது. அந்த வீடு முடிந்த சிறிது தூரத்தில் கடல். மதிய நேரமென்பதால் வெப்பம் அதிகமாகவே இருந்தது.
நதியாள் தங்கியிருக்கும் வீடு முன்பக்கம் தோட்டம் பின்பக்கம் நீச்சல் குளம் என ஓரளவு விஸ்தீரனமாகவே இருந்தது.
பிரம்மாண்டம் எனக் கூற முடியாத, சற்றும் வசதி குறைவில்லாத வீடு தான். கேட்டில் ஒரு செக்யூரிட்டி, தோட்ட வேலை செய்பவர்கள், வீட்டு வேலையாட்கள் என ஐந்து பேர் இருந்தனர்.
“ஹேய் மீரா…..”,என நதியாள் ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“யாள் குரங்கே”, என மீராவும் கட்டிக்கொண்டாள்.
“ம்க்கும்… நாங்களும் இங்க தான் இருக்கோம்”, என ஸ்டெல்லா சற்றே புகைச்சலுடன் கூறினாள்.
“ஹாய் ஸ்டெல்…. ஐ மிஸ்டு யூ டூ “, என அவளையும் கட்டிப்பிடித்து சமாதானம் செய்தாள் நதி.
“போதும் போதும் கொஞ்சம் இந்த பக்கம் பாக்கறது”, என சஞ்சயும் திலீப்பும் வந்து நின்றனர்.
“ஹாய் மச்சீஸ்…. நான் இல்லாம செம ஃபன்னா?”,நதியாள் இருவரின் கைகளையும் தட்டிக் கேட்டாள்.
“எங்க? நீ இல்லாம இந்த காட்டேரி எங்கள படாதபாடு படுத்திட்டா யாள்”,என திலீப் ஸ்டெல்லாவை கூற,” அவன் என்ன பண்ணான்னு முதல்ல கேளு யாள்”, ஸ்டெல்லா கேட்டுக்கொண்டே முன்வந்தாள்.
“வந்ததும் உங்க பஞ்சாயத்த ஆரம்பிக்காதீங்க டா. அவ பர்ஸ்ட் போய் குளிச்சிட்டு வரட்டும்”, மீரா.
“அதுல்லாம் முடியாது. நியாத்த சொல்லிட்டு குளிக்கட்டும்”, திலீப்.
“நான் சொல்றத கேளு யாள்”, ஸ்டெல்லா.
“இல்லா நான் சொல்றத முதல்ல கேளு யாள்”, திலீப்.
“நான் தான் சொல்வேன்…”, ஸ்டெல்லா நதியின் கையைப் பற்றி தன் பக்கம் இழுக்க ,”இல்ல நான் தான்”, என திலீப் அவன் பக்கம் இழுத்தான்.
இருவரும் அவளை இழுத்துச் சண்டைப் போடுவதை சரணும் அகரனும் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்.
“டேய் டேய்…. என் தங்கச்சிய என்னடா பண்றீங்க? விடுடா… இந்தாம்மா நகரு. அவ கைய விடு முதல்ல”, என சரண் உள்ளே புகுந்து நதியாளை தன் பக்கம் இழுத்தான்.
“டேய் எல்லாரும் சேர்ந்து என்னை ஏன்டா பிச்சி எடுக்கறீங்க? விடுங்கடா எருமைங்களா”, நதியாள் ஒரு பக்கம் கத்தினாள்.
அத்தனை நேரம் அமைதி பூங்காவாக காட்சியளித்த வீடு இப்பொழுது களேபரமாக மாறி இருந்தது.
“ஹேய்…. நீங்க எப்படி இங்க? ஹேய் யாள்… யாரு இவங்க?”,மீரா ஒரு பக்கம் நதியை இழுத்துக் கேட்டாள்.
“முதல்ல இந்த இரண்டு பிசாசுங்களையும் பிடிச்சு இழு டி. என்னை உயிரோட பிச்சிடுங்க போல. டேய் சஞ்சய் பொம்மை மாதிரி நிக்கற இவன இழு டா அந்த பக்கம்”, நதியாள் கத்தினாள்.
மீரா ஸ்டெல்லாவையும் , சஞ்சய் திலீப்பையும் இழுக்க சரண் நதியாளை இழுக்கவென ஆறு பேரும் சுற்றி சுற்றி வருவதைக் கண்டு அகரன் புன்னகையுடன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்த சமயம் மாடியிலிருந்து ஒருவன் கீழே வந்தான். கூடவே ரிஸ்வானாவும் உடன் வந்தாள்.
“வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்? ஸ்டாப் பிளேயிங்”, என அவன் சத்தம் போட்டான்.
அவன் போட்ட சத்தத்தில் அனைவரும் கப்சிப்பாகினர்.
“ஹாய் நதியாள் ….எப்ப வந்தீங்க? வெல்கம் டு யுவர் நியூ ஹோம்”, எனக் கைகுழுக்கி வரவேற்றான்.
“ஹாய் பையா….. எப்படி இருக்கீங்க? நீங்க அடுத்த வாரம் தான் வரதா ரிஸ் சொன்னா. என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க. உங்க ரிஸ்அ பாக்காம இருக்க முடியலியா?”, நதியாள் அவனின் தோளில் தட்டியபடிக் கேட்டாள்.
“வேலை முடிஞ்சது அதான் கிளம்பி வந்துட்டேன். இந்த வாரம் வந்ததால தானே உங்களுக்கு இந்த வீடு அரேஞ்ச் பண்ண முடிஞ்சது. வீடு பிடிச்சி இருக்கா நதியாள்?”, அவன்.
“வெளியே இருந்து பாத்தேன் பையா. ஐ லவ் இட். பக்கத்துல கடல் முன்னாடி கார்டன் பின்னாடி ஸ்விம்மிங் பூல். இதுக்கு மேல என்ன வேணும்?”, நதியாள்.
அருகில் நின்ற சரணை பார்த்தவன்,” இவங்க?”, எனச் சரணையும் அகரனையும் கேட்டான்.
“ஹோ… சாரி பையா..இந்த பிசாசுங்க பண்ண இம்சைல இவங்கள இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன்”, நதியாள்.
“இவர் என்னோட அண்ணன் மிஸ்டர். சரண். அவர் மிஸ்டர். அகரன் என் கஸின். அகரன் ஆர்கிடெக் ஓனர்ஸ்”, என இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் நதி.
“ஹலோ மிஸ்டர் அகரன் அண்ட் சரண். உங்களப்பத்தி கேள்வி பட்டு இருக்கேன். நான் அப்துல் ரஹீம். ரஹீம் குரூப் ஆப் கம்பெனிஸ் எம்.டி”, என அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“ஹலோ மிஸ்டர் ரஹீம்”,அகரனும் சரணும் கைகுழுக்கிக் கொண்டனர்.
“ஹேய் யாள். இவன் கூட தானே அன்னிக்கு சண்டை போட்ட. இப்ப அண்ணன்னு சொல்ற. என்ன நடக்குது?”, ஸ்டெல்லா நதியின் காதைக் கடித்தாள்.
“நான் சொல்வேன்ல சரணா அகன்னு. ஸ்கூல்ல கூட அவங்க கூடவே இருப்பேன்னு மீரா சொல்வாளே. அவங்க தான் இது. ஊருக்கு போனப்ப தான் எனக்கே தெரிஞ்சது. இத்தனை வருஷம் பாக்காததுனால அடையாளம் தெரியல”, நதியாள்.
“ஓஓஓஓ……அவங்களா…. “, என மீராவும் ஸ்டெல்லாவும் கோரசாய் கூறினர்.
“போதும் வாய மூடுங்க. பையா எப்ப வந்தாரு? யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல. அவர் முன்னாடி இத்தனை அலப்பறை பண்ணா நம்மல நம்பி வீட்ட எப்படி விடுவாரு?”, நதியாள்.
“அதுல்லாம் ரிஸ் கேட்டதும் குடுத்துட்டாரு. இந்த வீடு அவங்க கெஸ்ட் ஹவுஸாம். நாம எத்தனை நாள் வேணா இருந்துக்கலாம். ரிஸ் அப்பப்ப இங்க தங்குவா. மத்தபடி நாம மூனு பேரு அந்த இரண்டு வானரமும் தான் இங்க. வீட்டு வேலைக்கு ஆளுங்களும் இருக்காங்க. இங்க ஆறு ரூம் இருக்கு. நம்ம மூனு பேருக்கும் மேல. இவனுங்களுக்கு கீழ. எல்லாம் செட் பண்ணியாச்சி. ஹாஸ்டல்ல போய் லெட்டர் குடுத்தா வேலை முடிஞ்சது. வீட்ல சொல்லியாச்சி. என் அப்பா அம்மா நாளைக்கு வராங்க”, ஸ்டெல்லா.
“கொஞ்சம் மூச்சு விடு டி. அதையும் குடுத்து இருக்க வேண்டியது தானே?”, நதியாள்.
“ஆமா அதுவும் நாங்க பண்ணிட்டா உனக்கு வேலை இல்லைல. மகாராணி வந்து ஜாலியா ரூம்ல தலையணைய கட்டிபிடிச்சிட்டு தூங்குவ. ஆல்ரெடி வார்டன் கிட்ட பேசி லெட்டர் குடுக்காம திங்க்ஸ்ஆ தூக்கிட்டு வரதுக்குள்ளவே போதும் போதும்னு ஆகிரிச்சி. லெட்டர் எழுதி வார்டன் கிட்ட சைன் வாங்கிட்டு பிரின்ஸி கிட்ட சைன் வாங்கிட்டு வந்தா தான் அங்க இருக்கற மிச்ச மீதி பொருள தூக்கிட்டு வர முடியும்”, ஸ்டெல்லா.
“சரி விடு. என் அப்பா இரண்டு நாள்ல வராங்க. அவர வச்சி எல்லாம் முடிச்சிக்கலாம். நீ நாளைக்கி முடிச்சிக்க. எக்ஸாம் அடுத்த வாரம் தானே. அதுக்குள்ள ஹாஸ்டல் வேலைய முடிச்சிக்கலாம்”, நதியாள்.
“சரி. மீரா உங்க வீட்ல வராங்களா இல்லையா?”, ஸ்டெல்லா.
“தெர்ல ஸ்டெல். இவங்க அப்பா தானே எனக்கும் கார்டியன் சோ அவர் மட்டும் தான் வருவாரு. அம்மா வயல விட்டு இப்ப வரமுடியாது”, மீரா.
“சரி விடு பாத்துக்கலாம். அப்பாக்கு எப்ப திதி?”, நதியாள்.
“நம்ம செம் முடிஞ்சி தான் வருது”, எனக் கூறி மீரா அமைதியாகிவிட்டாள். அவள் முகத்தில் தாளமுடியாத வலி தெரிய, சிரமப்பட்டுத் தன் முகத்தை சரி செய்துக் கொண்டாள்.
நம் மீராவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்துவிட்டார். பின் நதியாள் தன் அப்பாவை வைத்து மீராவின் குடும்பத்தை ஒழுங்குபடுத்தி கொடுத்துவிட்டு, அவளின் அம்மாவிடம் வயல் தோட்ட பொறுப்புகளை கொடுத்துவிடச் செய்தாள். அவருடன் மீராவின் அம்மாச்சி இருக்கிறார். வேறு துணை யாரும் இல்லை. அதனால் மீராவின் படிப்பு விசயம் மட்டுமின்றி வேறு ஏதேனும் உதவி என்றாலும் நதியாளின் தந்தை கண்ணன் தான் செய்வார். அவர்களுக்கு வேலை செய்ய மற்றும் பாதுகாப்பிற்கு தன் பண்ணையில் பல வருடமாக விசுவாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தை அங்கே குடியமர்த்தி உதவும்படி செய்தார்.
கண்ணன் மற்றும் ராதாவை பொறுத்தவரையில் மீராவும் தங்கள் மகள் தான். அதனால் எந்த வேறுபாடும் காட்டாமல் அவர்கள் கேட்காமலேயே அனைத்தும் செய்துக் கொடுத்தனர்.
“ஹேய்…நம்ம பிராஜெக்ட் இவங்க கம்பெனிலயே செஞ்சிகலாமா?”, சஞ்சய்.
“கேட்டு இருக்கேன். நம்ம டிசைன் மத்த விஷயமெல்லாம் பாத்துட்டு சொல்றதா சொல்லி இருக்காங்க சஞ்சய்”, நதியாள்.
“மூனு பேரும் பிஸ்னஸ் மேன் எதேதோ பேசிட்டு இருக்காங்க. எனக்கு பசிக்குது போய் சாப்பிடலாமா?”, திலீப் நடுவில் வந்து சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்டான்.
“உன்னை எல்லாம்….”, நதியாளும் ஸ்டெல்லாவும் அவன் முதுகில் பலமாக அடித்தனர்.
“அய்யோ…அம்மா….காப்பாத்துங்க”, என திலீப் கத்தினான்.
“என்னாச்சி காய்ஸ்?”, ரஹீம்.
“ஒன்னுமில்ல பையா. நான் உங்களுக்கு சாப்பிட எதாவது ஏற்பாடு பண்றேன்”, ஸ்டெல்லா.
“இல்லம்மா…எதுவும் வேண்டாம். ரிஸ் வீட்ல சாப்பாடு சொல்லிட்டாங்க. அப்படியே நிக்கா சாப்பிங் பத்தி பேசி முடிவு பண்ணணும்”, ரஹீம்.
“ஓஓஓ….. அப்ப எங்களுக்கு பிரியாணி?”, ஸ்டெல்லா.
“வரும் டி. அம்மா ரெடி பண்ணதும் குடுத்து அனுப்புவாங்க. மானத்த வாங்காதீங்க அவர் முன்னாடி”, அத்தனை நேரம் அமைதியாக இருந்த ரிஸ்வானா ஸ்டெல்லாவை அதட்டினாள்.
“பார்ரா…. மேடம் அவங்க ஹஸ்பண்ட் கிட்ட கேட்டா அவருக்கு முன்ன நீங்க பதில் குடுக்கறீங்க. ம்ம்… நல்லா இருந்தா சரி… சீக்கிரம் சாப்பாடு அனுப்பி வை. கிளம்பு”, ஸ்டெல்லா.
ரிஸ்வானா தலையில் அடித்துக்கொண்டு ரஹீம் அருகில் சென்றாள்.
“வாப்பா கால் பண்ணிட்டே இருக்காங்க நாம கிளம்பலாமா. நேரம் ஆச்சி”, ரிஸ்வானா.
“இதோ கிளம்பலாம். ஓகே சரண் அகரன். கண்டிப்பா இன்னொரு நாள் மீட் பண்ணலாம். நீங்க இருங்க சாப்பிட்டு தான் கிளம்பணும்”, ரஹீம்.
“இவங்க?”, என சரண் ரிஸ்வானாவைக் காட்டிக் கேட்டான்.
“இவங்க ரிஸ்வானா பேகம் என்னோட வருங்கால மனைவி. அடுத்த மாசம் கல்யாணம். கண்டிப்பா நீங்க வரணும். வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ணுவேன்”, ரஹீம்.
“கன்கிராட்ஸ் ரஹீம். கண்டிப்பா வருவோம்”, அகரன் வாழ்த்துக் கூறி கைக் குழுக்கினான்.
சரணின் நிலை தான் நமக்கு தெரியுமே….
“இதுவும் போச்சா?”,என ரிஸ்வானாவையும் ரஹீமையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அகரன் அவனின் தோளில் தட்டவும் தன்னைச் சமாளித்து, அவர்களுக்கு வாழ்த்து கூறினான் சரண்.
“சரி நாங்க கிளம்பறோம். நைஸ் மீட்டிங் யூ போத். நதியாள் நாங்க கிளம்பறோம். லன்ச் உங்களுக்கு இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். எதாவது தேவைபட்டா எனக்கே கால் பண்ணு. ரிஸ் வாய தொறந்து சொல்லமாட்டா. அப்பறம் மீட் பண்ணலாம்”, என அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று கிளம்பினர் ரிஸ்வானாவும் ரஹீமும்.
“அகன்…. சரணா….இவங்க தான் என் பிரண்ட்ஸ்….இது மீரா…உனக்கு நியாபகம் இருக்கா?”,நதியாள்.
“இன்னும் அந்த பொண்ணு உன்கூட தான் இருக்கா? பாவம் ரொம்ப அமைதியான பொண்ணு. எப்படிம்மா இன்னும் இவகூட இருக்க?”, சரண்.
“டேய் சரணா……”, நதியாள் பல்லைக் கடித்தாள்.
“சரி சரி. சண்டை போடாதீங்க. மீரா எப்படிடா இருக்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”, அகரன் அக்கறையுடன் விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்க அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்?”, மீரா.
“நல்லா இருக்கோம்மா…”, அகரன்.
“இது ஸ்டெல்லா….. அவன் சஞ்சய் இது திலீப்”, என அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் நதி.
“ஹாய் ….”, என அனைவரிடமும் கைக்குழுக்கிக் கொண்டனர் சரணும் அகரனும்.
“வாங்க பாஸ் உள்ள போலாம்”, என சஞ்சய் உள்ளே அழைத்தான்.
“அப்ப இது உள்ள இல்லையா?”, சரண்.
“இல்ல இது ரிசப்சன்”, ஸ்டெல்லா வெடுக்கென்று கூறி உள்ளே சென்றாள்.
“உன்கூட இருக்கற எல்லாமே இப்படி தான் இருக்குமா யாள்?”, சரண்.
“அவ என்னவிட ஒருபடி மேல டா சரணா. சோ வாய அடக்கி வாசி”, நதியாள்.
“யாருமே பொண்ணுங்க இல்ல மொத்தத்துல”, சரண்.
“மூடு. உக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துடும் சாப்டப்பறம் நீங்க கிளம்பலாம். அகன் முக்கியமான வேலை எதாவது இருக்கா? இங்க கொஞ்ச நேரம் இருக்கலாம் தானே”, நதியாள்.
“நோ பிராப்ளம் நதிமா. ரெஸ்ட்ரூம் எங்க இருக்கு? கொஞ்சம் பிரஸ் ஆகணும்”, அகரன்.
சஞ்சய் அகரனையும் சரணையும் அழைத்துச்சென்றான். நதியாள் தன்னறைக்கு சென்று முகம் கழுவி வேறு உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.
“காலேஜ்ல எதாவது ஸ்பெஷலா இந்த ஒரு வாரத்துல?”, நதியாள் கேட்டபடி மீராவின் மடியில் படுத்துக்கொண்டாள்.
“இல்ல யாள். நீ இல்லாம செம போர். பேசாம நாங்களும் உன்கூடவே வந்து இருக்கலாம்னு இருந்தது”, ஸ்டெல்லா.
“கிளம்பி வர வேண்டியது தானே? செமையா இருந்தது திருவிழா. ஐ ஹேவ் நெவர் பீன் டிட் தீஸ் திங்ஸ் யெட் மீரா. இட் வாஸ் எ பிக் ரெஸ்பான்ஸிபிலிட்டி”, எனத் திருவிழா பற்றிக் கூறிக்கொண்டு இருந்தாள் நதி.
சஞ்சயிடம் சரண்,”எப்படி சஞ்சய் இத்தனை பொண்ணுங்கள சமாளிக்கறீங்க?”, எனக் கேட்டான்.
“ஹாஹா… நான் சமாளிக்கல சார். நதியாள் தான் சமாளிக்கறா. நாங்க ஆறு பேரும் கேங் பட் காலேஜ் புல்லா அவளுக்கு பிரண்ட்ஸ் இருக்காங்க. ஷீ ஸ் ஸ்பெஷல் பார் அஸ்”, சஞ்சய்.
“அப்படி இல்லைன்னா தான் அதிசயம். இவ வாய் பேசறதுக்கு ஊருக்கே அவள தெரிஞ்சி இருக்கும். காலேஜ்ல தெரிஞ்சி இருக்கறது பெரிய விஷயம் இல்ல”, சரண்.
“நீங்க யாளோட அண்ணன்னு சொன்னா பட் அன்னிக்கு சண்டை போட்டீங்க யாருன்னு தெரியாத மாதிரி”, சஞ்சய்.
“நாங்க பாத்தது அவ பத்து வயசு பொண்ணா இருந்தப்ப. அதுக்கப்பறம் நாங்க படிக்க வெளியூர் போயிட்டோம். அவளும் ஹாஸ்டல் ஜாயின் பண்ணிட்டா சோ வி டிண்ட் மீட் ஈச் அதர் பார் லாங் டைம்”, அகரன்.
“ஹோ….”, சஞ்சய்.
பின் அனைவரும் சாப்பாடு வந்ததும் சாப்பிட்டுவிட்டு, சரோஜாதேவி பாட்டி கொடுத்த கருவாட்டு குழம்பும் அனைவருக்கும் பரிமாறிக்கொண்டு, பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.
அகரன் நதியாளை கண்களால் தொடர்ந்தபடியே இருந்ததை ஸ்டெல்லாவும் சஞ்சஜையும் கவனித்தனர்.
அகரனின் மனதில் இந்த ஒரு வாரம் நடந்த அனைத்தும் ஆழமாக பதிவாகி இருந்தது. இன்றும் நதியாள் தன் நண்பர்களைக் கண்டது முதல் அவளின் நடவடிக்கை முகபாவம் என அனைத்தும் தன்னுள் பதுக்கி வைத்துக்கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அகரனும் சரணும் தங்களின் இல்ல முகவரி போன் நம்பர் கொடுத்துவிட்டு, அங்கிருந்த செக்யூரிட்டியிடம் கூறிவிட்டு அவரின் நம்பரும் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி தங்களின் இல்லம் வந்து சேர்ந்தனர்.
வீடு வந்த அகரன் தன் மனதில் பதிந்த நினைவுகளை இதமாக நினைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். நதியாளுடன் இந்த ஒரு வாரம் அவன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அமைந்து இருந்தது. அவளின் அருகாமையில், அவளின் நெருக்கத்தில், அவளின் அக்கறையில், விளையாட்டில் , அவளின் கோபத்தில், என மொத்தமாக அவளை தன்னுள் நிறைத்துக் கொண்டான்.
இந்த இதமான இம்சையும் மேலும் இனித்தது அவளை நினைக்க நினைக்க. மேலும் வாழ்நாள் முழுவதும் அவள் தன்னுடன் இருந்தால் , இந்த எண்ணமே அவனை மேலும் பொலிவுற வைத்து சந்தோஷத்தை முகத்தில் பிரதிபலித்தது.
நதியாளிடம் தன் காதலைக் கூற வேண்டும்.. அவளுக்கு தன் மேல் உள்ள காதலை உணர்த்த வேண்டும்….. இப்படி பலவாறாக யோசித்தவன் நதியாளும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை தன் மொபைல் வால் பேப்பர் மற்றும் லாக் ஸ்க்ரீனாக வைத்தான்.
அவளை மொபைலில் பார்த்தபடியே உறங்கியவன் கனவிலும் நதியாளே வந்து மேலும் அவனைத் திணறடித்தாள்.
இதமான இம்சையாகிப் போனாள் அவனின் நதி அவனுள் உயிர்நதியாக…..