• About us
  • Contact us
Wednesday, April 22, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

20 – வலுசாறு இடையினில்

March 16, 2024
Reading Time: 1 min read
0
1 – வலுசாறு இடையினில் 

20 – வலுசாறு இடையினில்

 

“ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.

“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார்.

“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் நாள் கல்யாணம். நேரம் மட்டும் நீங்க குறிச்சி குடுங்க”, எனச் சிரித்தபடிக் கேட்டார்.

“என்னம்மா சொல்றீங்க? நாளு நட்சத்திரம் எல்லாம் பாத்து தானே சொல்ல முடியும். நேத்து இரத்தினம் ஒரு முகூர்த்தம் குறிச்சிட்டு போனாரே .. அது யாருக்கு?”, எனக் குழப்பத்துடன் கேட்டார்.

“யாரோ யாருக்கோ குறிச்சிட்டு போனத பத்தி இப்போ ஏன் பேசணும்? என் பேரனுக்கு இப்போ பாருங்க. நேரம் கம்மியா இருக்கு. நான் இனிமே தான் தாலி செய்ய சொல்ல போகணும்.. “, என அவரை வேறு எதுவும் பேச விடாமல் அவசரப்படுத்தினார்.

“இருங்க மா.. பாத்துடறேன்.. ஏகாம்பரம் ஒரு வார்த்தை சொல்லல பாருங்க .. அவரு பொண்ணுக்கு நானும் தான் வரன் தேடிட்டு இருக்கேன்”, என மீண்டும் அதே புரணத்தைப் பாட ஆரம்பித்தார்.

“ஜோசியரே.. அவரு கல்யாண வேலைல பிசி.. அதான் நாங்க வந்துட்டோம்ல .. நீங்க சீக்கிரம் முகூர்த்தம் பாருங்க”, என வட்டி ஒரு பக்கம் பேசினான்.

“ரெண்டு ஜாதாகமும் அம்சமா பொருந்தி இருக்கு.. காலைல பத்து மணிக்கு மேல நேரம் நல்லா இருக்கு மா.. எங்க கல்யாணம் வச்சி இருக்கீங்க?”, என நேரத்தைக் கூறிவிட்டுக் கேட்டார்.

“நம்ம கோவில்ல தான். மறக்காம வந்துடுங்க ..  பந்தல் போட்டு பெருசா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கோம் … நாங்க விருந்துக்கு தான் எல்லாரையும் கூப்பிட போறோம்.. அப்போ வந்து மொறையா அழைக்கறேன் ஜோசியரே .. “, எனக் கூறிவிட்டுத் தட்சணையை அள்ளிக் கொடுத்துவிட்டுச் சென்றார் ஆச்சி.

“ஏன் ஆச்சி அந்த ஆள நீ பாட்டுக்கு கல்யாணத்துக்கு வா-ன்னு சொல்லிட்டு வர.. நமக்கே கல்யாணம் எங்க எப்டி நடக்கும்னு தெரியாது.. இதுல இந்த நேரம் பாக்கறது  எல்லாம் தேவையா?”, என வட்டி கேட்டான்.

“எல்லாமே நேரம் காலம் பாத்து தான் டா நடக்கணும். நான் சொல்ற நேரத்துல பொண்ண கொண்டு வந்து மணமேடைல உக்கார வைக்க வேண்டியது உங்க வேலை.. நம்ம வீட்டு பொண்ண ரொம்ப தவிக்க விடக்கூடாது.. “, என ஆச்சி கூறிவிட்டு நகைக்கடைக்குச் சென்றார்.

“ம்க்கும் .. நீயும் உன் பேரனும் பண்ற அழிச்சாட்டியம் இருக்கு பாரு.. அந்த ராஜதுரை பையன் என்ன ஆக போறானோ? “, என அவனை நினைத்துக் கவலைக் கொண்டான் வட்டி.

“எந்திரிச்சே நிக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு டா கல்யாணம் ? ஊர்ல வேற பொண்ணா இல்ல? அந்த எடுபட்டபய சொல்றான்னு இந்த தங்கதுரை ஏன் கூட சேர்ந்து ஆடறான்?”, ஆச்சி அவர்களை வறுத்தார்.

“யாருக்கு தெரியும்? ஏதோ டீலிங்க் ஓடுது ஆச்சி.. “

“ஆமா டா .. காலம் காலமா உங்களுக்கு நடுவுல நடக்கற டீலிங்குக்கு நாங்க பலி ஆகணுமோ ?”, என வெறுப்புடன் கேட்டார் ஆச்சி.

“நீங்க தானே ஆம்பள தான் ஒசத்தி ஒசத்தின்னு தலைல தூக்கி வச்சி வளத்தறீங்க.. அதான் பூரா பயலும் உங்கள பொருளாக்கி வேடிக்க பாக்கறான்..”

“அது என்னமோ உண்ம தான் டா.. யாரு அப்புடி ஒரு வழக்கத்த ஏற்படுத்தினாங்கன்னு இப்ப வரைக்கும் புரிபடல.. இந்த காமாட்சி மாதிரி ஏகாம்பரம் பொண்டாட்டி கணக்கா யாராவது அப்ப இருந்து இருப்பாங்க போல எல்லா ஜன கூட்டத்துளையும்.. அதான் அந்த வழக்கம் எல்லா ஊருளையும் இருக்கு .. சரி நம்ம கதைக்கு வருவோம்.. என் மருமக நகை எல்லாம் பாலிஷ் போட்டாலும் சரி அழிச்சிட்டு புதுசா பண்ணாலும் சரி.. பரம்பர நகைய மட்டும் மாத்தாம மிச்சம் எல்லாம் அவன் இஷ்டத்துக்கு பண்ணிக்க சொல்லு.. இந்த பொட்டில தான் எல்லாம் இருக்கு. நான் தாலி செய்ய குடுத்துட்டு பொடவை எடுக்க போறேன்.. வந்து என்னைய தொந்தரவு செஞ்சா கொன்றுவேன் பாத்துக்க .. “, என ஒரு பழங்கால பெரிய மரப்பெட்டியைக் கொடுத்தார். உடன் வேறு ஒரு பெட்டியும்  இருந்தது.

“நீ மட்டுமா சேலை எடுக்க போற?”, அவற்றை எல்லாம் சரிப்பார்த்துக் கொண்டுக் கேட்டான்.

“ஆமா டா.. வினிதா புள்ள வாறேன்னு சொல்லி இருக்கு”

“சரி .. அந்த புள்ளைக்கும் ரெண்டு பொடவ எடுத்து குடு..”

“எனக்கு தெரியும் டா பேராண்டி.. என் வீட்டு ஜீவன வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற புள்ள அது.. அத சும்மா வெறுங்கையோட விடுவனா? அந்த புள்ள கல்யாணத்துல அப்பன் வீட்டு சீரூ எல்லாமே நம்ம தான் பண்ண போறோம். நேத்தே சிம்மன் சொல்லிட்டான்..” , என முகம் முழுக்க விகசித்தப் புன்னகையுடன் கூறினார் ஆச்சி.

“நேத்து தான் அப்பத்தாவும் பேரனும் ஒண்ணு சேந்தீங்க அதுக்குள்ள இவ்வளவு பேசியாச்சா ?”, என வட்டி கிண்டல் செய்தான்.

“கண்ணு வைக்காத டா .. கடை வந்துரிச்சி நிப்பாட்டு வண்டிய “

“வாங்க மா.. காலைலயே வந்து இருக்கீங்க.. என்ன வேணும் சொல்லுங்கம்மா?”, கடை முதலாளி பவ்வியமாக நின்றுக் கேட்டார்.

“தாலி செய்யணும்.. நம்ம குடும்ப முறை தெரியும் ல?”

“தெரியும் மா.. யாருக்கு கல்யாணம்? நம்ம வர்மன் தம்பிக்கா ?”, என அவரும் அடுத்தக் கேள்விக் கேட்டார்.

“இவனுங்கள.. வேலை சொன்னா அத செய்யாம நம்மலையே கேள்வி மேலே கேள்வி கேக்கறாங்க.. இப்போ என்ன சொல்றது ஆச்சி?”, வட்டி அவரின் காதைக் கடித்தான்.

“ஆமா பா .. என் பேரனுக்கு தான்.. நாளைக்கு வேணும்.. கொஞ்சம் அவசரம் தான். யாருக்கும் சொல்லல.. ஊர் விருந்துல தான் எல்லாருக்கும் சொல்லணும். கொஞ்ச நேரத்துல என் பேரன் வருவான். அவன் இஷ்டபடி நகை எடுக்கட்டும். பரம்பர நகைக்கு மட்டும் மொளாம் பூசணும்.. அவங்கிட்ட எதுவும் கேக்கவேணாம் .. பொறுமையா நான் இன்னொரு நாள் வரேன் .. சரியா?”, என ஆச்சி அவர்கள் அடுத்து எதுவும் பேசமுடியாதபடிப் பேசி முடித்தார்.

“சரிங்க மா .. இப்போ நல்ல நேரம் தான். உடனே நான் ஆசாரி கிட்ட சொல்லி செய்ய சொல்றேன். நாளைக்கு விடி காலைல தயாரா இருக்கும். எத்தன பவுனு மா கொடிக்கு போடலாம்?”, என தன் வேலைக்கான விவரங்களைக் கேட்டார்.

“நல்ல புது டிசைனா செய்ங்க.. பேரன் கொடி டிசைன் பாத்து சொல்வான். ரொம்ப பெருசா கழுத்துல தெரிய வேணாம். கணமா இருந்தாலும் சுத்தளவு சின்னதா இருக்கட்டும்… என் பேரன் விருப்பம் தான் அதுவும்”, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றார்.

வர்மன் சில நிமிடங்களில் அங்கே வந்தவன் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டு, நங்கைகக்கு எது பொருந்தும்? எது பொருந்தாது என யோசித்து அவளுக்கு தேவையான அனைத்தும் வாங்கினான்.

“மச்சான் .. கடைய எழுதி வாங்கிடுவீங்க போலவே ?”, வட்டி கேலி செய்தான்.

“உன் தங்கச்சி மட்டும் என்னய ஏத்துகிட்டா சொரங்கம் கூட தோண்ட நான் ரெடி மாப்ள ..”, என வர்மன் லேசாக நகைத்தபடிக் கூறினான்.

“சரிதான்.. இங்கயும் இனி மீனாட்சி ஆட்சி தான்”, என இருவரும் கேலி செய்தபடி அனைத்தும் வாங்கி முடித்து அங்கிருந்துக் கிளம்பினர்.

“பாட்டி.. இந்த நெறம் அவளுக்கு நல்லா இருக்கும்.. இது அவளுக்கு பிடிக்கும்.. இது அவளுக்கு பிடிக்காது.. இப்டி இருந்தா அவ கட்டுவாளான்னு தெரியாது..”, என வினிதா ஆச்சியை ஒரு வழி செய்துக் கொண்டு இருந்தாள்.

“எல்லாத்தயும் அவ ஒரே நாள்ல கட்ட போறது இல்ல டி .. முகூர்த்தத்துக்கு மட்டும் நீ இப்ப பாரு.. அதுலாம் அவள கூட்டிட்டு வந்து பாத்துக்கலாம்”, எனக் கலைத்துப் போய்  அமர்ந்துக் கூறினார் ஆச்சி.

“அவள கூட்டிட்டு வந்து எப்ப எடுப்பீங்க? வாய தொறந்து எதையும் கேக்கமாட்டா பாட்டி அவ.. எல்லாத்தயும் மனசுல வச்சி மருகி மருகி உடம்பு தான் எளைக்கும்.. அதுவும் இந்த கூத்துல நானும் இருக்கேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாளோன்னு பயமா இருக்கு பாட்டி..”, எனக் கடைசி வரிகளை மட்டும் அவரின் அருகில் வந்து மெல்லக்  கூறினாள்.

“அதுலாம் நான் பாத்துக்கறேன் .. நீ இப்ப ஒரு இருவது பட்டு, அப்பறம் அந்த பேன்சி பொடவ ஒரு இருவது, அப்பறம் தினம் போட சுடிதாரு, சாதா பொடவ எல்லாம் கொஞ்சம் எடு.. மிச்சம் அப்பறம் பாத்துக்கலாம்..”. என அவளை வேறுபக்கம் அனுப்பி விட்டு முகூர்த்தப் புடவை அவரே எடுத்தார்.

“அப்பா .. ஈஸ்வரா.. நல்லபடியா என் பேர புள்ளைங்களுக்கு இந்த கல்யாணம் நடந்து ரெண்டு பேரும் சந்தோஷமா நிறைஞ்சி வாழணும்”, என மனதிற்குள் வேண்டியபடி அவரும் அடுத்த வேலையைத் தொடர்ந்தார்.

வர்மனிடம் அடிவாங்கிய கோபத்தில் போதை மருந்து உட்கொண்டுக் கிடந்த ராஜனை, அவர்கள் கடையில் வேலைப் பார்க்கும் ஒருவன் வந்து வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

“அம்மா.. ஐயா ..”, என வெளியில் ராஜனை திண்ணையில் படுக்க வைத்துவிட்டு உள்ளே குரல் கொடுத்தான்.

“யாருப்பா?”, எனக் கேட்டபடி வேணி வெளியே வந்தார்.

“அம்மா இல்லைங்களா ?”, எனத் தயக்கத்துடன் கேட்டான்.

“என்ன பச்ச.. இந்த நேரத்துல வந்து இருக்க?”, எனக் கேட்டபடி காமாட்சி வெளியே வந்தார்.

“நம்ம தம்பி ..” என ஆரம்பித்து அதற்கு மேல் எப்படிக் கூறுவது எனத் தெரியாமல் தயங்கி  ராஜன் படுத்து இருக்கும் திண்ணையைக் கைக்காட்டினான்.

“அய்யோ .. என் புள்ளைக்கு என்ன ஆச்சி? என்ன இப்டி அடிபட்டு இருக்கு? ஏன் கண்ணு எல்லாம் மேல சொருகி இருக்கு?”, எனப் பதற்றமாகக் கேட்டார்.

“கள்ளிகாட்டுக்கு பக்கத்துல தம்பி விழுந்து கெடந்துச்சிம்மா .. எவ்ளோ எழுப்பியும் கண்ண தொறக்கல.. எனக்கு பயமா போச்சி அதான் வீட்டுக்கு தூக்கி  வந்தேன். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க மா.. தம்பி இப்டி இருக்கறது பாத்தா பயமா இருக்கு”, என அவன் மனதில் பட்டத்தைக் கூறினான்.

இதற்கு இடையில் வாணி தண்ணீர் கொண்டுத் தெளித்து அவன் வாயில் புகட்ட முயன்றும் எதுவும் பயனளிக்கவில்லை. வேம்பு பாட்டியும் காமாட்சியின் சத்தம் கேட்டு வெளியே வந்துப் பார்த்தார்.

அங்கிருந்த ஆட்களை வைத்து வாணி தான் அவனை மருத்துவமனைத் தூக்கி கொண்டுச் சென்றார். நங்கையும் உடன் சென்று மருத்துவரிடம் விவரம் கேட்க வெளியே நின்றாள்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர், “பையன் கைல நெறைய பணம் குடுப்பீங்களாம்மா?”, எனக் கேட்டார்.

“அவன் செலவுக்கு கேக்கறப்ப குடுக்கறது தான்.. இப்போ அவன் எப்டி இருக்கான் ? “, எனக் காமாட்சி தவிப்புடன் கேட்டார்.

“கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவான்.. “, என அவர் கூறிவிட்டு நங்கையை வரும்படி அழைத்தார்.

“டாக்டர்..”, என நங்கை ஆரம்பிக்கும் முன், “இங்க பாருங்கம்மா.. பதினாறு வயசு பையன் கைல தேவைக்கு அதிகமா பணம் குடுத்தா இப்டி தான் ஆவாங்க.. ஹை ஆல்கஹால் கன்ஸ்யூம் செஞ்சி இருக்கான். போலீஸ் கேஸ் தான் குடுக்கணும். இது இவனுக்கு எங்க கெடச்சதுன்னு  தெரியல”, என டாக்டர் பொறியத் தொடங்கினார்.

“டாக்டர்.. அவனுக்கு யாராவது தெரியாம குடுத்து இருக்கவும் வாய்ப்பு இருக்கு. போலீஸ் வரைக்கும் இப்ப போகவேணாம்.. “, என வாணி முந்திக்கொண்டுப் பேசினார்.

“சரி.. ரெண்டு மணிநேரம் கழிச்சி கூட்டிட்டு போகலாம்.. இன்னொரு முறை இப்டி வந்தா நானே போலீஸ்க்கு  கால் பண்ணுவேன்”, என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

அங்கே காமாட்சி கண்ணீருடன் மகன் அருகில் அமர்ந்துத் தலைக்கோதிக் கொண்டு இருந்தார்.

“இவன் எந்த ஸ்கூல் படிக்கறான் தமிழு?”, வாணி கேட்டார்.

“நம்ம ஊர்ல தான் சித்தி.. ************** ஸ்கூல்”

“சரி .. அம்மாக்கு இதுலாம் தெரிய வேணாம்.. உங்கப்பா எங்க இன்னும் காணோம்?”, எனக் கேட்டார்.

“தெர்ல சித்தி..”, எனக் கூறிவிட்டு அமர்ந்தாள்.

“தமிழு உன் ஃபோன் குடு.. சித்தப்பாக்கு ஃபோன் பண்ணனும் ..”

“என்கிட்ட ஃபோன் இல்ல சித்தி.. வீட்ல லேண்ட்லைன் தான் இருக்கு.. ராஜன் கிட்ட ஃபோன் இருக்கும் .. அவன் பேண்ட்ல இருக்கா பாக்கறேன்” , என எழுந்து உள்ளே சென்று அவன் தொலைபேசி இருக்கிறதா என்றுப் பார்த்தாள்.

அவனின் எந்த பொருளும் அவனிடம் இல்லையென அப்போது தான் அவனின் தாயும் கவனித்தார். யாரோ நகைகளுக்காக அவனை போதை பொருள் எடுக்க வைத்து திருடியதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்தனர்.

“யாரோ களவாணி பய என் மகனுக்கு என்னமோ குடுத்து எல்லாத்தயும் திருடிட்டான் போலவே.. என் புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது ஆத்தா”, என காமாட்சி மீண்டும் ஒப்பாரி வைத்தார்.

“அக்கா.. சும்மா ஏன் அழுவுற? அதான் டாக்டர் அவனுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாரே .. அமைதியா இரு.. பையன் தூங்கட்டும்.. வா வந்து வெளிய உக்காரு”, என வாணி அவரை அமைதிப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றார்.

“நிஜமா திருட தான் இப்டி நடந்து இருக்குமா?”, என நங்கையும் தனக்குள் யோசித்தபடி ஹாஸ்பிடல் போனில் இருந்து வினிதாவிற்கு அழைத்தாள்.

“ஹலோ .. யாரு ?”, வினிதா.

“வினி.. நான் தான் டி நங்கை.. நான் ************* ஹாஸ்பிடல்ல இருந்து பேசறேன்”, என நங்கை கூறியதும், ”ஓடி போக ஏன் ஹாஸ்பிடல் போற நங்க? பஸ் ஸ்டாண்ட் போக வேண்டியது தானே?”, என வினிதா கேட்டாள்.

“எருமா மாடே.. வாய மூடு. நான் சும்மா சொன்னா நீ நிஜமா என்னய பஸ் ஏத்தி அனுப்பிடுவ போல? இந்த ராஜன இங்க சேத்தி இருக்கு”, என அவளைத் திட்டிவிட்டு விவரம் கூறினாள்.

“அவன யாரு போதை மருந்து குடுத்து தூக்கிட்டு போக போறா? மிஞ்சி போனா 5 பவுன்.. அதுக்கு அந்த திருடன் இவ்ளோ செலவு செஞ்சி இவன தூக்கிட்டு கள்ளிக்காடு வரைக்கும் வேற போவானா ? இந்த எருமையே தான் ஏதாவது குடிச்சிட்டு அங்க போய் விழுந்து இருக்கும். போதைல இருக்கறவன் கிட்ட எவனோ ஆட்டைய போட்டு இருக்கான்..”, என வினிதா தனக்குத் தோன்றியத்தைக் கூறினாள்.

“நானும் அப்டி தான் நினைச்சேன் வினி.. ஆனா அம்மா இப்டி  பொலம்பிச்சா  அதான் இப்பிடியும் நடக்க வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன்”

“அவன் சாராய பாட்டில் ல சாராயம் குடிச்சா கூட உங்கம்மா அவன் பச்ச தண்ணி தான் குடிக்கறான்ன்னு சூடம் அனச்சி சத்தியம் பண்ணும்ன்னு உனக்கு தெரியாதா?”

“சரி என்னமோ இருக்கட்டும். என் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லி இங்க வர சொல்லு..”, என நங்கை அடுத்த பேச்சிற்குச் சென்றாள்.

“வீட்டுக்கு போய் நீங்க யாரும் இல்லைன்னா அங்க வந்து சேருவாரு.. என்னையெல்லாம் உங்கப்பனுக்கு ஃபோன் பண்ண சொல்லாத… நான் கடுப்புல ஏதாவது சொல்லிடுவேன்”

“சும்மா ஸீன் போடாம ஃபோன் பண்ணு டி.. என்னமோ எங்கப்பாவுக்கு தெரியாம எனக்கு நீ நல்ல வாழ்க்கை அமைச்சி குடுத்துருவ? வாய் பேசாம சொல்றத பண்ணு.. நான் வீட்டுக்கு வந்துட்டு கால் பண்றேன்.. பை”, என நங்கை ஃபோன் கட் செய்து விட்டு சித்தியிடம் சென்றாள்.

“சித்தி.. “

“வா தமிழு. உங்க அப்பாகிட்ட பேசிட்டியா?”, எனக் கேட்டார் வாணி.

“இல்ல சித்தி அவருக்கு லைன் கிடைக்கல. என் ஃப்ரெண்ட்க்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிட்டேன். அவ அப்பா கிட்ட சொல்லிடுவா..” ,எனக் கூறியபடி இருவரும் மருந்துக்கடை வந்து நின்றனர்.

டாக்டர் எழுதி கொடுத்த மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு ராஜன் இருக்கும் அறை இருக்கும் பக்கம் நடக்க ஆரம்பித்தனர். 

“ஏன் தமிழு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?”, என வாணி மெதுவாக நடந்தபடிக் கேட்டார்.

“இப்போ கேட்டு என்ன ஆக போகுது சித்தி? எல்லாம் விதிப்படி தானே நடக்கும். இந்த ஊர்ல பொண்ணா பொறந்ததுக்கு நான் எதுவும் ஆசப்படக்கூடாது.. எதுவும் என் விருப்பபடியும் நடக்காது”, என விரத்தியுடன் கூறினாள்.

“ஏன் தமிழு இப்டி பேசற?”, வாணி அவளின் குரலில் இருக்கும் வலியும் விரக்தியும் கண்டுக் கேட்டார்.

“நீங்க வெளி ஊர்ல இருக்கீங்க சித்தி. அதனால உங்களுக்கு இந்த ஊரு ஆளுங்கள பத்தி தெரியாது. எங்கப்பாவ பத்தியும் தெரியாது. விடுங்க.. என் நிலைமை மாற போறது இல்ல. நீங்க இப்ப எந்த ஊர்ல இருக்கீங்க சித்தி?”, என வேறு பேச்சை ஆரம்பித்தாள்.

“உன் சித்தப்பா எப்பவும் ஊரு ஊரா சுத்திக்கிட்டு தான் இருப்பாரு. ஒண்ணும் சொல்லவும் முடியாது. அரசாங்க உத்தியோகம். அவன் இங்க போ.. அங்க போன்னு சொன்னா போய் தான் ஆகணும் ..”

“என்ன வேலைல இருக்காரு சித்தப்பா? நான் சின்ன பொண்ணா இருந்தப்போ பாத்தது. உங்களையும் இப்ப தான் உங்க கல்யாணத்துக்கு அப்றம் பாக்கறேன்”

“ஹாஹாஹா.. என்ன செய்ய தமிழு.. கல்யாணம் முடிஞ்ச கையோட வடநாட்டு பக்கம் மாற்றல் வந்துச்சி.. இப்போ தான் ஒரு ஆறு மாசமா இந்த பக்கம் வந்து இருக்கோம். எப்ப வேணா பொட்டிய தூக்க சொல்லிட்டு வருவாரு. நானும் எல்லாத்தயும் தயாரா வச்சி இருக்கணும்”, என பெருமூச்சு விட்டபடிக் கூறினார் வாணி.

“இப்போ என் கல்யாணத்துக்கு வருவாரா சித்தி சித்தப்பா?”

“தெரியல தமிழு.. முன்ன போ நான் அப்றம் வரேன்னு தான் என்னைய அனுப்பி வச்சாரு.. வருவாருன்னு தான் நெனைக்கறேன்.. நீ இங்க அம்மாவ கெளம்ப ரெடி ஆக சொல்லு.. நான் டாக்டர ஒரு தடவ பாத்துட்டு வந்துடறேன் ..”, எனக் கூறிவிட்டு டாக்டர் அறைக்கு நடந்தார் வாணி.

 

முந்தின அத்தியாயம் படிக்க… 

அடுத்த அத்தியாயம் படிக்க ..  

 

முதல் அத்தியாயம் படிக்க..

Click to rate this post!
[Total: 1 Average: 4]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,876

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    552 shares
    Share 221 Tweet 138
  • 1 – அகரநதி

    501 shares
    Share 200 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    471 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    430 shares
    Share 172 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply