27 – காற்றின் நுண்ணுறவு
அன்றிரவு நாச்சியார் தலையில் கை வைத்ததும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தவள் முன்னே பரதேசி கோலத்தில் இருவர் நின்றிருந்தனர்.
அந்நேரத்தில் அவர்களைக் கண்டதும் மிரண்டு பின் சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக்கொண்டாள்.
“நீங்க யாரு?”, தைரியமாகவே கேட்டாள்.
“பராசக்தியின் ஸ்வரூபத்திற்கு தைரியத்திற்கு குறைவில்லை தான். நீ காக்க வேண்டிய பொக்கிஷம் உன்னை தேடி வரப்போகிறது. அதை பத்திரமாக பார்த்துக்கொள்”, ஒருவர் சிரித்தபடிக் கூறினார்.
“பொக்கிஷமா? என்ன அது? நீங்க எப்படி இங்க வந்தீங்க? “, நாச்சியார் இதுவும் ம்ரிதுள்ளின் நாடகமோ என்ற நினைப்பில் சந்தேகக் கண் கொண்டே அவர்களைப் பார்த்தாள்.
“சந்தேகம் உன் ஆத்மாவோடு பிறந்தது. அதை பிரித்தறிந்து உண்மையை உணரக்கற்றுக் கொள் நாச்சியா…. உன் சுடர் கொண்டு அந்தகாரத்தை விரட்ட பிறப்பெடுத்திருக்கிறாய்…. உன் கைகளை பிணைத்திருப்பதும் உன் அறிவில் சூழ்ந்திருக்கும் அந்தகாரம் தான். இன்னுமா நீ அறியவில்லை அவர்களின் தேடலை?”, மற்றவர் கேள்வி கேட்டார்.
“உன் பிறப்பின் பயன் உணர்ந்துக் கொள். அந்தகாரத்தில் வியாபித்திருக்கும் காற்றுடன் கரம்கோர்த்து தான் நீ சுடராக எறிய வேண்டும். இதில் விழும் பலிகள் உன் சுடருக்கு விறகாய் மாறி தீப்பிழம்பாய் நீ உருவெடுக்க பயன்படும். இந்தா இதை உட்கொள். உன் முழுமனதோடு ஏற்றுக்கொள். இனிவரும் காலங்களில் உனக்கு குழப்பம் விலக்கி தெளிவின் பாதை காட்ட உதவும்”, என ஒரு வேரினைக் கொடுத்தார் அவர்.
பச்சையும் கருநீலமும் கலந்த நிறத்தில் இருந்தது அது. நாச்சியா அதைக் கையில் வாங்காமலே, அவர்களை இன்னும் சந்தேகத்தோடே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளின் பார்வைக் கண்டு, “உனக்கு நம்பிக்கை வரவில்லை… நம்பிக்கையில்லாமல் நீ எதையும் உட்கொள்ள வேண்டாம். நீ இதன் மதிப்பும் அவசியமும் உணரும் தருணம் எங்களை நினைத்துக் கொள். அப்போது இதை உனக்கு தருகிறோம்”, எனக் கூறிவிட்டு அவளுக்கு தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கிவிட்டு அவ்விடம் விட்டு மறைந்தனர்.
தன் கண்முன்னே இருவர் மாயமாய் மறைந்ததைக் கண்டு திகைத்து அவர்களைத் தேடினாள். அறைக்குள் சென்று தேடிவிட்டு மீண்டும் பால்கனிக்கு வந்தவளின் கண்களுக்கு அவர்கள் இருவரும் தூரத்தில் காற்றில் மிதந்தபடி செல்வது தெரிந்தது.
நாச்சியார் பரபரப்பாக அறையில் விளக்கைப் போட்டு எதையோ தேடுவதுக் கண்டு எழுந்த ராகவி , “என்ன பேபி? இந்நேரத்துல எத தேட்ற?”, எனக் கண்களை கசக்கியபடிக் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல ரா… நாம எத தேடறோம்னு ஓரளவு புரிஞ்சது. அதை எழுதி வைக்கதான் டைரி தேடினேன் “, என வாயிற்கு வந்த பொய்யைக் கூறினாள்.
“எத தேடறோம் பேபி?”, ராகவி ஆர்வமாக கேட்டாள்.
“ஒரு குகைய… ஆனா அதுக்கான வாசல் எதுன்னு இன்னும் தெரியல”, நாச்சியார் எதையோ நினைத்தபடி மீண்டும் அந்த பழங்கால பொருட்கள் இருக்கும் அறைக்கு ஓடினாள்.
அவள் திடீரென எழுந்து ஓடுவதுக் கண்டு ஆட்களும் அவளின் பின்னே ஓடினர்.
“இத தொறங்க”, என அதிகாரமாகக் கட்டளையிட்டாள்.
“முடியாது… நீ உன் ரூமுக்கு போ… “, ஒருவன் பதில் கொடுத்தான்.
“இப்ப இத தொறக்கல உன்ன கொன்னுடுவேன்… தொறடா முதல்ல”, என உறுமினாள்.
“என்ன பேபி ஏன் இப்ப இத தொறக்கணும்னு சொல்ற?”, என பின்னாலே ஓடிவந்த ராகவி கேட்டாள்.
“அந்த குகைக்கு போறதுக்கான வாசல் எங்க இருக்குன்னு இங்க மறுபடியும் பாத்தா தெரியும்”, என அவள் கூறும்போதே யோகேஷ் அங்கு வந்தான்.
“என்ன இந்நேரத்துல இங்க சத்தம்? நீ ஏன் இங்க நிக்கற? ரூமுக்கு போ”, என அதட்டினான்.
நாச்சியார் சினம்கொண்டு யோகேஷின் கைகளை பின்னே வளைத்து அவன் முதுகில் உதைத்து அந்த கதவைத் திறக்கக் கூறினாள்.
“தொறங்கடா அத”, என வலி தாங்காமல் அவன் கத்தினான்.
“அது சார்கிட்ட தான் சாவி இருக்கு.. அவர் வராம தொறக்க முடியாது பாஸ்”, என ஒருவன் கூறினான்.
“போய் அவன எழுப்புங்க டா… என் கைய பிச்சே எடுத்துடுவா போல இவ… அவன எழுப்பி சாவி வாங்கிட்டு வாங்கடா”, என வலி தாளாமல் கத்தினான்.
“அவர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு பாஸ்”, என மற்றொருவன் கூறினான்.
“அய்யோ….. ஏய்… என் கையவிடு… நான் தொறக்கறேன்….”, என யோகேஷ் அவளை வலியுடன் மிரட்டினான்.
“உன் கைய பிச்சி எடுத்தா தான் மரியாதை வரும் போல…. நானும் உன்ன பாத்ததுல இருந்து பாக்கறேன் ஏய் ஏய்னு கூப்பிடற… ஒழுங்கா மிஸ் நாச்சியார்னு கூப்பிடு”, என அவன் கையை இன்னும் பின்னே முறுக்கினாள்.
“ஆஆஆஆஆஆ…… அய்யோ … அம்மா…… ஏய்…. நீ என் இடத்துல இருக்க… அந்த நினைப்பு உனக்கு இருக்கா? உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிவைக்காத…. நான் ஒரு சத்தம் குடுத்தா நீ பீஸ் பீஸா ஆகிடுவ”, யோகேஷ் அந்த நிலையிலும் அவளை மிரட்டினான்.
“கொல்றதா இருந்தா ஒரு மாசத்துக்கு முன்னயே எங்கள கொன்னிருக்கணும். இத்தனை நாள் பாதுகாத்துட்டு இருக்க மாட்டீங்க…. எங்க அவன்… அவன வரசொல்லு”, நாச்சியார்.
“அவனே வந்தா தான். அவன் யாருக்கும் கட்டுப்பட மாட்டான்”, யோகேஷ்.
“காலைல ஒருத்தன பாத்தனே அவனுக்கு கூடவா?”, என அதித்-ஐ நினைவுக் கூர்ந்துக் கேட்டாள்.
“நீ தேவையில்லாத விஷயத்துல நுழையாத… உனக்கு இந்த ரூம் தொறக்கணும்னா அவன் வர்ற வரைக்கும் வையிட் பண்ணு”, என யோகேஷ் வலியில் கதறியபடிக் கூறினான்.
நாச்சியார் யோகேஷை விடுவித்துவிட்டு, “இதுக்கு வேற பக்கம் ஜன்னல், வாசல் எதாவது இருக்கா?”, எனக் கேட்டாள்.
“அவள பிடிச்சி கட்டுங்க டா”, என யோகேஷ் அவளிடம் இருந்துத் தள்ளி வந்துக் கட்டளையிட்டான்.
ஆட்கள் அவர்களை நெருங்க முனைய நாச்சியார் முன்னிருந்த இருவரை ஒரே சமயத்தில் கீழே வீழ்த்தி, “இங்க பாருங்க… நீங்க தேடிற இடத்துக்கான முக்கியமான ஒரு விஷயம் இப்பதான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு.. உடனே அதை நான் சால்வ் பண்ணா தான் இல்லைன்னா எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க அத கண்டுபிடிக்க முடியாது”, என மற்றொருவன் கழுத்தைத் திருகியபடிக் கூறினாள்.
“சபாஷ் நாச்சியா…. உன்னை ஏன் தசாதிபன் அசிஸ்டண்ட்-ஆ ஏத்துகிட்டாருன்னு இப்பதான் முழுசா தெரியுது”, எனக் கைத்தட்டியபடி ம்ரிதுள் அவளுக்கு பின்னால் இருந்துக் கூறினான்.
“முதல் ரூம் ஓபன் பண்ணு”, நாச்சியாவின் குரல் கனீரென வந்தது.
“தொறந்தாச்சி… நீ போய் சால்வ் பண்ணு”, எனக் கூறிவிட்டு அடிபட்டு கிடந்தவர்களைத் தூக்கிச் செல்ல உத்திரவிட்டான்.
நாச்சியா வேகமாக அந்த கற்சிலை முன்றே சென்று நின்றாள்.
அந்த சிலையின் கீழே சில வரிகள் தெரிந்தது. அதை ராகவியிடம் நகலெடுக்கக் கூறிவிட்டு தன் டைரியை எடுத்து வரச் சென்றாள்.
ம்ரிதுள் அவளின் நடவடிக்கைகளை அமைதியாகவும், கூர்மையாகவும் கவனித்தபடி நின்றிருந்தான்.
அவன் கண் காட்டும் பக்கமெல்லாம் இருவர் காவலுக்கு நின்றனர்.
“எவனும் பின்னாலயே சுத்தவேணாம். நான் வேலை செய்யணும்னா தொந்தரவு பண்ணாதீங்க”, எனக் கூறிவிட்டு டைரியிலும், தான் காட்டிற்குள் எடுத்த புகைபடத்திலும் எதையோ தேடினாள்.
“என்ன தேட்ற? நானும் உதவி பண்ணட்டுமா?”, என ம்ரிதுள் கேட்டான்.
“இதுல செய்யுள் வரிகள் இருக்கற போட்டோஸ் எடு”, லேப்டாப்பை அவன் கைகளில் கொடுத்தாள்.
அந்த வேலையை அவனிடம் கொடுத்துவிட்டு, ராகவி நகலெடுத்த வரிகளை ஒரு பேப்பரில் எடுத்து எழுதினாள்.
“இப்பதுமையே மூலச்சொல்….
சிலைகொண்டு தனுசு பிடிக்க….
….. வலி சுமந்து நாண் இழுக்க…. உதரதியவள் வழிவிடுவாள்
தாழ் தி…. “, என பாதியில் நின்றது.
“அந்த வார்த்தை முழுசா வரலையா ரா?”, கடைசி ‘தி’ எனத் தொடங்கி நிற்கும் வார்த்தையைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“இல்ல பேபி…. ஸ்டோன் கட் ஆகி இருக்கு கடைசில”, ராகவி.
“அந்த சிலை எங்கிருந்து எடுத்தீங்க?”, என ம்ரிதுளைக் கேட்டாள்.
“சவுத் தமிழ்நாடு …. ஒரு சின்ன கோவில்ல”, ம்ரிதுள்.
நாச்சியார் அவனை முறைத்தபடி, “அங்க போகணும்”, எனக் கூறினாள்.
“எதுக்கு?”
“இதுக்கு கீழ இருக்கற வார்த்தைகள் என்னன்னு தெரியணும்…. “, நாச்சியார்.
“வார்த்தை தானே தெரியணும். நாளைக்கு உனக்கு அந்த இடம் போட்டோ எடுத்துட்டு காட்டறேன்”, ம்ரிதுள்.
நாச்சியார் அவனைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு ,”நான் சொன்னத செஞ்சியா? “, என அதிகாரமாகக் கேட்டாள்.
“மொத்தம் 27 செய்யுள் இருக்கற போட்டோஸ் இருக்கு”, ம்ரிதுள்.
“எங்க டீம் எப்ப இங்க வருது?”, நாச்சியார்.
“ஏன்?”, ம்ரிதுள் சந்தேகமாகக் கேட்டான்.
“அவங்க வந்தா எனக்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கும். சீக்கிரம் இங்க கொண்டு வர ஏற்பாடு பண்ணு”, எனக் கூறிவிட்டு அங்கிருந்து, அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஹலோ மிஸ் ஒரு நிமிஷம்”, ம்ரிதுள் அழைத்தான்.
நாச்சியார் திரும்பாமலே நின்றாள்.
“திடீர்ன்னு எதுக்கு இதுல இவ்வளவு ஆர்வம் காட்றீங்க?”, அவனே முன்னே நடந்து வந்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடிக் கேட்டான்.
“தேடல் தொடங்கினப்பறம் அதை பாதில விட்ற பழக்கம் எனக்கில்ல…. எங்களோட ஒரு மாச உழைப்பு எதுக்குன்னு எங்களுக்கு தெரியணும்”, எனக் கூறிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்.
“புத்திசாலி ….. கண்டுபிடிச்சிட்டா….. “, என ம்ரிதுள் மென்மையாகச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.
“ம்ரிதுள்….”, என அழைத்தபடி யோகேஷ் உள்ளே வந்தான்.
“சொல்லு “, வார்த்தைக்குரல் கடினமாக வந்தது.
“எதுக்கு அவளுக்கு இவ்வளவு இடம் குடுக்கணும்? நாமலே பாத்துக்கலாம். இவளுக்கு கொஞ்சம் கூட பயமில்ல… அடக்கமும் இல்ல…. அவ இஷ்டத்துக்கு கை வைக்கறா பசங்க மேல….. என் மேலையும் தான்…. அவள போட்றலாமா?”, என யோகேஷ் அடுத்தடுத்து அவள் கையால் அடிபட்டதில் அவமானத்தில் குமுறிக்கொண்டிருந்தான்.
“அவ ஒன்னும் பசங்கள ரேப் பண்ணலியே? இல்ல உன்ன அப்யூஸ் பண்ணாளா?”, என ம்ரிதுள் கேட்டதும் யோகேஷ் இன்னும் உள்ளுக்குள் எழுந்தக் கோபத்தை அடக்கச் சிரமப்பட்டான்.
“ம்ரிதுள்”, கோபமாக குரல் உயர்த்தினான்.
“ஷட் அப் இடியட்…. அவ எதுக்கு இங்க இருக்கான்னு உனக்கு நல்லாவே தெரியும்… அவள டிஸ்டர்ப் பண்ணா அதித் உன்னை குதறி எடுத்துடுவான். உன்னால நாலு வருஷமா கிழிக்க முடியாதத அவ வந்த ஒரே மாசத்துல கிழிச்சிட்டா…. இன்னும் கொஞ்ச நேரத்துல அதோட மொத்த மேப்பும் அவ ரெடி பண்ணிடுவா… உன்னால முடியுமா சொல்லு”, என ம்ரிதுள் கர்ஜித்தான்.
அவன் கர்ஜனையின் எதிரொளி அந்த பங்களா முழுக்க எதிரொளித்தது.
யோகேஷ் அடிபட்ட ஓநாயாக அவனைப் பார்த்தான்.
“முடியாதில்ல…. ஒதுங்கி இரு…. அவளபத்தி இன்னொரு வார்த்தை பேசினாலும் நாளைக்கு வேட்டைக்கு இரையா நீ தான் இருப்ப”, என எச்சரித்துவிட்டு அந்த அறையைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.