28 -காற்றின் நுண்ணுறவு
பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், “இவளுக்கு மாத்து மருந்து போடுங்க”, என வல்லகி சினந்தாள்.
“எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தா தான் இவளுக்கு மாத்து மருந்து குடுப்போம்”, என ஏஞ்சல் வரவழைக்கப்பட்டக் கடுமையுடன் கூறினாள்.
வல்லகி அவளை சில நொடிகள் கூர்ந்துப் பார்த்துவிட்டு,”இவளுக்கு மருந்து போட்டா தான் இங்க இருந்து நான் கிளம்புவேன்”, என ட்ரைவர் சீட்டில் இருந்தவன் கழுத்தைத் திருகிவிட்டு ஏஞ்சலின் கழுத்தில் கத்தியை வைத்தாள்.
“வகி…. எனக்கு என்னமோ மாறி இருக்கு…. தண்ணி வேணும்”, என தீனமானக் குரலில் பாலா பேசினாள்.
“தண்ணி எடு…. “, வல்லகி.
“இரு இரு….. தண்ணி குடிச்சா உடனே செத்துடுவா…. டேவிட்…. “, என கண்காட்ட மாற்றுமருந்து பாலாவிற்குச் செலுத்தப்பட்டது.
ட்ரைவர் சீட்டில் இருந்தவனைத் தூக்கி வெளியே வீசிவிட்டு டேவிட் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை எடுத்தான்.
“எந்த உயிருக்கும் மதிப்பு இல்ல போல இந்த உலகத்துல”, என வெளியே கிடந்தவனைப் பார்த்துவிட்டுக் கூறினாள் வல்லகி.
“பிலாஸபி பேசாம கம்முனு வா வல்லகி”, என ஏஞ்சல் சற்றுக் கடுமையாகக் கூறி, முன்னே அமர்ந்திருந்த இரு அடியாட்களைக் கலக்கமாகப் பார்த்துவிட்டு, வல்லகி மற்றும் பாலாவைப் பார்த்தாள்.
“உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு எங்கள இப்ப கடத்திட்டு போற? உனக்கு என்ன வேணும்?”, வல்லகி அவளைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் உன் வாய் மூடாதா? தொன தொனன்னு….. அமைதியா வந்தா எல்லாருக்கும் நல்லது”, எனக் கூறிவிட்டு முன்னே அமர்ந்திருப்பவனைப் பார்த்தாள்.
வல்லகியும் முன்னே அமர்ந்திருப்பவனைப் பார்த்தாள். அவன் வந்ததிலிருந்து எதுவும் வாய் திறந்து பேசவில்லை. ஆனால் ஏஞ்சலை தன் கண்அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு நேரம் அமைதியா போறது? எதாவது பாட்டு போடுங்களேன்”, பாலா சற்றுத் தெம்பாகி இருந்தாள்.
“பதினைஞ்சு நிமிஷத்துக்கு முன்ன சாக கிடந்த நீ…. உங்க இரண்டு பேருக்கும் வாய் ஓயாதா? சே….. இரிடேட்டிங் இடியட்ஸ்”, என அவர்களிடம் கத்திவிட்டு மீண்டும் முன்னால் அமர்ந்திருப்பவனைப் பார்த்தாள்.
“வகி…. அவ ஏன் அவனையே பாக்கறா?”, பாலா வல்லகி காதருகில் மெதுவாகப் பேசினாள்.
“தெரியல…. அவளபத்தி நீ என்ன நினைக்கற?”, வல்லகி பார்வையைக் கூராக்கியபடி அங்கிருக்கும் சூழ்நிலையைக் கவனித்துக் கேட்டாள்.
“நம்மல கடத்திட்டு போயிட்டு இருக்காங்க … நீ என்னமோ அவள லவ் பண்ணப் போற மாதிரி ஒபீனியன் கேக்கற”, என பாலா கடிந்தாள்.
“அவளையும் கடத்தி இருக்காங்களோன்னு எனக்கு தோணுது”, வல்லகி.
“ஷட் அப் லேடீஸ்….. நோ மோர் சவுண்ட்”, என முன்னே அமர்ந்திருந்தவன் அவர்களிடம் சத்தம் போட்டான்.
“லேடீஸா? யோவ்… எங்கள பாத்தா எப்படி இருக்கு? இன்னும் எங்களுக்கு 21 வயசு கூட ஆகல… எங்கள பாத்து லேடீஸ்ன்னு சொல்ற.. ஒழுங்கா கேர்ள்ஸ் ன்னு சொல்லுடா”, என பாலா அவனிடம் எகிறினாள்.
“லேடீஸ்ன்னா ஆன்ட்டி ன்னு நினைச்சிட்டு இருக்கியா?”, ஏஞ்சல் கேட்டாள்.
“ஷட் அப் ஏஞ்சல்…. டெல் ஹெர் நாட் டூ ஓபன் த மவுத். அதர்வைஸ் யூ நோ வாட் வில் ஹேப்பன்”, என ஏஞ்சலை அவன் மிரட்டினான்.
“ஐ வில் மேக் தெம் ஷட் தேர் மவுட் “, என ஏஞ்சல் சற்றுப் பயந்தபடிப் பதிலளித்தாள்.
வல்லகி பாலாவை அமைதியாக இருக்கும்படி ஜாடைக் காட்டிவிட்டு வெளியே பார்த்தாள்.
அடுத்த பத்தாவது நிமிடம் பிறைசூடன் அருகில் வல்லகியும் பாலாவும் கை கால்கள் கட்டப்பட்டு தரையில் கிடந்தனர்.
“பெரியப்பா… உங்களுக்கு ஒன்னும் இல்லையே”, வல்லகி அவரைப் பார்த்துக் கேட்டாள்.
“நீங்க ஏன்டா வந்தீங்க? அப்படியே தப்பிச்சி போயிருக்கலாம்ல ….. உனக்கு தான் எல்லாமே தெரியுமே வல்லகி… ஏன் வந்த?”, பிறைசூடன் கலங்கிய கண்களுடன் கேட்டார்.
“பெரியப்பான்னு நாங்க சும்மா கூப்பிடல …. உங்கள ஏதோ ஒரு வகைல நிர்பந்தப்படுத்தி தான் இப்படி செய்ய வைக்கறாங்கன்னு புரிஞ்சது. அதான் வந்தோம். ஒன்னாவே தப்பிக்கலாம்…. இவங்க யாரு பெரியப்பா?”, எனக் கேட்டாள் வல்லகி.
“நான் டைஸி வில்லியம்ஸ்….. இதுல யாரு சூப்பர் பவர் கேர்ள்?”, என பிச்சிப் போட்ட தமிழில் கேட்டாள் அந்த வெள்ளைக்காரி.
“இவ தான்… வல்லகி”, என ஏஞ்சல் அவளைக் கைகாட்டினாள்.
“வாட்…. வலகி?”
“வல்லகி மேம்….. “, ஏஞ்சல் திருத்தினாள்.
“அதுக்கு அர்த்தம் என்ன?”, சிகரெட்டைப் பத்த வைத்தபடிக் கேட்டாள்.
“வீணை…. இந்தியன் ட்ரெடீஷனல் ம்யூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட்”, ஏஞ்சல்.
“ஐ சீ….. ஷி லூக்ஸ் கார்ஜியஸ் …. அண்ட் ஷார்ப்”, என உள்ளே புகையை இழுத்து மெதுவாக பிறைசூடன் முகத்தில் புகையை விட்டாள்.
“ஏய்…. அவருக்கு ஸ்மோங் அலெர்ஜி இருக்கு”, பாலா பிறைசூடன் இருமியதும் சத்தம் போட்டாள்.
“இது யாரு லிட்டில் பொட்டேட்டோ”, என பாலாவைப் பார்த்துக் கேட்டாள்.
“அவ பிரண்ட் மேம்”, ஏஞ்சல்.
“ஷட் அப் லிட்டில் பொட்டேட்டோ…. மிஸ்டர் பிறைசூடன்…. எனக்கு பவர்புல் கேர்ள்ஸ் ரெடி பண்ணித் தரேன்னு சொல்லிட்டு ஹால்ப்பாயில் கேர்ள்ஸ் அ என் தலைல கட்டிட்டு நீ வந்துட்ட”, என பிறைசூடன் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடிப் பேச ஆரம்பித்தாள்.
“என்னோட பெஸ்ட் கேர்ள்ஸ் ஏஞ்சல் அண்ட் கேட் தான். அவங்கள உனக்கு குடுத்து அக்ரீமெண்ட் கம்ப்ளீட் பண்ணிட்டு தான் நான் வந்தேன்”, இருமியபடிப் பேசினார்.
“பட்…. கேட் இஸ் கான்… அவ போய்ட்டா….. “, அசால்ட்டாகக் கூறினாள்.
“என்ன?”, என பிறைசூடன் ஏஞ்சலைப் பார்த்தார்.
“அவ கடல்ல காணாம போயிட்டா…. இவ டெக்னாலஜி டெவலப் பண்றா ஆனா களத்துல இறங்கி வேலை செய்யமாட்டேங்கறா…. பயப்பட்றா…. எனக்கு இந்த பொண்ணு வேணும்… புல்லா ட்ரைன் பண்ணி நான் சொல்றத கேக்கறமாதிரி மாத்தி குடு”, என வல்லகியின் உடலை விரலால் அளந்தவாறுக் கூறினாள்.
“அவளுக்கு நான் எதுவும் பண்ணல… அவ உன் அக்ரீமெண்ட் ல வரமாட்டா”, பிறைசூடன் முயன்று இருமலைக் கட்டுப்படுத்திக் கோபமாகப் பேசினார்.
“யூ நோ….. எனக்கு மறுத்து பேசினா பிடிக்காது”, எனப் பிறைசூடனின் தோளில் சிகரெட்டை வைத்து அழுத்தினாள்.
“இவ…. இவள நான் உனக்கு குடுக்க முடியாது…. வேற ஒருத்தர் கேட்டு இருக்காரு”, என பிறைசூடன் வலியைப் பொறுத்தபடிக் கூறினார்.
“யார் அது?”, புருவம் உயர்த்தி ஹை ஹீல்ஸ் தட் தட் என சத்தம் கொடுக்க நடந்தபடிக் கேட்டாள்.
“சொல்லமுடியாது”
“ஐ நோ…. இவர் தானே”, என அதித் போட்டோவைக் காட்டினாள்.
பிறைசூடன் ஒரு நொடி கண்கள் விரித்துப் பார்த்துவிட்டு, “நீ அந்த பொண்ணை கேக்கறது இவருக்கு தெரிஞ்சா கொண்ணுடுவாரு”
“ஹாஹாஹாஹாஹா….. யூ சில்லி….. ஒன் மினிட்…. ஏஞ்சல் கால் மை டார்லிங்”, எனக் கூற, ஏஞ்சல் அந்த லேப்பில் இருந்த சிஸ்டமில் இருந்து வீடியோ கால் செய்தாள்.
“ஹேய் டைஸி டார்லிங்…. அங்க போயிட்டியா?”, அதித் உற்சாகமாகப் பேசினான்.
“எஸ்…. இவன் என்னமோ சொல்றான் டார்லிங்”, என டைஸி பிறைசூடனைக் காட்டினாள்.
“ஹேய் சயின்டிஸ்ட்….. எங்க என் ப்ராடெக்ட்?”, எனச் சிரித்தபடிக் கேட்டான்.
“சார்… ப்ளீஸ்…. ஷி இஸ் நாட் ஏன் ப்ராடெக்ட்…. ஷி இஸ் சம்திங்…. ஐ கான்ட் அன்டர்ஸ்டாண்ட்…. ஐ நீட் மோர் டைம்”,என மன்றாடினார்.
“உனக்கு இதுக்கு மேல டைம் குடுக்க என்கிட்ட டைம் இல்ல பிறை…. அங்க எல்லாம் ரெடி ஆகிட்டு இருக்கு…. நீ உடனே செஞ்சே ஆகணும்… “, அதித் புன்னகை முகம் மாறாமல் பேசினான்.
“எந்த வேலைக்கு உனக்கு நான் தேவை மிஸ்டர்?”, என வல்லகி கட்டியிருந்தக் கயிற்றைப் பின்னல் இட்டு தூக்கி எறிந்துவிட்டு எழுந்து வந்தாள்.
“வாவ் ….. கார்ஜியஸ்….. டைஸி… உனக்கு அவள பிடிச்சிருக்கா?”, என வல்லகியைப் பார்த்தபடிக் கேட்டான்..
“ஆமா டார்லிங்… அவ ரொம்ப ஷார்ப்… ரொம்பவே அழகா இருக்கா…. எனக்கு அவ வேணும்”, என கண்கள் மின்னக் கூறினாள்.
“ஓக்கே…. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் நீ எடுத்துக்க”, எனக் கூறினான்..
“டார்லிங் ஏற்கனவே ஒரு நல்ல திறமைசாலிய நான் இதுல இழந்துட்டேன். இவளையும் இழக்க விரும்பல”, எனக் கெஞ்சலாகக் கூறினாள்.
“உனக்கு கைகால் அமுக்கிவிட்ற ரோப்போவா குடுக்கறேன்”,என அதித் ஆவேசமாக கேட்டுவிட்டு, பின் தன்னை சமன்படுத்திக்கொண்டு, “டைஸி டார்லிங்…. யூ நோ எனக்கு இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம்னு….. இதுக்காகவே எனக்கு நேச்சர் இவள கிப்ட் பண்ணி இருக்கு…. ஐ நீட் டூ கம்ப்ளீட் மை ஜாப் நௌ”, என மென்மையாகக் கூறினான்.
“ஓக்கே டார்லிங்…. அதுக்கு அப்பறம் இவ எனக்கு மட்டும் தான். டீல்?”, டைஸி.
“டைஸி டார்லிங்… நம்ம டீல் எல்லாம் இப்படியா நடக்கும்…. சீக்கிரம் இங்க தூக்கிட்டு வா எல்லாத்தையும்… நேர்ல டீலிங் முடிவு பண்ணிக்கலாம்”, என மயக்கும் புன்னகை முகத்துடன் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு வல்லகியைப் பார்த்தான்.
“நைட் வந்துடறேன் டார்லிங்”, டைஸி உள்ளுக்குள் பயந்துபோய் பதிலளித்தாள்.
“ஹேய் ப்யூட்டி கேர்ள்…. கம் சூன்…. “, எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
பாலா வாயில் முன்பே ப்ளாஸ்டர் ஒட்டி இருந்ததால் அவள் அவர்களின் உரையாடலுக்கு நடுவே வர இயலவில்லை.
வல்லகி தன் கையில் இருந்தக் கட்டையும் அவிழ்த்துவிட்டு, பாலா மற்றும் பிறைசூடனின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு அவர்களை சேரில் அமரவைத்தாள்.
டைஸி அவள் செய்யும் அனைத்தையும் கவனித்தபடி அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்தாள்.
பிறைசூடன் இருமல் நிற்க மருந்து எடுத்துக்கொண்டு, “கேட்க்கு என்னாச்சி?”, என சற்றுத் திடமாகக் கேட்டார்.
“கடல்ல எதோ தேடணும்னு சொன்னாங்க. நாங்களும் போனோம்…. நாங்க போகவேண்டிய இடத்துக்கு என்ன செஞ்சும் போக முடியல… கேட் நீந்தியே போய் பாக்கறேன்னு போனா…. திரும்பி வரவே இல்ல”, ஏஞ்சல் லேசாக விம்மியபடிக் கூறினாள்.
“என்னோட பெஸ்ட் ரிசர்ச் கேட். அவள இப்படி பண்ணிட்டியே மிஸ். டைஸி…. உன்ன இதுக்கு மேல சும்மா விடமாட்டேன்”, என அடிக்க பாய்ந்தார். அவரை நால்வர் பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்.
வல்லகி அவர்களைத் தடுக்கப் போக இன்னும் நால்வர் வந்து அவளைப் பிடித்துக்கொண்டனர்.
நால்வரையும் அடித்து வீழ்த்திவிட்டு பிறைசூடனைக் காக்க செல்கையில், இன்னும் இருபது பேர் அவளைச் சுற்றி வளைத்தனர்.
“ரொம்ப எனர்ஜி வேஸ்ட் பண்ணாத கார்ஜியஸ்…. அவன் பேசின பேச்சுக்கு உயிரோட இருக்க கூடாது. ஆனா அவன் தேவைன்னு அதித் சொல்லிட்டார். அதான் விட்றேன். கம்மான் காய்ஸ்… கெட் தெம் டூ அவர் ப்ளேன்”, என அவர்களை பின்பக்க வாசல் வழியாக வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் டைஸி.
முகுந்தன் அனுப்பிய ஆள் முகுந்தனுக்கு தகவல் அனுப்பிவிட்டு, அந்த வண்டியைப் பின்தொடர்ந்தான்.
தர்மதீரனும், முகுந்தனும் அவ்விடம் வந்து எதாவது தகவல் இருக்கிறதா என ஆராய்ந்தனர்.
அப்போது அது அவர்கள் கண்ணில் பட்டது…..