27 – ருத்ராதித்யன்
நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் ..
“எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட் ஏன் எந்த ப்ராக்ரஸ் உம் காட்டல?”, ஆருத்ரா சக்தியையும், ஆழிமதியையும் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் .
“மேம் அவன் இன்னும் பொருளே ஒழுங்கா வாங்கி குடுக்கல .. கவர்ன்மெண்ட் குடுத்த பணத்த அண்ணன் தம்பி ரெண்டு பெரும் மாறி மாறி சொத்தா வாங்கி போட்டு செலவு பண்ணிட்டு இருக்காங்க .. அதுவும் விதுரன் பண்ற அழிச்சாட்டியம் சொல்ல முடியல .. ஒரு பொண்ண கூட வேலை பாக்க விடாம வந்து இம்சை பண்றான் ..“, சக்தி தனக்கு வந்த தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தான்.
“அவன அங்க வராம பண்ணுங்க .. எனக்கு இன்னும் பத்து நாள்ல 10% ப்ராக்ரஸ் அதிகமா காட்டனும் .. அங்க யார பாக்கணுமோ பாத்து வேலைய சீக்கிரம் முடி. அவனுங்க நம்மள டிரேஸ் பண்றதுக்கு முன்ன நாம வேலைய முடிச்சிடணும். புரிஞ்சதா ?”
“மேம் .. ஒரு சந்தேகம் .. “, ஆழிமதி தயங்கிய படி கேட்டாள்.
“என்ன? “ என்பது போல ஆருத்ரா அவளை பார்த்தாள்.
“அவங்கள ப்ராஜக்ட் எடுக்க விட்டு இப்போ அதை நாமலே பண்றதுக்கு நாமலே அந்த ப்ராஜக்ட் வாங்கி இருக்கலாமே மேம் ?!”, வெகு நாட்களாக தனக்கு இருந்த சந்தேகத்தை கேட்டாள்.
“நம்ம எடுக்கறது பெரிய விஷயம் இல்ல மதி .. நமக்கு அவங்க மட்டுமில்ல இன்னும் கொஞ்ச பேர் அந்த ப்ராஜக்ட் நம்ம முடிக்க கூடாதுனு தொந்தரவு குடுத்துட்டே இருந்து இருப்பாங்க .. இப்போ அந்த இம்சை இல்லாம நம்ம வேலை அமைதியா நடக்குது. நம்ம மட்டும் தான் அந்த ப்ராஜக்ட் செய்ய முடியும்னு இல்லை.. நம்மள தவிர நிறைய நல்ல கம்பெனீஸ் இருக்காங்க. அவங்களும் மேல வரணும்னு தான் இப்டி பண்றோம் ..இதுல நம்ம கம்பெனி மட்டும் இல்ல நிறைய சின்ன சின்ன கம்பனீஸ் இதுல கலந்து இருக்கு.. சக்தி மெடிரியல்ஸ் சீக்கிரம் வரதுக்கு ஏற்பாடு பண்ணு.. அடுத்த வாரத்துல இந்த ஸ்டேஜ் கம்ப்ளீட் ஆகி இருக்கணும்“, என கூறிவிட்டு ஆருத்ரா இல்லம் கிளம்பினாள்.
“அப்பாஆ .. முடியல .. என்னை யாராவது தத்து எடுத்துக்கோங்களேன்..“, எனக் கூறியபடி சக்தி அங்கிருந்த ஷோபாவில் விழுந்தான்.
“நான் வேணா எடுத்துக்கவா சக்தி ?”, என மதி சிரித்தபடிக் கேட்டாள் .
“நக்கலா .. போங்க போய் வேலைய பாருங்க ..“, என சிடுசிடுத்துவிட்டு சக்தி எழுந்தான்.
“ஒரு நிமிஷம் சக்தி .. நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்ல .. சொல்லிட்டு போங்க“, என முறைப்புடன் அவன் செல்ல முடியாதவாறு வழியை மறைத்து நின்றாள் .
“உனக்கு பதில் அப்பவே சொல்லிட்டேன் மிஸ்.ஆழிமதி .. எனக்கு விருப்பம் இல்ல .. இப்போ நீங்க வழி விட்டா நல்லது “, இழுத்து பிடித்த பொறுமையுடன் கூறினான்.
“எனக்கு சாதகமான பதில் வர வரைக்கும் உங்கள விடமாட்டேன் சக்தி. இப்போ நீங்க போங்க “, என அவனை விட்டு விலகி நின்றாள்.
சக்தி அவளை முறைத்து விட்டு வெளியே சென்றான்.
“தனுப்பா .. தனுப்பா .. “, என அழைத்தபடியே உள்ளே வந்தாள்.
“பாப்பா .. ஐயா பின்னாடி பைரவன்கிட்ட இருக்காரு ..”, என ஒரு வேலையாள் சொல்ல அவள் அங்கே சென்றாள்.
அங்கே பைரவன் அவரிடம் விளையாடிய படி சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். அவரின் மேல் ஏற முயன்று தாவுவதும், மண்ணில் உருள்வதும் என செய்தவனை கண்டால், ஒரு சாக்லேட் உருண்டை கீழே உருள்வது போல தான் இருந்தது.
“குதி டா .. இன்னும் குதி .. அப்டி தான் மேல ஏறு பாப்போம் “, என ரண தேவ்வும் அவனிடம் விளையாடிக் கொண்டிருந்தார்.
“என்ன பைரவன் கூட ஒண்ணாகிட்டீங்க போல ?”, என கேட்டபடி வந்த ஆருந்தராவிடம் ஓடினான் பைரவ்.
“என்ன டா ? தூக்கணுமா ?”, என அவள் கேட்டதும் எம்பி அவள் கைகளை பிடித்தான்.
அவளும் ஓடி வரும் சாக்லேட் பந்தை வாரி அணைத்தபடி ரணதேவ் அருகில் வந்தாள்.
அவர் அருகில் வந்ததும் அப்படியே அவரின் மேல் விழுந்து அவரின் மடியில் படுத்துக் கொண்டான் பைரவ்.
அவனது புத்திசாலி தனத்தை கண்டு இருவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து அவனை சிரிப்புடன் பார்த்தனர்.
“சரியான கேடி டா நீ .. என்கிட்ட பாசமா ஓடி வர்றனு பாத்தா அவர் மடில படுக்க என்னை நீ சாதகமா பயன்படுத்தி கிட்ட ல ..”, என ஆருத்ரா அவனை முறைத்தாள்.
அது அவளை பார்த்து வாய் திறந்து அழகாக சிரித்தது.
கள்ளமற்ற சிரிப்பினில் கள்ளத்தனத்தை ஒளிக்கும் அவனது மதி கண்டு இருவருமே வியந்து தான் போயினர்.
“டேய் படுவா .. இது நான் ஒத்துக்க மாட்டேன் .. நீ கீழ ஏறங்கு “, என ரணதேவ் பேசவும் முகத்தை பாவமாக வைத்து கொண்டு அவர் தோளில் ஏறி தலை வைத்துப் படுத்து கொண்டது.
அவனது சேட்டைகளை இருவரும் ரசித்தபடி சிரித்து கொண்டிருந்தனர்.
“பாத்தியா சிங்கம்மா இவன .. சரியான கேடியா இருக்கான் .. எவ்ளோ நடிப்பு மூஞ்சில .. இவன நாய்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க .. அவன் நினைக்கறதை எப்படி யோசிச்சி செஞ்சிக்கறான் .. இது வரை நான் பாத்த வகைல இவன் ரொம்பவே புதுசு .. கொஞ்சம் நம்ம அசால்ட்டா இருந்தோம் அவ்ளோ தான் .. “, என சிரித்தபடி கூறியவர் அவனை கீழ இறக்கி விட்டு விட்டு ஆருத்ரா புறம் திரும்பினார் .
பைரவ் மீண்டும் அவரை தூக்க சொல்லி அடம் பிடித்தபடி அவர்கள் கால்களை சுற்றி சுற்றி வந்தது .
“கொம்பா .. இவன இழுத்துட்டு போடா “, என அவர் சத்தம் போடவும் கொம்பன் வந்து வாயில் கவ்வி கொண்டு தூக்கி போனது.
இதுவோ தலை கை கால என அனைத்தும் ஆட்டி ஆட்டி கீழே இறங்க முயற்சித்தது.
அதை கண்ட ஆருத்ரா அவன் சேட்டைகளை ரசித்தபடி நின்றாள்.
“என்னம்மா சீக்கிரம் வந்துட்ட ?”, பேத்தியிடம் பேச்சை ஆரம்பித்தார் .
“மேகமலை போகணும் தனுப்பா .. அங்க கொஞ்சம் வேலை இருக்கு.. அதான் நைட் கெளம்பனும் “, என கூறியபடி மற்ற விலங்குகள் பறவைகள் எல்லாம் பார்த்தபடி நடந்தாள்.
“எனக்கும் போகணும் தான் .. அந்த தம்பி லீஸ் டாக்குமென்ட் ரெடி பண்ணிட்டு கூப்பிட்டாரு .. “
“சரி வாங்க ஒண்ணாவே போயிட்டு வரலாம் .. எனக்கும் அந்த பொண்ணு யாத்ரா பாக்கணும் போல இருக்கு .. நல்ல சுட்டி .. நல்லா பேசறா தனுப்பா …”, ஆருத்ரா யாத்ராவின் நினைவில் பேசினாள் .
“ஆமா மா .. அந்த குடும்பமே எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு .. ஆயிரம் வித்யாசம் இருந்தாலும் அன்புல எல்லாரும் ஒண்ணா நிக்கறாங்க .. “, மனதில் ஒன்றை நினைத்தபடி பேசினார் .
“அந்த பொண்ணுக்கும் அர்ஜுனுக்கும் தான் கல்யாணம் .. அவரு மிஸ்டர் ..”, என யோசித்தவள், “அவங்க அண்ணன் ஆதித்தியா தானே தனுப்பா ?”, என கேள்வியோடு அவரை பார்த்தாள்.
ஆம் என அவர் தலை அசைத்ததும், “அவருக்கு கல்யாணம் ஆகிரிச்சா ?”, என கேட்டாள்.
“இல்லமா .. பொண்ணு பாத்துட்டு இருக்கறதா சொன்னாங்க “, எனக் கூறி விட்டு அவள் முகம் பார்த்தார்.
எந்த தடுமாற்றமும் இல்லாமல், “நல்ல ஃபேமிலி .. சீக்கிரமே நல்ல பொண்ணு கிடைக்கும் .. சரி வாங்க போய் டீ குடிச்சிட்டு கெளம்பலாம் .. “, என சிரித்த முகமாக முன்னே நடந்தாள்.
“ஐயா .. . ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது.. பாப்பாவ கூட்டிட்டு வந்துடுங்க “, என மிதிலன் அழைத்தது மனதில் வந்து சென்றது.
“சரி மிதிலா .. வந்துடறேன் .. யட்சிய இந்த முறை பாப்பாகிட்ட காட்டனும் .. “, என கூறிவிட்டு வைத்தார்.
ஆருத்ரா தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, அதை காரில் வைக்க வேலையாளிடம் கூறினாள்.
ரணதேவ் தாத்தாவும் தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு பைகளை எடுத்து வெளியே வைத்தார்.
ஆருத்ராவின் பைகளை எடுத்து வைத்துவிட்டு, தாத்தாவின் பையை எடுத்து வைக்கும் சமயத்தில் கொம்பனிடம் இருந்து தப்பித்து வந்த பைரவன், கீழே வைத்திருந்த பையின் மேல் ஏறி கார் டிக்கியில் போய் வாகாக அமர்ந்து கொண்டது.
ஆருத்ராவும் ரணதேவ் தாத்தாவும் காரில் அமர்ந்ததும் மேகமலை நோக்கி புறப்பட்டனர். உடன் நமது பைரவும் மேகமாலைக்கு பயணப்படுகிறான் ..