29 – காற்றின் நுண்ணுறவு
காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான்.
சுமார் நாற்பது போர் கொண்ட குழு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நாக் எதுவும் செய்யமுடியாமல் திணறினான்.
இளவெழிலியும், ரிஷியும் போகும் வழியெல்லாம் அடையாளத்தை விட்டபடிச் செல்ல, நாக் அதை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்துச் சென்றான்.
இரண்டு மணி நேரத்தில் காட்டைக் கடந்து ரோட்டிற்கு வந்து பத்து லாரியில் அவர்களைப் பிரித்து பிரித்து ஏற்றினார்கள்.
அவர்களின் பொருட்களும் அவர்கள் ஏறிய வண்டியிலேயே ஏற்றப்பட்டது.
ம்ரிதுள் அங்கே அமர்ந்தபடி இங்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தான்.
“ரிஷி…. ரிஷி….”, இளவெலிழி அழைத்தாள்.
“ஒவ்வொரு வாகனத்திலும் ஐந்து அடியாட்களும் அவர்களுக்கு நான்கு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
“என்ன?”, ரிஷி சைகையில் கேட்டான்.
“விநோத் எங்க?”
“வேற வண்டில ஏத்திட்டாங்க”
“நாம எப்படி தப்பிக்கறது?”
“தப்பிக்க முடியாது …”
“வேற என்ன பண்றது?”
“நாச்சியா இருக்கற இடத்துக்கு கூட்டிட்டு போறாங்கன்னு நினைக்கறேன்”
“அப்படி இருக்குமா?”
“ஆமா… இல்லைன்னா நம்மல இத்தன ஆளுங்க அனுப்பி ஏன் கூட்டிட்டு போகணும்?”
“நாம நாச்சியா இருக்கற இடத்துக்கு போலன்னா?”
“பாப்போம்….”
காய்கறிகள் ஏற்றும் லாரியில் தான் அவர்களை பதுக்கி அமரவைத்து அழைத்துச் செல்கின்றனர்.
விநோத் அவனின் தங்கையை வைத்து மிரட்டியதில் இருந்து, பெரும் கோபத்தை மனதில் தேக்கி வைத்துக்கொண்டிருந்தான்.
ஒரு செக் போஸ்டில் வண்டி நின்றதும் அவன் எகிறி குதித்து தப்பிக்க முயற்சித்தான்.
ஆட்கள் அவனை ரிஷி மற்றும் இளவெலிழி இருக்கும் வண்டியில் ஏற்றி நையப் புடைத்து அடித்தனர்.
அதிலேயே அவனுடல் பாதி உயிரை விட்டிருந்தது.
ரிஷியும் மற்றவர்களும் எத்தனைக் கதறியும், வினோத் அடிவாங்குவதைத் தடுக்க முடியவில்லை.
“டேய்… விட்றுங்கடா….. வேணாம் டா”, என ரிஷி கதறினான்.
“ப்ளீஸ் விட்றுங்க… அவன் தெரியாம பண்ணிட்டான்….விட்றுங்கடா…. “, என இளவெழிலி மற்றொருபுறம் அடிப்பவர்களைத் தடுக்க முயன்றாள்.
தடுக்க முயன்றவர்களுக்கும் நான்கு அடி பரிசாகக் கிடைத்தது.
“இங்க பாருங்க…. நாலு மணிநேரத்துல போய் சேந்துடுவோம். அப்பறம் நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க…. என்ன முயற்சி பண்ணாலும் இனி தப்பிக்க முடியாது”, எனக் கூறிவிட்டு ஒரு வண்டிக்கு இருவரை மட்டும் விட்டு வைத்துவிட்டு புதிய வாகனங்களில் இரண்டிரண்டு பேராக ஏற்றினர்.
ரிஷி, விநோத், இளவெலிழி மூவரை மட்டும் ஒரே வாகனத்தில் ஏற்றினர்.
ஒருவன் ஒரு போனைக் கொண்டு வந்து கொடுத்தான்.
“ம்ம் பேசு”
ம்ரிதுள் அந்த பக்கம் திரையில் தெரிந்தான்.
“ஹாய் காய்ஸ்…. காட்டுல நல்லா சாப்டு எல்லாரும் ரொம்ப தெம்பா இருக்கறதா கேள்விபட்டேன். அந்த எனர்ஜிய ஏன் அடிவாங்கி வேஸ்ட் பண்ற வினோத்?”, எனக் கேட்டான்.
வினோத் எழுந்து அமர முயன்றுத் தோற்றான்.
ம்ரிதுள், “ஏய்”, என்ற சத்தம் கொடுக்க இருவர் வந்து வினோத்தை நேராக அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர்.
“உன் சாவு என் கைல தான்”, வினோத் பேசமுடியாமல் பேசினான்.
“வா முயற்சி பண்ணு…. ரிஷி அண்ட் இளவெழிலி…. இங்க பாருங்க”, எனக் கேமிராவை நாச்சியா மற்றும் ராகவி இருக்கும் பக்கம் திருப்பினான்.
இருவரும் எதைப்பற்றியோ தீவிரமாகப் பேசியபடிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
“உங்க ப்ரண்ட்ஸ் இரண்டு பேரும் இப்பவரை பத்திரமா தான் இருக்காங்க… நீங்க அமைதியா இங்க வந்து உங்க ப்ரண்ட்ஸோட ஜாயின் ஆகிடுங்க. … இனிமே யாராவது தப்பிக்க முயற்சி பண்ணா சுட்டு உடம்ப காட்டுல தூக்கி போட சொல்லி இருக்கேன். புத்திசாலி டீம். புரிஞ்சிப்பீங்க”, எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
ரிஷியும், இளவெழிலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வினோத்தைப் பார்த்தனர்.
அவன் பாதி மயங்கிய நிலையில், “நாச்…..சி”, எனக் கூறியபடி முழுதாக மயங்கினான்.
ரிஷி, “வினோத்… டேய் வினோத்.. இங்க பாருடா….. கண்ண தொறடா…. வினோத்”, என இளவெலிழியும் அவனை எழுப்பினாள்.
“அய்யய்யே….. சும்மா நொய் நொய்னு இருக்காதீங்க…. இந்தா பத்து போடு…. தண்ணிய வாய்ல ஊத்தி விடு… கத்திகிட்டே வந்தீங்க சொருவிடுவேன்…. இந்தா சாப்பாடு… திண்ணுட்டு தூங்கு…. ஊர் வந்ததும் தட்றேன்”, என ஒருவன் முதலுதவி பெட்டியுடன் உணவும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
மூன்று மணிநேரத்தில் எல்லைத் தாண்டி காட்டுவழியில் ஒவ்வொரு வாகனமாக அவர்களை வந்து ஒவ்வொரு இடத்தில் இறக்கி விட்டு சென்றது.
மொத்தம் அறுபது அடியாட்கள் வெறும் பணிரெண்டு பேரை இழுத்து வருவது மிகவும் கொடுமை தான்.
அவர்கள் டென்ட்களில் சேர்த்து வைத்திருந்த பொருட்களுடன், அவர்களது மற்ற பொருட்கள் எல்லாம் பெரிய பெட்டிகளில் திணிக்கப்பட்டு இருந்தது.
அந்த பெட்டிகள் முதல் வேறு பைகள் வரை அனைத்தும் அந்த அடியாட்கள் தூக்கிக் கொண்டு நடக்க இவர்கள் பணிரெண்டு பேரும் நடுவில் வந்தனர்.
வினோத்தை ரிஷியும், மற்றொருவனும் தோள்களில் தாங்கியபடித் தூக்கி வந்தனர்.
இத்தனை பேர் இருந்தும் காட்டிற்குள் சலசலப்பு ஏற்படாமல் கூட்டம் சேராமல் அனைவரையும் பல வழிகளில் பிரித்து, பின் கலந்து என அருவிக்கு அருகில் இரண்டு மணி நேர நடையில் வந்து சேர்ந்தனர்.
“முடியலடா சாமி…. இன்னும் எவ்வளவு நேரம் இத தூக்கிட்டு நடக்கறது?”, அடியாட்களில் ஒருவன் கேட்டான்.
“கிட்ட வந்துட்டோம் போலடா…. பேசிட்டு இருக்கானுங்க….”, என அவனுடன் தூக்கி வந்தவன் பதிலளித்தான்.
இனியனுடன் நால்வர் பின்னிருந்து அவர்களைக் கவனித்தபடி வந்து பின்னால் இருந்து மயக்கமருந்துக் கொடுத்தனர்.
சத்தம் வராமல் நான்குப் பேரை மயக்கி, அருவிப் பாறைக்கு அருகில் கொண்டு வந்து அவர்கள் உடையை இவர்கள் மாற்றிக்கொண்டு, இவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு பின்னால் சென்றுக் கூட்டத்தோடு நின்றுக்கொண்டனர்.
“புது பசங்களா…. முன்ன வாங்கடா”, என முன்னிருந்து ஒருவன் குரல் கொடுத்தான்.
“வாங்க பாஸ்… நம்மல தான் கூப்பிடறாங்க”, என அருகில் இருந்தவன் அழைத்தபடி முன்னே சென்றான்.
இவர்களும் பெட்டியை தூக்கிக்கொண்டு முன்னே சென்றனர்.
“அந்த பெட்டிய தூக்கிட்டு வந்து இந்த வண்டில ஏத்திட்டு இதுல போங்க…”, ஒருவன் கட்டளையிட்டான்.
“சரிங்கண்ணா…. அண்ணா…. காசு….”, என அருகில் இருந்தவன் கேட்டான்..
“உன் அக்கவுண்ட்ல போட்றுவாங்கடா… உன்கிட்ட குடுத்த அட்டைய காட்டு போதும்”, என விவரம் அனுப்பி வைத்தான்.
இனியன் மற்றவர்களுக்கு கண் காட்டிவிட்டு தன் உடையில் துலாவினான்.
அவன் உடையில் எந்த அட்டையும் இல்லை. இனியன் மற்றவர்களிடம் அதை சைகையால் கூறிவிட்டு அருகில் இருப்பவனிடம் பேச்சு கொடுத்தான்.
“ஏன் பாஸ் அந்த அட்டை இல்லன்னா காசு போடமாட்டாங்களா?”, எனக் கேட்டான்.
“முதல்ல கால் வாசி தான் போடுவாங்க. வேலைய முடிச்சிட்டு கார்ட் காட்டினா தான் முழுசா போடுவாங்க பாஸ். ஏன் பாஸ்?”
“இல்ல என்னோடது மிஸ் ஆயிடிச்சி போல…. அதான் என்ன பண்றதுன்னு …….”, என இழுத்தான்.
“பாஸ் நீங்க என்கிட்ட தானே குடுத்து வச்சீங்க… இந்தாங்க… நானும் இவ்வளவு நேரம் குடுக்க மறந்துட்டேன்”, என அவன் எடுத்துக் கொடுத்தான்.
“நீங்க என்ன பாஸ் படிச்சிருக்கீங்க?”
“ஐபி….. ஐடி பாஸ்… நீங்க?”
“நானும் கம்ப்யூட்டர் என்ஜினியர் தான் பாஸ். எங்கயும் வேலை கிடைக்கல… அதான் இங்க என்ஜினியர் வேணும்னு கேட்டாங்கன்னு சேந்துட்டேன். நீங்க எந்த ஊரு?”
“நான்… நாகபட்டிணம்.. நீங்க?”, இனியன் அவனிடம் பேச்சு கொடுத்தபடித் தடத்தை மனதில் பதியவைத்துக்கொண்டான்.
“நான் சென்னை தான். மேலகுப்பம்…. அங்க தான் வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டாங்கன்னு வந்தேன். இங்க வந்தா இப்படி ஒரு வேலை… வீட்ல எல்லாரும் பட்னி கெடக்கறாங்க… அதான் இதாவது கெடச்சதேன்னு வந்துட்டேன்… நல்ல வேலை நம்மல கொலை பண்ண சொல்லல….”, என அவன் தன்னையே சமாதானம் படுத்திக்கொண்டிருந்தான்.
“ஏன் கொலை பண்ண சொன்னா என்ன ?”, இனியன்.
“அய்யோ பாஸ்…. அதுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்ல…. நான் டெக்னாலஜில எதாவது செய்யலாம்னு தான் வந்தேன்…. கொலை பண்றது ரொம்ப தப்பு”
“சட்டத்துக்கு விரோதமா ஐஞ்சு பைசா திருடினாலும் தப்பு தான் பாஸ். இப்ப நாம கடத்திட்டு போயிட்டு இருக்கோம்…. வாங்க வண்டி நின்னுடிச்சி”, என கீழே குதித்து இறங்கினான்.
நாச்சியாரும், ராகவியும் பால்கனியில் அமர்ந்து எதையோ தேடிக்கொண்டிருந்த சமயம் தான் வண்டி அந்த பங்களா வாசலில் நின்றது.
யோகேஷின் மற்ற ஆட்கள் வந்த புது ஆட்களின் அட்டையை சோதித்து உள்ளே விட்டுக் கொண்டிருந்தனர்.
இனியனும் அவனுடன் வந்த மற்ற நால்வரும் பார்வையைக் கூராக்கி கொண்டு, அந்த இடத்தை அளக்க ஆரம்பித்தனர்.
நாச்சியார் இனியன் இறங்கியது முதல் அவன் தோரணை அவன் பார்வைகள் செல்லும் இடம் என அனைத்தும் கவனித்துக்கொண்டிருந்தாள்.
இனியன் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் வெவ்வேறு வழிகளில் அனைவரும் அந்த இடத்திற்கு வந்துச் சேர்ந்தனர்.
நாச்சியார் தன் நண்பர்களைக் கண்டதும் ஓடிச்சென்றுக் கட்டிக்கொண்டாள்.
“யாருக்கும் எதுவும் ஆகல தானே…. ரிஷி…. இளா…. வினோத் எங்க? ஹேய் நித்யா சதா சிவ்….. “, என அனைவரையும் நலம் விசாரித்து அனைவரையும் கண்களால் ஆராய்ந்தபடி இருந்தாள்.
“வினோத் எங்க?”, என கடைசியில் நின்றவனிடம் கேட்டாள்.
“அவன அடிச்சிட்டாங்க… தூக்கிட்டு வராங்க அங்க….”, என வாசலைக் கைக்காட்டினான்.
“அடிச்சாங்களா… ஏன்?”, பதறிக் கேட்டாள்.
“அவன் தப்பிக்க ட்ரை பண்ணான் நாச்சியா… அதான் தட்டி தூக்கிட்டு வராங்க…. “, எனக் கூறியபடி ம்ரிதுள் அங்கே வந்தான்.
“அதுக்கு அவன இப்படி அடிப்பிங்களா? ஸ்கொன்ட்ரல்ஸ்…. “, என கத்திவிட்டு வினோத் அருகில் சென்றாள்.
ரிஷியும் ஓடிசென்று மற்றொரு பக்கம் வினோத்தைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.
எல்லாருக்கும் மேல மாடில தான் ரூம். ஆனா நாச்சியா ரூம் பக்கத்துல இனிமே நான் இருப்பேன். எனக்கு அப்பறம் உங்க ரூம்ஸ்…. யோகேஷ்….”, சிரித்தபடி கூறிவிட்டு அழைத்தான்.
“ம்ரிதுள்…..”
“எல்லாரையும் செக் பண்ணிட்டு ரூம்க்கு அனுப்பு….. நான் சொன்ன ஆர்டர்ல”, எனக் கூறிவிட்டுத் திரும்பினான்.
“ஒரு நிமிஷம்”, நாச்சியார் அழைத்தாள்.
“எங்க ப்ரோபஸர் எங்க?”, என அவரைக் காணாது கேட்டாள்.
ம்ரிதுள் சிரித்தபடித் திரும்பி நாச்சியாவைப் பார்த்து,”வந்தவங்கள நினைச்சி சந்தோஷப்படு”, எனக் கூறினான்.
“தசாதிபன் சார் எங்க?”, மெல்ல நடந்து அவன் அருகில் வந்துக் கேட்டாள்.
ம்ரிதுள் அமைதியாகவே நின்றிருந்தான் அவளை நேருக்கு நேர் பார்த்தபடி.
“சொல்லுடா… அவர் எங்க?”, என அவன் சட்டையைப் பிடித்தாள்.
யோகேஷ் ஆக்ரோஷமாக ஆட்களுக்கு உத்தரவிட்டான் அவளை பிடிக்கும்படி.
ம்ரிதுள் ஒரு கை உயர்த்திக்காட்டிவிட்டு, “கைய எடு நாச்சியா”, என பொறுமையாகக் கூறினான்.
“அவர் செத்துட்டாரு நாச்சியா…. இவன் தான் கொன்னான்”, என இளவெலிழி கூறிவிட்டு மடங்கி கீழே விழுந்து அழுதாள்.
நாச்சியா அவன் இதயத்தை குறிவைத்து வர்மத்தை ப்ரயோகிக்க முனைகையில், ம்ரிதுள் அவளின் முதுகில் வர்மத்தை ப்ரயோகிக்க முனைந்தான்.
இருவரும் தங்களைத் தற்காத்தபடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்படியும் நாச்சியா அவன் கைகளை உடும்பாக பற்றி பின்னால் வளைத்து கழுத்தைத் திருகும் சமயம் எதிரே ஒரு குரல் அழைத்தது.