4 – காற்றின் நுண்ணுறவு
மாலத்தீவு….
ஏஞ்சல் மற்றும் கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர்.
அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர்.
“என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட இம்ப்ரூமெண்ட் தெரியமாட்டேங்குது…”, ஏஞ்சல் சலிப்புடன் கூறினாள்.
கேட் கையில் மதுபுட்டியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்தபடியே யோசனையில் இருந்தாள்.
“நாம எங்கயோ தப்பு பண்றோம் கேட்…. அது என்னனு புரியல… “, ஏஞ்சல் மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பித்தாள்.
அப்பொழுதும் அமைதியாகவே இருந்த கேட் ஏதோ தோன்ற டக்கென எழுந்தவள் “காய்ஸ்…. கமான் லெட்ஸ் ரைட் அகைன்”, என போட் இருக்கும் இடம் நோக்கி மதுவை உறிஞ்சியபடி நடந்தாள்.
முடிந்த புட்டியை அங்கிருந்த குப்பைதொட்டியில் வீசிவிட்டு ஏஞ்சலை திரும்பி ஒரு பார்வை பார்த்து இங்கயே இருந்து பேசும்படி கூறிச் சென்றாள்.
“ஹேய்….. வாட்ஸ் யூ ஆர் அப்டூ நவ்?”, ஏஞ்சல் அங்கிருத்தே கத்தினாள்.
“லெட்ஸ் டால்க் ஓவர் போன் பேபி…. டோன்ட் வேஸ்ட் யூவர் எனர்ஜி…. நவ் ஐ மேக் சம் மேட் பிராக்டிகல் மூவ். யூ கைட் மீ ப்ரம் ஹியர்”, என ப்ளூடூட் காதணிகளை மாட்டியபடி போட்டில் குதித்து நின்றாள்.
“வாட் யூ ஆர் கோயிங் டு டூ கேட்?”, ஏஞ்சல்.
“தெரியாது பேபி…. நான் இப்ப பண்ற பைத்தியகாரத்தனம் நமக்கு எதாவது வழி காட்டலாம்…. சரியா அந்த பாறை கிட்ட வந்ததும் நான் கேக்கற டீடைல்ஸ் நீ சேடிலைட் மேப் பாத்து சொல்லு போதும்”.
அந்த லொகேஷனுக்கு மூன்று கி.மீ முன்பு பாறைக்கூட்டம் இருக்கிறது. கிட்டதட்ட பார்க்க ஒரு தீவைப்போலவே காட்சியளிக்கிறது. ஆனால் அனைத்தும் தனித் தனி பாறைகள் நடுவில் நீர் இருக்கிறது.
பொதுவாக பாறை இருக்குமிடம் ஆழம் குறைவாக தரைதளம் மேலேயே இருக்கும்.
ஆனால் இங்கே ஒவ்வொரு பாறையும் பல நூறு அடிகள் உயரமாக கடல் ஆழத்திலிருந்து மேல் வரை இருக்கிறது.
போட் அந்த பாறைகளின் நடுவில் தாராளமாக செல்லலாம் ஆனால் அந்த பாறைகளை தாண்டி செல்லமுடியாமல் மீண்டும் முதல் பாறைக்கே வந்து விடுகின்றன.
இல்லையென்றால் வேறு பக்கம் திசைமாறி சென்று சில மணி நேர பயணங்கள் செய்தால் மாலத்தீவின் மறுபக்க கரையில் போட் கரை சேர்கிறது.
அந்தப் பாறைகளைத் தொடாமல் சுற்றிச் சென்றாலும் வழி தவறுவதே நடக்கிறது.
அந்த மூன்று கி.மீ சுற்றளவில் ஏதோ இருக்கிறது என்பதைத் தெளிவாக கேட் அறிந்து கொண்டாள். எப்படியும் இந்த சூட்சமத்தைக் கண்டறிந்து விடவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஸ்டாப் த போட்…. கெட் மீ டைவ் இன் கிட் அண்ட் ஆக்ஸிஜன்”, எனக் கேட்டபடி கடலில் குதிக்கத் தயாரானாள்.
தலைமுடியைக் கொண்டையிட்டு ஹெட்பேண்ட் மற்றும் அரைத்தலைக் கவசம் போன்ற மாஸ்க் மாட்டியபடி, ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கட்டிவிட உத்திரவிட்டாள். மாஸ்கில் ஆக்ஸிஜன் சப்ளை சரிபார்த்து அதற்குன்டான செயற்கருவியையும் பார்த்தாள்.
ஏஞ்சல் அருகில் அவர்கள் வந்த ஹெலிகாப்ரின் பைலட் அமர்ந்து அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்தபடி அங்கு நடப்பவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார்.
“ஏஞ்சல்… நான் கடல்ல குதிக்கப் போறேன். என் ட்ராக்கிங் சிப் அ பாலோ பண்ணி நம்ம ரீச் ஆக வேண்டிய லொகேஷனுக்கு கைட் பண்ணு”, எனக்கூறி கடலில் குதித்தாள்.
பாறைக்கூட்டம் இரசிக்கத்தக்கதாக இருந்தாலும் அவள் நீரில் குதித்த இடத்தில் கூரான பாறை இருப்பது மேலிருந்து பார்க்கும் சமயம் தெரியவில்லை…
ஒரு அடி இடைவெளியில் கேட் பாறைக்கூரில் சிக்காமல் தப்பித்து நீந்தத் தொடங்கினாள்.
அவளின் லாவகமான நீந்தலும் ,அவள் அணிந்திருந்த நீச்சல் உடையும் அவளுக்கு வேகத்தை அதிகரிக்க உதவியது.
தன் கழுத்தில் இருந்த கேமிராவில் அனைத்தும் பதிவாகும்படி செய்துவிட்டு வெளிச்சம் பாய்ச்சியபடி முன்னேறினாள்.
“ஏஞ்சல்…. ஆர் யூ தேர்?”.
“எஸ் கேட்…. அங்க எதாவது பிரச்சினை இருக்கா?”.
“பெருசா ஒன்னும் இல்ல… கூறான பாறைங்க நிறைய தண்ணிக்குள்ள இருக்கு…. சின்ன சின்ன மீனுங்க இந்த பக்கம் நிறைய இருக்கு… அனேகமா இது மீன்களோட கருமுட்டைகள் கூடுற பகுதின்னு நினைக்கறேன்”.
“வேற பிரச்சினை இருக்கா?”.
“ஆமா…. தண்ணிக்குள்ள தண்ணி அடிக்க முடியலங்கறது தான் பெரிய பிரச்சனையா இருக்கு”, என சிரித்தபடிக் கூறினாள்.
“அந்த ஹெட் மாஸ்க் எப்படி இருக்கு கேட்?”.
“இப்பவரைக்கும் பிரச்சினை இல்ல ஏஞ்சல்…. நல்லாவே இருக்கு… தண்ணிக்குள்ள க்ளியரா பார்க்கமுடியுது…. நீ ஜீனியஸ் தான்”, பாராட்டினாள்.
“ஆக்ஸிஜன் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுதா?”.
“ம்ம்…..நான் எந்த பக்கம் திரும்பணும் ? “.
“இடது பக்கம் திரும்பு”
“இடதுபக்கம் ஒரே டார்க்கா இருக்கு…. லைட் ரேஸ் கொஞ்ச தூரம் கூட பாயல”.
“அங்க பெரிய மீன்கள் இருக்க வாய்ப்பு இருக்கு….. என்ன பண்ணப்போற?”.
“ஓ மை காட்…… ஏஞ்சல்…. இந்த பாறை மிதக்குது…… “, என ஆச்சரியம் குரலில் ததும்பக் கூறினாள்.
“என்ன சொல்ற பாறை மிதக்குதா?”,ஏஞ்சல் சந்தேகமாக கேட்டாள்.
“ஆமா ஏஞ்சல் … அந்த பெரிய பாறை மிதக்குது…. நேத்து நாம பார்த்த பாறை”.
“அது எப்படி சாத்தியம்?”, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“இங்க பாறைக்கு நடுவுல ஓட்டை இருக்கு…. அதுக்கு உள்ளயும் தண்ணி இருக்கு…. ஆனா…. ஏதோ வித்தியாசமான செயல்பாடு நடக்கறமாதிரி தோணுது”, எனக் கூறியபடி அந்த ஓட்டையை நோக்கிச் சென்றாள்.
“சம்திங் பிஸ்ஷி கேட்… யூ ரிடர்ன் பேக்”, ஏஞ்சல் பதற்றமாகக் கூறினாள்.
“வையிட் ஏஞ்சல் லெட் மீ செக் இட்”, என அவள் அந்த பாறையை மேலே நெருங்க நெருங்க கேட்டின் சிக்னல் பலம் குறைவதைக் கண்டுப் பதற்றமாக ,” நோ கேட்… கம் பேக் …. இட்ஸ் நாட் குட் ஐடியா”, என அதிகப் பதைபதைப்புடன் கூறினாள்.
கேட்டின் சிக்னல் முழுதுமாக மறைந்துவிட ஏஞ்சல் அந்த போட்டில் சென்றவர்களைத் தொடர்புக்கொண்டு கேட்-ஐ தேட உத்திரவிட்டாள்.
பைலட்டை அழைத்துக் கொண்டு மற்றொரு போட்-யில் கேட் இருந்த இடம் நோக்கி பாய்ந்துச் சென்றாள்.
“கேட் கிடைச்சாளா?”, ஏஞ்சல் பதற்றமாகக் கேட்டாள்.
இல்லை என்ற பதிலில் பதற்றமும் கவலையும் கொண்டாலும் ஆட்களைத் தேட உத்திரவிட்டு விரட்டினாள்.
போட்டில் இருந்த ஆட்கள் நீரில் குதித்து சிறிது தூரம் தேடினர். கேட்டின் சிக்னல் மறைந்த இடம் வரையிலும் ஆட்களைத் தேட அனுப்பினாள் ஏஞ்சல்.
கேட் சென்ற இடத்திற்கு சில மீட்டர் தூரத்திலேயே மற்ற ஆட்கள் நெருங்க முடியாத வண்ணம் ஏதோ அவ்விடம் நிகழ்ந்தது.
இரவு வரையிலும் அங்கேயே தேடியவர்கள் பலன் ஏதுமின்றி கரைத் திரும்பினர்.
பைலட் யாருக்கோ அழைத்து இங்கு நிகழும் விவரங்களைக் கூறிவிட்டு ஏஞ்சல் அருகில் வந்தார்.
“மேடம் மேலிடத்துல சொல்லிடலாமா?”,பைலட்.
“சொல்லணும் கேப்…. கேட் எப்படி மிஸ் ஆனான்னு தான் எனக்கு புரியல”, குழம்பியபடி மேலித்திற்கு தொடர்புகொள்வதைச் சற்று நேரம் தள்ளிப் போட்டாள் மறுகரைக்கு அவள் வர வாய்ப்பிருக்கலாம் என ஆட்களை மறுகரை மட்டுமல்லாது மாலத்தீவை சுற்றிலும் உள்ள கரைகளுக்கு அனுப்பித் தேட உத்திரவிட்டாள்.
அடுத்த நாள் காலை வரையிலும் கேட் எங்கும் கரை ஒதுங்கியதாகச் செய்தி வரவில்லையாதலால் மேலிடத்திற்குத் தொடர்புக்கொண்டாள்.
இங்கே பாலவதனியும் , வல்லகியும் தங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தைத் தேடிக்கொண்டிருந்தனர்.
“என்ன டி இது… இன்னும் இந்த பஸ் ஸ்டாண்ட் அ கட்டி முடிக்காம நம்மல அலைய வைக்கறானுங்க….”, பாலவதனி நடந்து நடந்து சோர்வாகி ஒரு இடத்தில் அமர்ந்தாள்.
“வா பாலா…. அந்த பக்கம் தான் இன்னும் பாக்கணும்….. “, வல்லகி நேரத்தைப் பார்த்தபடி அழைத்தாள்.
“இரு வகி. . கால் எல்லாம் வலிக்குது … கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்”
“நம்ம பஸ்ஸூக்கு டைம் ஆச்சி பாலா… வா… கொஞ்ச தூரம் தான் பாத்துட்டு பஸ்ல உட்கார்ந்துக்கலாம்”, என அவளை எழுப்பி இழுத்துக்கொண்டு பஸ்ஸைத் தேடினாள்.
“ச்சோஓஓஓ …… போ வகி…. “.
“ஏம்மா இந்த ஊர் பஸ் எங்க நிக்குதுன்னு பாத்து சொல்ல முடியுமா ?”, என ஒரு வயதான பெண்மணிக் கேட்டார்.
அவரும் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்ஸைத் தேடுவது பயணச்சீட்டை பார்த்து தெரிந்துக்கொண்டதும் ,” எங்க கூட வாங்கம்மா.. நாங்களும் இதே பஸ்ஸ தான் தேடிட்டு இருக்கோம்”, தங்களுடனே வருமாறு கூறி நடந்தாள் வல்லகி.
ஒரு வழியாக அந்த மைதானத்தின் கடைசி மூளையில் நின்றிருந்த அவர்கள் பஸ்ஸைக் கண்டுப்பிடித்து ஏறி அமர்ந்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ் பொண்ணுங்களா… ரொம்ப நேரமா நானும் இங்க தேடிட்டு இருந்தேன்… “, என அந்த பெண்மணி நன்றி கூறி தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
“அப்பாடா…… நான் இந்த பக்கம்… நீ ஜன்னல் ஓரம் உட்கார்த்துக்க”, என பாலா தன் இருக்கையைச் சாய்த்தபடி அமர்ந்தாள்.
“இந்தா பாலா ஹெட்ரெஸ்ட்”
“எனக்கு தான் உன் ஷோல்டர் இருக்கே வகி”, என சிரித்தபடி அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள். வகி அவளுக்கு தோள்களைக் கொடுத்துவிட்டு கண்களை வெளியே பதித்தாள். அந்தகாரம் தன்னில் தன்னைத் தேடத் தொடங்கினாள்
டாக்டர் நிரல்யன் தன் வீட்டில், அலுவலக அறையில் தீவிர தேடலில் மூழ்கி இருந்தான்.
“அண்ணா…. அண்ணா….. வா சாப்பிடலாம்”, சாக்க்ஷி அழைத்தபடி வந்தாள்.
“இருடா…. வரேன்…. நீ சாப்பிடு”, தலையைத் திருப்பாமலே பதிலளித்தான்.
“அண்ணா ….. மணி இப்பவே ஒன்பது மேல ஆகுது… நாளைக்கு நான் ஸ்கூல் போகணும். சீக்கிரம் வந்து சாப்பிட்டு போ… நானும் போய் தூங்குவேன்ல”,சிணுங்கியபடி அண்ணனின் முதுகில் சாய்ந்துக் கொண்டாள்.
“இருடா செல்லம்….. அண்ணாக்கு ஒரு முக்கியமான விஷயம் கிடைச்சி இருக்கு….. அத கொஞ்சம் நோட் பண்ணிட்டு வரேன்”, என தங்கையை சமாதானம் செய்தபடி தன் வேலையில் கவனமாக இருந்தான்.
“நானும் சாயந்திரத்துல இருந்து பாக்கறேன் நீ நார்மலாவே இல்லண்ணா…. என்னாச்சி? அந்த கடைசி பேஷண்ட் பத்தின ஆராய்ச்சில இருக்கியா?”, தன் ஊகத்தைக் கேட்டாள்.
“அப்படியும் சொல்லலாம்….. என் ரிசர்ச்ல முக்கியமான பாயிண்ட் அந்த பொண்ணு தான்”.
“சரி நீ நோட்ஸ் பாரு நான் உனக்கு ஊட்டி விடறேன்”, எனக்கூறிவிட்டு தட்டில் சப்பாத்தி போட்டு வந்து அவனுக்கு ஊட்டிவிட்டு தண்ணீர் கொடுத்து பாலுடன் அவனுக்கு இரவு தேவைபடும் பழங்களை வைத்துவிட்டு உறங்கச்சென்றாள்.
இரவு ஒரு மணிக்கு ஒருவழியாக தன் தேடலுக்கான சிறு தடயம் கிடைத்தபின் தங்கையைக் காண அவளறைச் சென்றான்.
அமைதியாக உறங்கும் தன் தாயும் சேயுமானவளுக்கு முன்னுச்சியில் முத்தமிட்டு, போர்வையை போர்த்திவிட்டு தன்னறைக்கு வந்து படுத்தான்.
அடுத்த வாரம் கண்டிப்பாக அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு தேடியெடுத்தக் குறிப்புகளைச் சேமித்துவைத்து விட்டு உறங்கினான்.
சுடரெழிலுடன் ராகவி கிளம்பிய இரண்டாவது நாள் ஒரு கட்டிடத்தில் இருவரும் தங்க வைக்கப்பட்டனர்.
“எழில்….. நம்மல எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க?”, ராகவி பயத்துடன் கேட்டாள்.
“தெரியல ரா…. “, சுடரெழில் வார்த்தையில் யாதென்று அறிய முடியாத உணர்வு நிறைந்திருந்தது.
“நம்ம கீதன இவங்க எதாவது செஞ்சிருப்பாங்களா?”.
“தெரியல ரா…. “
“நம்மல யார் பார்க்க வரப்போறாங்க?”
“தெரியல ரா”
“என்ன நீ எல்லாத்துக்கும் தெரியல தெரியலன்னே சொல்லிட்டு இருக்க…. “, ராகவி சற்றே குரல் உயர்த்தவும் ,” ஷட் அப்”, என்ற குரல் வாயிலில் கேட்டது.
ராகவி சுடரெழில் பின்னால் பதுங்கி நின்றாள்.
“அவள கேட்டா என்ன தெரியும் பேபி? என்கிட்ட கேளு”, என இளக்காரமாக சுடரெழிலைப் பார்த்தபடி நின்றான் அவன்.