40 – ருத்ராதித்யன்
“ஆச்சி…. அவங்கள கொண்டு வந்துட்டோம்….கண்டிப்பா இவங்கள தேடி இந்நேரம் ஆளுங்க நம்ம ஊருக்கு வந்திருப்பாங்க … வேற பாதுகாப்பான இடத்துக்கு இவங்கள கொண்டு போகணும் “,என ஆதித்யா கூறினான்.
“இத விட அவங்களுக்கு பாதுகாப்பான இடம் வேற எதுவும் இப்ப இல்ல ராசா… நீ அடுத்த வேலைய கவனி…. விக்கிரமன்கிட்ட உங்களுக்கு உதவ கூடிய ஒருத்தன பத்தி குறிப்பு இருக்கு…. அந்த பையன சீக்கிரம் இங்க கொண்டு வந்து சேத்துங்க…. இன்னும் பத்து நாள்ல அமாவாசை வருது… அது முடிஞ்ச மூணாவது நாள் உங்க கல்யாணம் நடந்தே ஆகணும். அதுக்குள்ள இவங்கள நான் தயார் பண்றேன். உங்க எல்லாருக்கும் காவல் இவங்க ரெண்டு பேரும் தான்… போக வேண்டிய பயணம் பெருசு, கஷ்டமும் கூட…. எல்லாத்துக்கும் நீங்க எல்லாரும் தயாராகனும்…”, என நெடுமாறன் முதல் கண்மயா வரை பார்த்து கூறினார்.
“பாட்டி… உங்களுக்கு நான் உதவட்டுமா”, என யாழன் அருகில் வந்தான்.
“வா தம்பி… உனக்கு தான் இங்க முக்கியமான வேலையே இப்போ இருக்கு…. குடிசைக்குள்ள ஈசானிய மூலையில ஒரு பெரிய ஜாடி இருக்கும். அதுல நீல கண்ணாடி குடுவைய உன் கையுறை போட்டு எடுத்துட்டு வா….”, என யாழனுக்கு கட்டளை பிறப்பித்து விட்டு அர்ஜுன் யாத்ரா இருக்கும் குடிசை நோக்கி சென்றார்.
யாழனும் உள்ளே மயக்கத்தில் இருந்த நுவலியை பார்த்தபடி அந்த குடுவையை எடுத்துக் கொண்டு சென்றான்.
ஆருத்ரா யாத்ரா அருகில் கவலையுடன் நின்று இருந்தாள். ஏனோ அவள் மனம் பெரிதும் வலி கொண்டது இரண்டுமுறை மட்டுமே பார்த்து பேசிய பெண்ணிடம், இத்தனை பரிவும், பாசமும் அவளுக்கு ஏற்படும் என்று அவள் என்றுமே எண்ணியதில்லை. ஆனால் இன்று அவளுக்காக இவள் மனது துடிக்கிறது, வலியுணர்கிறது.
ரணதேவ் ஏரனிடம் கூற வேண்டியதை மட்டும் கூறி மகதனை பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொன்னார். மிதிலனிடம் தமிழன்பன் தம்பதிகளுக்கு அர்ஜுன் யாத்ரா வந்து சேர்ந்த செய்தியை கூற சொல்லிவிட்டு, தனது வேலையாள் வேலனை அழைத்து வரும்படி கூறினார்.
மகதன் பாதுகாப்பாக தங்க பாறை கூட்டத்தின் பின்னால் ஓர் சிறிய நீர் வீழ்ச்சி கொண்ட இடத்தினை குகை போல குடைந்து எடுத்து அந்த காட்டை சுற்றிலும் காவலுக்கு ஆட்களை ஏவினார்.
ஆச்சி கூற கூற கண்மயாவும், யாழனும் அர்ஜுன் யாத்ரவிற்கு மருத்துவம் பார்த்து அவர்களின் மூச்சினை சீராக்கி இருந்தனர்.
அவர்களிருவரும் அபாய கட்டத்தை தாண்டிய பின் தான் ஆருதரா அவ்விடம் விட்டு அகன்றாள்.
சக்தியை அருகில் வரும்படி செய்கை செய்துவிட்டு, தன் தனுப்பாவிடம் வந்தாள்.
“சிங்கம்மா….. ஒன்னும் பிரச்சினை இல்லயே?”, அவளது முகவாட்டம் கண்டு கேட்டார்.
“அது இருக்கறது தான் தனுப்பா.. ஆனா இந்த பிரச்சனைய எப்படி தீர்க்கப்போறோம்…? அந்த ரிஷித் மனுஷ ஜென்மமே இல்ல தனுப்பா …. நல்லா இருந்தவங்கல எப்படி செஞ்சி வச்சி இருக்கான்… அந்த புலி இன்னும் பாவம்… அது உடம்புல இருந்து அவ்ளோ இரத்தம் வீணாக்கி அத பலவீனம் படுத்தி இருக்கான். சிரஞ்சீவ் ஓரளவு சொன்னாரு.. சக்தி சொன்னது கேட்டு மனசுல அவ்வளவு ஆத்திரம் வருது. அந்த ராஜ்கர்ணா ரிஷித் ரெண்டு பேரும் இனி வாழவே கூடாது தனுப்பா…. “, என பல்லை
கடித்தபடி அடிகுரலில் கூறினாள்.
“அத பாத்துக்கலாம் சிங்கம்மா… நம்ம கம்பெனில ஒரு பையன தேடனும்… வனயட்சி அவன் நமக்கு உதவ கூடியவன்னு சொல்றாங்க….. “
“யாரு? பேரு?”
“அதுலாம் தெரியல… அவன் அம்மாக்கு உடம்பு முடியாம இருக்காம். அடுத்து வர வாரத்துல ரொம்ப மோசம் ஆகும். அதவச்சி அவன தேட சொல்லி இருக்காங்க…. “
ஆருத்ரா சக்தியை பார்க்கவும் அவன் தலைமை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து அடுத்த கட்ட வேலையை தொடங்கினான்.
“நாளைக்கு காலைல நமக்கு லிஸ்ட் வந்துடும் மேடம்… உங்கள பாக்காம கொம்பன் சாப்பிடாம அடம் பண்ணிட்டு இருக்கான்னு கருப்பன் அண்ணே ஃபோன் பண்ணாரு….”, சக்தி அவளுக்கு தெரிவிக்க படவேண்டியவற்றை கூறினான்.
“எல்லாரையும் இங்க கொண்டு வர ஏற்பாடு பண்ணு…. “
“சிங்கம்மா நானே போறேன். நம்ம லிங்கத்தை எடுத்துட்டு வரணும்…”, ரணதேவ் கூறினார்.
“சரி போயிட்டு பத்திரமா வாங்க தன்னுப்பா…. “, என கூறிவிட்டு மகதன் இருக்கும் வண்டியின் பக்கம் சென்றாள்.
அங்கே மகதனும், பைரவ் இருவரும் கொஞ்சி அளவளாவி கொண்டிருந்தனர். பல ஆண்டு கால பழக்கம் கொண்டது போல இருவரும் நடந்து கொள்வது கண்டு, ஆருத்ரா நம் அறிவுக்கு மீறிய பல விசயங்கள் நடந்து கொண்டுடிருக்கிறது என்று உணர ஆரம்பித்தாள்.
தீரன் மகதன் வந்ததில் இருந்து அவனை காண ஏக்கம் கொண்டு காத்திருந்தது. புலி என்ற காரணத்தினால் யாரும் தீரணை மகதன் அருகில் கொண்டு செல்லவில்லை. சற்றே சோகமாக அது ஏரன் குடிசையில் கட்டப்பட்ட நிலையில் மகதன் இருக்கும் திசையை பார்த்துக் கொண்டிருந்தது.
ஆருத்ரா அதனை கண்டுவிட்டு, தானே அருகில் சென்று தீரணை அவிழ்த்து கொண்டு மகதன் இருக்கும் இடம் அழைத்து சென்றாள்.
“தாயி.. புலி மாட்ட கண்டா வுடாது….. அங்க கொண்டு போகாதீங்க….”, என ஒருவர் தடுத்தார்.
“நாங்களும் இவ்வளவு நேரம் அதே புலி கூட தான் வந்தோம். எங்கள ஒன்னும் பண்ணல… இது நம்மல விட பெரிய விசயத்தை செய்ய வந்திருக்கு…. ஒன்னும் ஆகாது.. நான் கூடவே தானே இருக்கேன்…. “, என கூறிவிட்டு மகதன் இருந்த கூண்டிற்கு அருகில் அழைத்து சென்றாள்.
ம்மாஆ…. ம்மாஆ…. என கத்தியபடி தீரன் மகதன் அருகில் சென்று அதன் காயம் பட்ட காலை தன் நாவால் நக்கியது. அதிசயம் …. அங்கே ஏற்பட்டு இருந்த கத்தி காயம் உடனே இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது. மகதன் தெம்பாக எழுந்து நின்றது.
“என்ன மேஜிக் இது?”, ஆதி அங்கே வந்தவன் நிகழ்வது கண்டு கேட்டான்.
“எனக்கும் ஆச்சர்யமா இருக்கு… இங்க நம்ம நம்ப முடியாத பல விசயம் நடக்குது ஆதி…. இது போல மறுபடியும் நம்ம வாழ்க்கைல திரும்பவும் நடக்காத அதிசயம் தான் இது எல்லாமே….. தேனுவோட பால தான் ஆச்சி அர்ஜுன் யத்ரவுக்கு கொஞ்ச நேரம் முன்ன குடுத்தாங்க…. அவங்க உடம்புல பெரிய மாறுதல் நடந்தத பாத்தேன்…. இது எல்லாம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க தயா ?”, என லகுவாக அவனை விருப்ப பெயர் கொண்டு அழைத்தாள்.
அவளின் பெயரழைப்பை கவனிக்காதவனும், “எனக்கு ஒண்ணுமே புரியல ஆரு…. என்னால இதுலாம் நம்பவே முடியல. ஆனா இங்க நடகர எல்லாமே நம்மல சுத்தி, நம்ம கையால, நம்மலே எல்லாத்தையும் செய்யும்போது எப்படி நம்பாம இருக்கறது? கண்டிப்பா இது மனுஷ அறிவுக்கும், சக்திக்கும் மீறின விசயம் தான். இப்போவரைக்கும் எனக்கு நிறைய புரியல…. “, என கூறிவிட்டு மகதன் அருகில் சென்று அமர்ந்து அதன் முகத்தை பார்த்தான்.
அந்த கண்களில் ஏதோ ஒன்று அவனை முழுதாக மூழ்கடிக்கப் பார்த்தது. அவன் கண்ணும், மகதன் கண்ணும் ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு ஒன்றாக கலந்தது. அதில் எங்கோ புதைந்து இருந்த நேசமோ, பாசமோ இருவரையும் மானசீகமாக தொடர்பு கொள்ள வைத்தது. தன்னையும் அறியாமல் ஆதி மகதன் அருகில் சென்று அதன் தலையை தடவி கொடுத்து, கழுத்தில் கைவைத்து அருகில் இழுத்து மூக்கோடு மூக்குரசி, அதன் கண் இமைகளில் வலிக்காமல் முத்தம் வைத்தான்.
ஆதி மகதனை கொஞ்சும் விதம் கண்டு ஆருத்ரா மனதில் பெரும் நிம்மதி பரவியது. பைரவன் தான் மட்டும் என்ன பாவம் செய்தேன் எனக்கு முத்தம் இல்லையா என்பது போல ஆதி மேலே ஏறி முகத்தை தான் நாவால் நக்கினான். தீரணும் நான் மட்டும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல ஆதியின் தோளில் தலையை வைத்து உறைந்து தன் அன்பை வெளிப்படுத்தினான்.
இவற்றை எல்லாம் பார்த்தபடி வந்த சக்தி, ‘ மேடம்க்கு ஏத்த ஜோடிதான்…. வீட்ல இனி சிங்கம் புலி வளக்க ஆரம்பிக்காம இருந்தா சரி.. அதுக்கு பெர்மிஷன் வாங்க நம்ம தான் அலையனும்… இல்லையா இதுக்கு தனியா காட்ட உருவாக்குன்னு அரை நாள் டைம் குடுத்தா நான் எங்க போய் மேஜிக் கத்துக்கறது’, என மனதிற்குள் நினைத்தபடி அருகில் வந்தான்.
“மேடம்… சாப்பிட வாங்க….ஆதி சார்…நீங்களும் வாங்க…..”, என இருவரையும் அழைத்தான்.
“வரேன்…. அந்த பண்ணை வீட்ல இப்போ என்ன நிலவரம் சக்தி? எத்தன பேர் இறங்கி இருக்காங்க?”, என கேட்டாள்.
“இங்க ஆல்ரெடி சில பேர் தீரன தேடிட்டு இருக்காங்க…. இப்போ அர்ஜுன் யாத்ரா மேடம் தேடி ஒரு க்ரூப் வந்திருக்கு…. கர்நாடக பண்ணை வீட்ல இருந்து நம்ம எந்த ரூட் ல வந்திருப்போம்ன்னு எல்லாத்தையும் செக் பண்ணிட்டு இருக்காங்க.. நம்ம இங்க இருக்கறது இப்போவரை தெரியல….”, சக்தி கூறி முடிக்கும் போது ஜான் அங்கே வந்தான்.
“என் பூவழகி எங்க? யார் அவன் சொல்லுங்க? நானே என் கையால அவன கொன்னா தான் ஆத்திரம் அடங்கும் பாஸ்….”, என ஆதி அருகில் சென்றான்.
“ஜான்…. நான் சொன்னது என்னாச்சி?”, ஆதி அவன் கண்ணை பார்த்து கேட்டான்.
“அந்த வண்டிய இங்க கொண்டு வந்துட்டேன். பூவழகி முன்ன சொன்ன வண்டியும் கொண்டு வந்துட்டேன்… தாஸ் வெளிய நிக்கறான்…. நீங்க சொன்னா அடுத்த வேலைய ஆரம்பிச்சிடலாம்….”, ஜான் ஆருத்ராவை பார்த்துவிட்டு கூறினான்.
“ஆரு….. இவன் ஜான்…. யாத்ராவோட பாடிகார்ட்…. இவன இங்க பாதுகாப்புக்கு நிக்கவைக்கலாம்…. தாஸ் கூட்டம் மொத்தம் இந்த மேகமலைய காவல் காக்கும்… நம்மல மீறி ஒருத்தன் இங்க வரமுடியாது… நந்தன் கிட்ட கொஞ்சம் பேசணும்…. அவன் ஃபோன் ரீச் ஆகல…. அங்க பேசிட்டு இங்க நம்ம வேலைய சரியா பண்ணிக்கலாம்…. என்ன சொல்றீங்க?”, ஆதித்யா இப்போது வேறு ஒருவன் போல இப்போது அவள் கண்களுக்கு தோன்றினான்.
“வெல் ட்ரைன்டு ஆபீஸர் போல பேசறீங்க தயா….”, ஆருத்ரா நிஜமாகவே அவன் மேல் இப்போது சிறு விருப்பம் கொண்டாள்.
“எல்லாமே என் யாது ஓட ட்ரைனிங் ஆரு…. “, என இருவரும் செல்ல பெயர் கூறி அழைத்து க்கொல்வது கண்டு ஜான் மற்றும் சக்தி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இன்னமும் இருவரும் தங்கள் அழைப்பு வித்தியாசத்தை உணரத்தான் இல்லை போலும்…. இரும்பு இதயங்களில் நேசம் தான் பிறந்து விட்டதா என்ன?