45 – ருத்ராதித்யன்
அந்த அழைப்பை ஆதி எடுத்தான். அந்த பக்கம் ரிஷித் தான்.
“ஹலோ…..”
“ராஜ் எனக்கு பத்திரமா வேணும்… அவனுக்கு ஏதாவது ஆச்சி … நீங்க யாரும் நினைச்சி பாக்காத சாவ பாப்பீங்க…”, எடுத்தவுடன் உருமினான்.
“மொதல் ஃபோன் அட்டென்ட் பண்ணா யாரு பேசறதுன்னு கேக்கணும் ரிஷி….. அப்பறம் உன் மிரட்டல் எல்லாம் ஒப்பிக்கலாம்…..”, ஆதி சிரித்தபடி பேசினான்.
“நீ அர்ஜுன் இல்ல…. அவன் அண்ணன் ஆதித்ய கரிகாலன் …. உன் மச்சானுங்கள்ல ஒருத்தன் என் இடத்துக்கே வந்து என் சோதனை எலிங்களை தூக்கிட்டு போயிட்டான். மதுரை சேரலாதன் பையன் கஜேந்திர நெடுமாறன். அவனுக்கு தனியா ஒரு மெத்தெட் வச்சி இருக்கேன். உங்களுக்கு எல்லாம் வேற ரெடி பண்ணி பல நூறு வருஷங்கள் ஆச்சி ஆதி…. உன் வருங்கால பொண்டாட்டின்னு நீ நினைச்சிட்டு இருக்க பொண்ண உன் கல்யாணம் வரை நல்லா பாத்துக்கோ…. கல்யாணத்தன்னிக்கி அவள உங்க எல்லார் கண்ணு முன்னாடி தூக்கிட்டு போவேன்… பைரவ காட்டுக்கு போறதுக்கு முன்ன அந்த கிழவிய காப்பாத்த முயற்சி பண்ணுங்க…. ராஜ் அதுவரைக்கும் உங்ககிட்ட இருக்கட்டும்….. அவனுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்கறவரை, உங்க கூட்டத்த சேர்ந்தவங்களுக்கு எதுவும் ஆகாது….. என் மாயா டார்லிங்க என்னோட அனுப்பி வைக்க ரெடியா இருங்க…. அவ தான் இப்போ நடக்கற விசயங்களுக்கு நடுப் புள்ளி…”, என அவனாகவே பேசிவிட்டு வைத்து விட்டான்.
அவன் பேச ஆரம்பிக்கும் போதே ஸ்பீக்கர் ஆன் செய்து விட்டதால், அவன் பேசிய அனைத்தும் அனைவருக்கும் கேட்டது. ரிஷித் குரலை கேட்டதும் ராஜ் சற்று தெம்பாக எழுந்து அமர்ந்து அவர்களை பார்த்தான்.
“என் பிரெண்ட் இருக்கறவரை உங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது…. நீ தானே அன்னிக்கி லேப் வாசல்ல நின்ன? என்கிட்டயே அக்சஸ் கார்டு வாங்கி ஈசியா வெளிய போயிட்டல்ல … அப்பறம் வச்சிக்கறேன்….”, என திமிராக பேசினான்.
அவன் பேச பேச மகதன் மெல்ல அவன் அருகில் வந்து நின்றது. அவன் முகத்தை இந்த பக்கம் திருப்பும் போது மகதனை வெகு அருகில் கண்டவன் விதிர்விதிர்த்து பின்னால் உருண்டு எழுந்து நின்றான்.
“என்னடா என்னமோ டயலாக் பேசின…. இப்படி ஓடுற?”, நெடுமாறன் இப்போது அவன் அருகில் வந்து அவனை தூக்கி மீண்டும் மகதன் அருகில் அமர வைத்தான்.
“ஹேய்…”, என ராஜ் விரலை நீட்ட, மகதன் உருமியபடி அவன் விரலை கடித்த படி நின்றது. இரத்தம் வராமல் தான் பிடித்து இருந்தது ஆனால் ராஜ் கர்ணா பயத்தில் வேர்த்து உறைந்து அமர்ந்து இருந்தான்.
“மகதா…. இந்த பக்கம் வா….”, ஆருத்ரா அழைக்க அவளிடம் சென்று அமைதியாக நின்று கொண்டது.
“ராஜ் கர்ணா….. ரிஷித் என்ன பண்றான்?”, மீண்டும் அதே கேள்வியை கேட்டான் அர்ஜுன்.
“அவன் ஆராய்ச்சி பண்றான். இயற்கைய அழிச்சி செயற்கையா அவன் டிசைன் பண்ண உயிரினம், மனுஷ இனம்ன்னு எல்லாமே அவன் வடிவமைக்கப்பட்டதா இருக்கணும்ஈங்கற வெறி அவனுக்கு இருக்கு…. அப்படி பண்ணா இந்த பூமில எங்கள மிஞ்சின சக்தி இருக்காது….. நாங்க சொல்றது தான் சட்டம்… எங்க விருப்பம் எல்லாமே தடை இல்லாம நிறைவேறும்….”
“நீங்க என்ன கடவுளா டா?”, என கஜேந்திரன் அவனை அடிக்க முன்னால் வந்தான்.
“ஒரு உயிர உருவாக்கறவனுக்கு பேர் கடவுள் நாஹ் என் ரிஷித் கடவுள் தான்…. இதோ.. இவங்க ரெண்டு பேர் இன்னும் உயிரோட இருக்க அவன் கண்டுபிடிச்ச “மீடியேட்டர் சொல்யுஷன்” தான் காரணம்….. அது கலந்து இந்த புலி இரத்தம் இவங்க உடம்புல ஏறினதால தான் இப்போ இவங்க புது உயிரினமாக உருமாறி இருக்காங்க….”,என அர்ஜுன் யாத்ரவை காட்டினான்.
“அது ஏதோ குகைல இருந்து எடுத்துட்டு வந்ததா தானே சொன்ன….”, ஆதி கூர்மையாக பார்த்தபடி கேட்டான்.
“ஆமா… அது அவன் கண்டு பிடிச்சது…. அருணாச்சலப் பிரதேசஷ் ல இருந்து இப்போ அவன் எடுத்துட்டு வந்தான்…”
“அது பல நூறு வருஷம் பழமையான திரவம்…. இவன் எப்படி கண்டுபிடிச்சு இருக்க முடியும்?”, கஜா.
” எனக்கு தெரியாது…. அவன் இது பல ஜென்மமா நடக்கற முயற்சின்னு ரெண்டு நாள் முன்ன சொன்னான். ஒரு கிழவன் சில ஒலை சுவடிகளோட இவனுக்கு கெடைச்சான்… அதுல நிறைய இருந்தது…. இவனோட இப்ப இருக்க மனநிலையும், அதுல இருந்த கதையும் ஒரே போல இருக்கு…. ஆனா என் ரிஷித் இந்த முறை கண்டிப்பா ஜெயிப்பான்…. “, ராஜ் கர்ணா அவர்களை பாத்தபடி கூறினான்.
“கஜா…. இவன மகதனுக்கு சாப்பாடா இங்கேயே விட்டுட்டு வா…..”, என ஆதி அனைவரையும் அழைத்து கொண்டு எழுந்து சென்றான்.
மகதன் அருகில் இருந்த ஒரு தடுப்பில் அவனை கட்டி போட்டுவிட்டு மற்றவர்கள் பின் அவனும் சென்றான்.
“ஹேய்.. எனை விடுங்க.. உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லுங்க தரேன்…. என்னை கூட்டிட்டு போங்க டா……”, என ராஜ் கர்ணா கத்தினான்.
மகதன் உருமவும் கப்பென வாய்மூடி அமர்ந்து கொண்டான்.
ஆதி யோசனையுடன் ஆருத்ரா கரம் பற்றியபடி நடந்து கொண்டிருந்தான். ஆருத்ராவும் மிகவும் இயல்பாக அவன் தோள் பற்றி சாய்ந்து கொண்டு நடந்தாள்.
பின்னால் அர்ஜுனும், யத்ராவும் அவர்களின் இணக்கம் பார்த்து புன்னகைத்தபடி அவர்களை அரண் போல காத்துக்கொண்டு நடந்தனர். அவர்களின் பின் கஜா அர்ஜுன் யாத்ராவை பார்த்துக் கொண்டு மனதில் நிம்மதி கொண்டு நடந்து வந்தான்.
“ரெண்டு பேரும் எவ்ளோ ஈசியா இயல்பா ஒன்றிட்டாங்கல்ல செழியன்…..”, யாத்ரா மனதில் சந்தோசம் பொங்கியது.
“ஆமா ரது… நான் கூட ஏதோ இக்கட்டுக்கு ஆதி சரின்னு சொல்லிட்டான்னு நெனைச்சேன்…. இப்படி ஆதிய பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு…. உன் செலக்சன் சூப்பர் ரது பேபி…”, என அவளின் இடையில் கைவைத்து தன் அருகில் இழுத்து அவள் மூக்கோடு மூக்குரசி அவள் இதழில் பட்டும் படாமல் முத்தமிட்டான்.
“ஹேய்… என்ன பண்றீங்க செழியன்….?”, என அவனை விட்டு விலகி நடந்தாள்.
“கிட்ட வா ரதும்மா…. என் ஏக்கம் உனக்கு புரியலையா? எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா அன்னிக்கி அவன் நம்ம உடம்புல மருந்து குடுத்து மயக்கமாக வச்சதும்…. இன்னிக்கி உன்ன பாத்ததும் தான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு…. உடம்பு ரொம்ப வலிக்குதுடா டா?”, அவள் உடலை அளந்தபடி கேட்டான்.
“பயந்துட்டேன் தான் செழியன்.. நான் கற்பனை செஞ்சி வச்சி இருந்த வாழ்கையை வாழாமலே போறோம்னு…. இப்போ நமக்கு இன்னொரு சான்ஸ் குடுத்து இருக்கமாறி ஃபீல் ஆகுது…. “, அவள் அவன் நெஞ்சத்தில் ஒன்றி கொண்டாள்.
“எனக்கும் தான்…. நம்மளோட இந்த நிலைமை சாதாரணமாக மாறுமா நமக்கு தெரியாது, ஆனா நமக்கான வேலை இருக்கு…. அத நாம சரியா செஞ்சி முடிக்கணும்…. நீ என்ன நெனைக்கற இத பத்தி?”, தன் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டிக் கேட்டான்.
“இந்த மிருதனுக்கு ஏத்த மிருதி நான் தான்னு சந்தோசமா இருக்கு..”, என அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
உடல் உரசியும் உரசாமல் அவர்கள் தங்களுக்குள் பேசியபடி ஆதியும் ஆருத்ராவும் ஊருக்குள் நுழைந்ததும், மீண்டும் காட்டிற்குள் சென்றனர்.
ஆதி கஜாவை தங்களுடன் வரும்படி செய்கை செய்துவிட்டு முன்னால் சென்றான்.
அவர்கள் பேசியதை எல்லாம் இவர்களும் கேட்டுக்கொண்டு தான் வந்தனர். அவர்களுக்கான தனிமை இப்போது மிகவும் அவசியம் என்று உணர்ந்து அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டனர்.
“ஆதி…. அஜ்ஜுவும் யாதுவும் எங்க ப்பா?”, என கேட்டபடி கயல் அங்கே வந்தார்.
ஆருத்ராவும், ஆதியும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு தாயின் உள்ளம் நிறைவு கொண்டது.
வீட்டிற்கு மூத்த பிள்ளையாக அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பலருக்கு அதனால் நன்மையென்றால் கடமையாக ஏற்று நடப்பவன், தன் திருமணத்தையும் கடமையாக மட்டுமே பாவித்து விடுவானோ என்று மனதில் உழன்று கொண்டிருந்தார். இப்போது இருவரும் இணக்கமாக இயல்பாக ஒருவர் கை ஒருவர் பற்றி நடந்து வந்தது, அவரின் மனதிற்கு பெரும் சந்தோசத்தை கொடுத்தது. பிள்ளைகளின் திருமணம் ஆடம்பரமாக நடப்பதைக் காட்டிலும் மனம் விரும்பி இருவரும் இணைந்து வாழ்வதில் தான் பெற்றவர்களுக்கு நிறைவான இன்பத்தை கொடுக்கும். அந்த நிறைவின் ஆரம்பத்தை இன்று ஆதி ஆருவின் இணக்கம் அவருக்கு வழங்கிவிட்டது.
“ஹான்.. என்னமா ?”, என ஏதோ நினைவில் இருந்து மீண்டு கேட்டான்.
“அஜ்ஜுவும் யாதுவும் எங்கன்னு கேட்டேன் ப்பா…”, சிரித்தபடி கேட்டார்.
“அவங்க கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்ன்னு அனுப்பி வச்சேன் மா… அவங்களுக்கு ஒரு ஆசுவாசம் தேவை…..”
“சரிப்பா… நீங்க கை கால் கழுவிட்டு சாப்பிட வாங்க …. கஜா தம்பி நீங்களும் வாங்க….”, என அவனையும் அழைத்துவிட்டு சென்றார்.
ஆருத்ரா அத்தனை நேரமும் ஆதியின் கைகளுக்குள் தன் கை இருப்பதை பார்த்து தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டிருந்தாள்.
இத்தனை நாட்களாக அவளுக்கு கிட்டாத அமைதி இன்று இவன் அருகில் வாய்த்து இருக்கிறது. மனம் கொண்ட பாரம் எல்லாம் இறகைப் போல லேசாகி விட்டது. ஒரு புது உற்சாகம் தன்னுள் ஊற்றாக பெருகுவதை இப்போது தான் உணர்கிறாள். வனபேச்சி ஆச்சி தனக்கும் அவனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று கூறியதும் அது தனக்கு கொடுக்கப்பட்ட கடமை என்று எண்ணி தான் ஒத்திசைத்தாள், ஆனால் இன்று… இன்றில் இருந்து இல்லை அவனை பார்த்ததில் இருந்தே அவன் அருகில் தான் இயல்பாக, அவன் அருகில் இருப்பதை சந்தோசமாக கடந்த நொடிகளை நினைத்துப் பார்த்தாள்.
இது ஜென்ம பந்தமா தெரியாது, ஆனால் இவன் அருகில் தான் எந்த முகமூடியும் இல்லாமல், மனம் அமைதியாக இருப்பதை இன்று உணர்ந்து கொண்டாள். அவன் மேல் ஏற்பட்டிருக்கும் நேசத்தையும் புரிந்து கொண்டாள்.
நேசம் புரிந்த நொடி அவன் கண்களை பார்த்தால், அவனும் அவள் கண்களில் மூழ்கி போனான். அவளை கண்டதும் அவனுக்குள் ஏற்பட்ட உணர்வும் மரியாதையும் அவளின் அந்தஸ்த்தை பார்த்து தன்னுள் மறைத்துக் கொண்டான். இன்று தன் நேசம் அதிக கஸ்டமில்லாமல் தன் கை சேர்ந்துவிட்டது, ஆனால் இதை காப்பாற்றிக் கொள்ளும் வேலை இனிமேல் தான் இருக்கிறது என்று உணர்ந்தான்.
“என்ன ஆரு.. அப்படி பாக்குற?’, மெலிதாக முறுவலித்து கேட்டான்.
“உங்களை எப்போ இருந்து நான் நேசிக்கறேன்னு யோசிக்கறேன் தயா….”, என தன் மனதை மறைக்காமல் கூறிவிட்டாள் மங்கையவள்.
“என்ன சொன்ன?”, கண்கள் விரிய அவன் முழுதாக அவளை பார்த்து திரும்பி நின்று கேட்டான்.
“ஒரு தடவ தான் சொல்வேன்… நீங்க சார்ப் அ இருக்கணும் தயா…. நான் தனுப்பாவ பாத்துட்டு வரேன்.”, என அவனை புன்னகை முகமாக பார்த்து கூறிவிட்டு சென்றாள்.
ஆதி தன்னுள் பூக்கும் சந்தோச உணர்வுகளை அசைப்போட்டு கொண்டே ஏரன் வீடு நோக்கி நடந்தான்.