வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற இன்னொரு கதை “ஆயிரம் காலத்துப் பயிர்” – ராஜலக்ஷ்மி நாராயணசாமி
எனக்கு இந்த தலைப்பே ரொம்ப பிடிச்சி இருந்தது. பாத்ததும் கண்டிப்பா படிச்சே ஆகாணும்னு ஒரு உத்வேகம் வந்தது உண்மை.
இந்த மகரியின் பார்வையில், இந்த கதைல எனக்கு பிடிச்ச, நான் ரசிச்ச விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்க போறேன்.
இந்த கதையில எடுத்ததும் பொண்ணு பாக்க வரவங்களுக்காக, விடியற்காலையில எழுப்பி தயார் படுத்தறதுல தான் ஆரம்பிக்குது. செண்பகவல்லியோட மனநிலைய, அவ வலிய நல்லா உணரமுடிஞ்சது.
தந்தை ராகவன் வெளி ஆளுங்கள மறுக்க சங்கடப்பட்டு மகளை சங்கடப்படுத்தறது போல தான் நிறைய இப்பவும் நடந்துக்கிட்டு இருக்கு.
எந்த விதமான அதிகப்படியான வார்த்தையும் உபயோகிக்காம இந்த கதை முழுக்க ரொம்ப யதார்த்தமா குடுத்த ஆசிரியருக்கு நன்றிகள்.
சிவா.. கதையின் நாயகன். ரொம்ப அற்புதமா இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. செண்பா அப்பா ராகவனோட மனமாற்றம் கண்டிப்பா கதாநாயகனால தான் நடக்குது.
அந்த காட்சி ரொம்ப இயல்பா இருந்தது தான் தனி சிறப்பு.
“கைசில” – இந்த வார்த்தை கேட்டதும் எல்லாருமே அவங்கவங்க பருவ வயதுக்கு கண்டிப்பா ஒரு சில நொடியாவது போயிட்டு வருவோம். கனி நல்ல தோழி.
ஒரு தொழில் வச்சி பையன் குணத்த கணிக்கற விஷயத்த சொன்னதும் நல்லா இருந்தது.
மாப்பிள்ளைக்கு பெண் தேடும் கஷ்டத்த ரொம்ப அழகா ஆசிரியர் சொல்லி இருந்தாங்க. அவங்க இனிக்கி கஷ்டப்பட முன்னாடி செஞ்ச முட்டாள் தனத்தையும் சொன்னது சிறப்பு. செண்பாவோட அண்ணனுக்கு பெண் தேடும் படலத்தை நகைச்சுவை உணர்வோட சொன்னது சிறப்பு.
பெண்வீட்டுக்காரர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் மாப்பிள்ளையிடம் கேட்கும் கேள்விகள் எல்லாம் நம்மை சுற்றி இன்று நடந்து வரும் விஷயங்கள் தான். ஆனால் அதை ஆசிரியர் காட்சிப்படுத்திய விதம் மிகவும் ரசிக்க வைத்தது.
இறுதியில் செண்பாவின் வாழ்க்கை மாறியதா இல்லையா ?
அவள் ஆசை நிறைவேறியதா ?
செண்பாவின் அண்ணனுக்கு பெண் கிடைத்ததா ?
சிவா தன் காதலை செண்பாவிடம் வெளிப்படுத்தினானா ?
இது தான் மீதி கதை. இது ஒரு குறுநாவல் தான். அதனால டக்குன்னு படிச்சிடலாம் ..
ஆகமொத்தம் இந்த கதை ஒரு இசைப்பயணம் போல நம்மை உணரவைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்னும் நிறைய கதைகள் படைக்க ஆசிரியருக்கு வாழ்த்துகள் .. உங்க எழுத்து ஒவ்வொரு கதைலையும் மெருகேறி வருவது நல்லா தெரியுது.. இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பாக்கறோம் ராஜி.. மனமார்ந்த வாழ்த்துகள் ..
இந்த கதையை படிக்க :
இந்த கதாசிரியர் பத்தி தெரிஞ்சிக்க இந்த லிங்க் பாருங்க :
இராஜலட்சுமி நாராயணசாமி