• About us
  • Contact us
Monday, April 20, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

33 – அர்ஜுன நந்தன்

March 27, 2024
Reading Time: 1 min read
0

33 – அர்ஜுன நந்தன்

 

சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். 

“ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்”, யாத்ரா வாசனையை இழுத்தபடி கூறினாள். 

“ஏன்டா நாங்களும் இங்க தானே இருக்கோம் எங்கள பர்ஸ்ட் கூப்பிடமாட்டீங்களா?”, எனக் கேட்டபடி நரேன் வந்தான். 

“சும்மா வேடிக்கை பாத்தவங்க கடைசில சாப்டா போதும். செழியன் இங்க வா நாம பர்ஸ்ட் சாப்பிடலாம். அப்பறம் இவங்கள கை கால் பிடிச்சு விட சொல்லலாம்”, என அர்ஜூனை அழைத்தாள். 

“கொழுப்பு உனக்கு ஓவரா இருக்கு. நாங்க உனக்கு கை கால் பிடிச்சு விடணுமா?”, செந்தில் கேட்டான். 

“சீனியர் இன்னிக்கு இரண்டு பைட் அடுத்தடுத்து செஞ்சி இருக்கேன். இத கூட நீங்க பண்ணலண்ணா எப்படி?”, யாத்ரா. 

“நீ அடிச்சி போட்டவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கணும்னு தோணல, உனக்கு மஸாஜ் கேக்குது?”, செந்தில். 

“அதுல்லாம் உயிரோட தான் இருக்கானுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் கிட்ட அனுப்பிட்டா அவங்க பாத்துப்பாங்க சீனியர்”, அசால்டாகக் கூறியபடி உணவு வகைகளை ஆராய்ந்தாள். 

கிரில் பிஸ் , கிரில் சிக்கன் , மட்டன் கிரேவி, காடை ரோஸ்ட், எக் கர்ரி, பட்டர் நான், லாஸ்டா சாப்பாடு மிளகு ரசம். 

“வாவ். சூப்பர் வெரைட்டி. இதுல எது நீங்க ரெண்டு பேரும் பண்ணீங்க?”, எனக் கதிரையும் சக்தியையும் பார்த்துக் கேட்டாள் யாத்ரா. 

“கிரில் ஐட்டம்ஸ் சாப்பாடு ரசம் தான் கதிர் சார் செஞ்சாரு. மத்தது எல்லாம் ஹோட்டல்ல வாங்கினது”, என சக்தி கூறினான். 

“உங்களுக்கு கைவசம் நல்ல தொழில் இருக்கு கதிர். வேலை போனாலும் கவலை இல்லை. இன்னிக்கு நல்லா சாப்ட போறேன். தேங்க்யூ”, எனக் கூறிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். 

ஜானும் சிவியும் அவள் சாப்பிட சாப்பிட பரிமாறிக் கொண்டு இருந்தனர். 

அர்ஜூனும் அவளை கண்களால் தழுவியபடிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

இன்னொரு பக்கம் நரேனும் செந்திலும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். 

யாத்ரா எழுந்தவுடன் கதிர், சக்தி, ஜான் மற்றும் சிவியை அமர வைத்து பரிமாறினாள். 

ஜானும் சிவியும் யாத்ராவின் மனதிற்கு நெருக்கமானவர்கள். கதிரும் சக்தியும் பரிச்சயமான சற்று நேரத்திலேயே யாத்ராவின் அன்பில் அடங்கிவிட்டனர் என்று தான் சொல்லவேண்டும். 

“பாத்தீங்களா செந்தில் நமக்கு ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டா அவங்களுக்கு எப்படி பரிமாறுறா பாருங்க”, நரேன். 

“அவ அப்படி தான் நரேன். ஒரு டைம் மனசுக்கு பிடிச்சிட்டா யாரா இருந்தாலும் விடமாட்டா. உங்களுக்கும் நேரம் வரப்ப செய்வா உங்கமேல அன்பு இல்லாமலா வம்பு இழுக்கறா ? பாசமான ராங்கி”, எனச் சிரித்தபடிக் கூறினான் செந்தில். 

“உண்மை தான். நல்லா வாய்க்கு ருசியா சமச்சி போட்டா போதும் அவளுக்கு”, நரேன் சிரித்தபடிக் கூறினான். 

“அவ்ளோ ஈஸியா எல்லாம் அவகிட்ட நீங்க நல்லா இருக்குன்னு சொல்ல வைக்க முடியாது நரேன். நான் சிவி எல்லாம் அவகிட்ட படாதப்பாடு பட்டு இருக்கோம்”,செந்தில்.

“அவ்வளவு படுத்துவாளா சாப்பாடு விஷயத்துல?”, நரேன். 

“நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க”, செந்தில். 

“அய்யோ வேணாம். நான் வரல இந்த விளையாட்டுக்கு”, நரேன் சிரித்தபடிக் கூறினான். 

“செழியன் உங்க பிரண்ட் எப்ப வருவாரு?”, யாத்ரா. 

“இப்ப வந்துருவான்”, எனக் கூறினான் அர்ஜுன். 

காலிங் பெல் சத்தம் கேட்க சிவி கதவைத் திறந்தான். 

“ஹேய்ய்…. கிரி… நீ எங்க இங்க? எப்படி இருக்க ?”, எனக் கேட்டபடி சிவி வந்தவனைக் கட்டிக் கொண்டான். 

“டேய் சிவி…. நல்லா இருக்கேன் டா. வாட் எ சர்ப்ரைஸ்? நீ எப்படி இருக்க?”, கிரி. 

அர்ஜுன் கிரியைப் பார்த்து அருகில் வந்தான். 

“டேய் இளா எப்படி இருக்க? உனக்கு எப்படி சிவிய தெரியும்?”, என அர்ஜூனைக் கட்டி கொண்டு கேட்டான் கிரி. 

“ஹலோ பசங்களா கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு நீங்க கொஞ்சிகோங்க”, என நரேன் நடுவில் புகுந்தான். 

“இவன் கிரி என் பிரண்ட் அண்ணா”, என நரேனிடம் கூறிய அர்ஜுன் கிரியிடம் திரும்பி,”இவர் என் டீம் ஹெட் டா. நரேன் . இவர் செந்தில் டிடெக்டீவ்”,என அறிமுகம் படுத்தினான். 

நரேன் செந்தில் கிரி தலையசைத்துக் கொண்டனர்.

“அர்ஜூனும் நானும் காலேஜ் மேட்ஸ் அண்ட் பிரண்ட்ஸ். சிவி என்னோட சைல்டுவுட் பிரண்ட்”, என கிரி விளக்கமளித்தான்.

“இவன் இப்ப சென்னை சிட்டியோட டெபுடி கமிஷனர் மிஸ்டர். கிரிதரன்”,என அர்ஜுன் கூறினான். 

“ஹாய் வெல்கம்”, என அனைவரும் கூறினர். 

“டேய் கரிதரா”, என யாத்ரா அவன் அருகில் வந்தாள். 

“ஏய்ய்… ராங்கி ரவுடி. எப்படி இருக்க?”, கிரி .

“எனக்கு என்ன சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாம பைட் சீக்குவன்ஸ் ஓட நல்லா இருக்கேன்”,என கிரியின் தோளில் அடித்தபடிக் கூறினாள். 

“ஏய்ய்… அடிக்காதடி… வலிக்குது”, என கிரி தன் தோள்பட்டையைத் தேய்த்தபடிக் கூறினான். 

“நீ எல்லாம் ஒரு டெபுடி கமிஷனர். இந்த அடிக்கு கூட தாங்க மாட்டியா?”,என யாத்ரா அவனை வாரினாள். 

“நானும் அடிக்கறேன் உனக்கு வலிக்குதான்னு பாக்கலாமா?”, கிரி. 

“இன்னிக்கு ஒரே பைட் சீனா போகுதே. ஆல்ரெடி இரண்டு ஓவர் நீ மூனாவது”, எனக் கூறியபடி கைச் சட்டையை மேலே தூக்கி மடக்கினாள். 

“எத்தனை பேரை கொன்ன?”,கிரி. 

“யாரும் சாகல. நீதான் அள்ளிட்டு போக வந்தவனா?”, என யாத்ரா அவனைப் பார்த்து கேட்டாள். 

“என்ன சொல்ற? அடேய் அர்ஜுன் என்னடா நடக்குது இங்க?”,கிரி. 

அர்ஜுன் அவனிடம் பேசிய பிறகு நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினான். 

“அட பாவிங்களா. ரெண்டு பேரும் சேந்துட்டு இப்படி முப்பது பேரை அடிச்சி இருக்கீங்க. இங்க மத்தவங்களும் இருக்காங்கன்னு சான்ஸ் குடுக்க தோணலியா?”, கிரி. 

“அவங்க வேறமாதிரி சண்டை போட்டுட்டு இருந்தாங்க தம்பி. அதான் நாங்க வேடிக்கை மட்டும் பாத்தோம்”, என நரேன் அவர்களின் பார்வைப் பறிமாற்றத்தைச் சுருக்கமாக கூறினான். 

கிரிதரன் நம்பாமல் ஒரு பார்வை அர்ஜூனையும் யாத்ராவையும் பார்த்தான்.

இப்பொழுதும் அவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டு இருக்க, அதைப் பார்த்து ஒத்துக் கொண்டான். 

சிவியின் காதில் முனுமுனுத்தான்,” என்னடா நடக்குது? அந்த ரவுடி எப்படி டா லவ் எல்லாம் பண்றா? அவளுக்கு கை தானே முதல்ல பேசும்”, கிரி. 

“ஏதோ நல்லது நடந்து இருக்கு அது உனக்கு பொறுக்கலியா? ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி”, சிவி. 

“அது தான்டா நானும் கேக்கறேன். இவனும் வாய்ல பேசமாட்டான், பேசினா கை தான் முதல்ல பேசும் எப்படி ரெண்டும் பிக்அப் ஆச்சி?”,கிரி. 

“ஏதோ ஆகிரிச்சி விடு”,சிவி. 

“கரி அந்த பீச்ல இருந்தவங்க யாரு?”, யாத்ரா. 

“ஹார்பர் கேங் தான். சரக்கு லேட்டா வந்ததால இப்ப கைமாத்தி இருக்கானுங்க. அந்த பொருள் எல்லாம் எங்க?”, கிரி. 

“அதான் போட்லயும் வண்டிலயும் பெட்டி இருந்ததே அது தான்”,யாத்ரா. 

“அது நீ வச்சிட்டு போனது. அவனுங்க கிட்ட இருந்தத எங்க வச்சி இருக்க?”, கிரி. 

“அதுல்லாம் வெளியே வராது. கிடைச்சத வச்சி நீ கேஸ் பைல் பண்ணிக்க. இப்ப வா”, எனத் தாஸை அடைத்து வைத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். 

அவர்களின் பின்னே அனைவரும் சென்றனர். 

“இவன் தாஸ். சேரி பக்கம் இருக்கறான். சின்ன சின்ன பைசல் பண்ணிட்டு இருந்தான், இப்ப கொஞ்சம் பெரிய வேலை செய்ய ஆரம்பிச்சி இருக்கான்”, கிரி. 

“யார்கிட்ட வேலை செய்யறான்?”, அர்ஜுன். 

“இவனுக்கு பணம் குடுத்தா போதும் எல்லார் கிட்டயும் வேலை செய்வான் ஆனா இப்ப மூனு மாசமா ஒருத்தன் கிட்ட மட்டும் இருந்து வேலை செய்யறதா கேள்விபட்டேன்”, கிரி. 

“யாரு அது”, யாத்ரா. 

“ஹார்பர் ஜாக்சன்”, கிரி. 

“விசாரிச்சிட்டு எனக்கு டீடைல்ஸ் அனுப்பு”, யாத்ரா. 

“உனக்கு ஏன் அனுப்பனும்?”,கிரி. 

“குடுத்தா உனக்கு பரவால்ல, இல்லன்னா பல பொணங்கள நீ அள்ளிட்டு போக வேண்டியதா இருக்கும். எப்படி வசதி?”, யாத்ரா. 

“என்ன நடக்குது இங்க? நீங்க எப்படி ஒன்னா ? என்ன விஷயம்?”, கிரி. 

செந்தில் சுருக்கமாக விவரத்தைக் கூறினான். 

“ஓஹோ…. இவ்வளவு நடந்துட்டு இருக்கா. சரி நான் நீங்க கேக்கறத குடுக்கறேன். வேற உதவி தேவைபட்டாலும் செய்யறேன்”, கிரி. 

“ஒரு வீடு வேணும். இன்னொருத்தன மறைச்சி வைக்க”, அர்ஜுன். 

“யாரு டா?”, கிரி. 

அர்ஜுன் ஆர்யனை பற்றிக் கூறினான். 

“எப்படிடா இப்படி? ரொம்ப சாதாரணமா சொல்றீங்க?”, கிரி. 

“நீ ஏன் இவ்வளவு சாக் ஆகற? எல்லாம் என் டார்லிங் கண்பார்வைக்குள்ள தான் நடக்குது சோ டோன்ட் வௌரி கரிதரா”, என நக்கலடித்துக் கூறினாள் யாத்ரா. 

“அதுக்குன்னு நீங்க ரெண்டு பேரும் சேந்து பண்ற அக்கபோருக்கு நாங்க காது கிழிய வாங்கி கட்டிக்கணுமா?”, கிரி. 

“டேய். இப்ப நாங்க கேக்கறது கிடைக்குமா கிடைக்காதா?”, அர்ஜுன் இடைப்புகுந்தான். 

“ஏற்பாடு பண்றேன். பரிதி மேடம் கிட்ட பேசிட்டு உன்ன பேசிக்கறேன் இரு”, என பரிதியை போனில் அழைத்தான். 

“பரிதி ஸ்பீக்கிங்”, பரிதி. 

“மேடம் நான் கிரிதரன் பேசறேன்”, கிரி. 

“ஹேய்… கிரி. எப்படி இருக்க? ரொம்ப நாள் ஆச்சி பேசி. எப்படி இருக்க?”, பரிதி. 

“காலைல வரைக்கும் நல்லா இருந்தேன் இப்ப இல்ல”, என யாத்ராவைப் பார்த்துக் கொண்டே கூறினான் கிரி . 

“ஏன்டா என்னாச்சி?”, பரிதி. 

“உங்க ஆசை கண்மனி இங்க வந்து இருக்காலே, அப்பறம் எப்படி நல்லா இருக்கறது?”,கிரி. 

“டேய். அவ உன்ன என்ன பண்ணா? சும்மா அவள எல்லாரும் பேசாதீங்க அப்பறம் நான் உங்கள வேறமாதிரி கவனிக்கறமாதிரி இருக்கும்”, பரிதி யாத்ராவைத் தாங்கிப் பேசி அவனையும் சற்று மிரட்டினாள். 

“இங்க வந்து என்ன செஞ்சா தெரியுமா?”, கிரி. 

“தெரியும் தெரியும். அர்ஜூனும் யாத்ராவும் கேக்கறத செஞ்சி குடு. ஆர்யன பத்திரமா பாத்துக்கணும் .சோ அன்அபீசியலா இரண்டு பேர நீ வாச்ட் பண்ண போடு”, பரிதி. 

“அப்போ எல்லாம் உங்க பிளானா?”, கிரி. 

“பிளான் எல்லாம் ஒன்னும் இல்ல. சிடுவேஷன் அப்படி இருக்கு அதுக்கு அவங்க தகுந்த ஸ்டெப்ஸ் எடுக்கறாங்க அவ்ளோதான்”, பரிதி. 

“நீங்களே இப்படி பேசினா எப்படி மேம்?”, கிரி. 

“சரி நம்ம சிஸ்டம் ரூல்ஸ் வச்சி எத்தனை பேர நீ தண்டிக்க முடிஞ்சது? அந்த ஹார்பர் ஜாக்சன உன்னால ஒரு நாள் உள்ள வைக்க முடிஞ்சதா?”, பரிதி. 

“இல்ல மேடம் உள்ள வைக்கறதுக்குள்ள மினிஸ்டர் வரை போய் பிரசர் வருது”, கிரி குரல் தழைத்துக் கூறினான். 

“இப்ப சொல்லு கேஸ் என்னனு உனக்கு செந்தில் சொல்லி இருப்பாரு. அத லீகலா எப்படி ப்ரொசீட் பண்ணுவ? இவனுங்க ஆயிரம் ஜாக்சன உருவாக்குவானுங்க. அதான் யாத்ரா அர்ஜுன் போக்குல விட்டுட்டேன். கரெக்டா போயிட்டும் இருக்கு. நீ அவங்க கேக்கறத செஞ்சி குடு பிரச்சினை வந்தா நான் பாத்துக்கறேன்”, பரிதி. 

“ஓகே மேடம்”, எனக் கூறி போனை கட் செய்தான். 

“என்னாச்சி கிரி?”, என சிவி அருகில் வந்தான். 

பரிதி கூறியதை கூறிவிட்டு ,” அவங்களே அப்படி இருக்கறப்ப இதுங்க ரெண்டுத்தையும் ஒன்னும் சொல்ல முடியாது. பரிதி மேடம்க்கு இவங்க பரவால்ல போல”, கிரி. 

“ஹாஹா…. இப்ப உனக்கு கிளியர் ஆகிரிச்சில்ல. வா சாப்பிடு பர்ஸ்ட் அப்பறம் உக்காந்து பேசலாம்”, சிவி அவனைச் சாப்பிட அழைத்துச் சென்றான்.

“வா கரிதரா… எல்லாம் பேசி முடிச்சிட்டியா? என்ன சொன்னா என் டார்லிங்?”, என யாத்ரா வினவினாள். 

“உனக்கு இதுல்லாம் சொல்லி குடுக்கறதே அவங்க தான்னு இப்பதான் தெரிஞ்சது”, என கடுப்பாக கூறினான் கிரி. 

“ஹாஹா… டூ லேட் பையா நீ. சரி பர்ஸ்ட் சாப்பிடு”, என அவனை அமரவைத்துப் பரிமாறினாள். 

“யார் அந்த ஜாக்சன்?”, செந்தில். 

“இப்ப 5 வருசமா அவன் தான் ஹார்பர்ல ஹெட். வழக்கம் போல அரசியல்வாதிங்க சப்போர்ட் ஸ்மக்லிங் எல்லாமே பண்றான். எவிடென்ஸ் இல்லாம எல்லாத்தையும் செய்றான். அவன் மேல கை வைக்கறதுக்கு முன்ன சென்ட்ரல் மினிஸ்டர் கிட்ட இருந்து போன் வருது”, கிரி சாப்பிட்டுக் கொண்டே கூறினான். 

“எந்த மினிஸ்டர்?”, நரேன். 

“சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர்”, கிரி. 

நரேனும் அர்ஜூனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சக்தியும் நரேனைப் பார்த்தான். 

“சரி. ஜாக்சன் பத்தின டீடைல்ஸ் குடு”, அர்ஜுன். 

“தாஸ் இங்க இருக்கட்டும். மத்தவங்கள நீ தூக்கிட்டு போ”, யாத்ரா. 

“சரி. வீடு பாத்துட்டு கூப்பிடறேன் இப்ப அவனுங்கள கான்ஸ்டபிள்ஸ் வச்சி தான் கொண்டு போகணும். இத்தனை பேர் இங்க இருக்க வேணாம் ரெண்டு பேர் இருங்க போதும்”, எனக் கூறிவிட்டு கிரி கான்ஸ்டபிள் மற்றும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை வரவழைத்தான். 

யாத்ரா மற்றும் சிவி தவிர மற்றவர்கள் வெளியே சென்றனர். 

ரூமில் இருந்தவர்களை தூக்கிக் கொண்டு சென்றனர். கிரியும் தலையசைத்து விடைபெற்றான். 

ஜாக்சன் பற்றிய விவரங்களை கிரி கொண்டு வந்து குடுத்தான். 

அதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது நந்துவின் போன்கால் வந்தது. 

“சொல்லு நந்து”, அர்ஜுன். 

“………….” , நந்து. 

“அப்படியா. சரி நான் இங்கிருந்து அனுப்பிவைக்கிறேன். நானும் யாத்ராவும் இங்க வேலைய முடிச்சிட்டு வரோம்”, அர்ஜுன். 

“…………..”, நந்து. 

“சரி. வை வந்துடறேன்”,அர்ஜுன். 

“யாத்ரா தவிர எல்லாரும் இப்பவே தஞ்சாவூர் கிளம்புங்க. அந்த யோகி வேலைய ஆரம்பிச்சிட்டான்”, அர்ஜுன். 

“என்னாச்சி?”, நரேன். 

“நந்துவும் பரிதியும் சொல்வாங்க, உடனே கிளம்புங்க டைம் இல்ல. சக்தி நீ இங்க இரு”, அர்ஜுன். 

அனைவரும் அவசரமாகக் கிளம்பி நடு இரவில் தஞ்சை சென்று சேர்ந்தனர். அங்கே அவர்களுக்கு முன் அதிர்ச்சி காத்திருந்தது.

 

முந்தின  அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

 

முதல் அத்தியாயம் படிக்க ..

Click to rate this post!
[Total: 2 Average: 5]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 3,605

aalonmagarii

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    552 shares
    Share 221 Tweet 138
  • 1 – அகரநதி

    501 shares
    Share 200 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    471 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    429 shares
    Share 171 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply