வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – அமுதா
2. படிப்பு -B.Sc
3. தொழில்/வேலை – இல்லத்தரசி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்…
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்…
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
பெரும்பாலும் அலைபேசியில் தான்… அவ்வப்பொழுது புத்தகங்கள் வழியிலும்….
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
மாத இதழ் புத்தகங்கள் பதிப்பக புத்தகங்கள் சேர்த்து சராசரியாக வருடத்திற்கு 12 வாங்கிக் கொண்டிருந்திருப்பேன்… அலைபேசியில் படிக்க ஆரம்பித்த பிறகு புத்தகங்கள் வாங்குவது குறைந்து விட்டது…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இரண்டிலும்….
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியது… மன அழுத்தத்தை குறைத்தது…
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
குணாதிசயம் மாற்றினேனா என தெரியவில்லை… ஆனால் நிறைய சுயபரிசோதனை செய்திருக்கிறேன்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
சில நேரம் ஆசிரியர், சில நேரம் முன்னுரை, சில நேரம் உள்ளுணர்வு….
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?
(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
பெரும்பாலும் காதல், குடும்பம், ரொமான்டிக்… ஆன்கோயிங் கதைகள் படிப்பதால் எல்லாம் கலந்து படிப்பது போல் இருக்கும்….
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நம்மில் ஒருவர் …
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அப்படி எதுவும் இல்லை என நினைக்கிறேன்….
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் அப்பொழுது உள்ள சமூகம் சூழ்நிலை சார்ந்து எழுதினார்கள்… இப்போதைய எழுத்தாளர்கள் இன்றைய நடப்பை சார்ந்து எழுதுகிறார்கள்…
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
சில எழுத்தாளர்களின் எழுத்துப்பிழைகளை (ஆன்கோயிங் கதைகளில்) பார்க்கும் போது அப்படி தோன்றுவதில்லை …
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
செந்தமிழ் வாசிக்கும் போது நன்றாக இருக்கும்… ஆனால் நெருக்கம் தோன்றுவதில்லை… மற்ற வழக்குகளில் கதையின் போக்கு பொறுத்து நெருக்கம் இருக்கும்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
ஸ்கூல்லயே நமக்கு பிடிக்காத சப்ஜெக்ட் வரலாறு
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
வரம்பு மீறாமல் எழுதப்படும் காதல் குடும்ப நாவல்கள் நன்றாக ரசிக்க வைக்கின்றன…
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு கொண்ட கதைகளை படிப்பேன்… எளிய நடையில் இருக்கும் அறிவியல் சார்ந்த கதைகள் படிப்பேன்…
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
வேலை நேரம், தூங்கும் நேரம் போக வாசிப்பு நேரம் தான்
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
ஆன்கோயிங் கதைகளில் ஒவ்வொரு எபிக்கும் கமண்ட் செய்து விடுவேன்… முழுக்கதையாக படித்தால் கடைசி அத்தியாயத்தில் விமர்சனம் கொடுத்துவிடுவேன்… அந்தந்த தளத்தில் மட்டும்… எழுத்துப்பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவேன்… ஏற்புடையதாக இல்லாத விஷயங்களையும் தன்மையாக சொல்லி விடுவேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
வெண்மையில் எத்தனை நிறங்கள்
பால்நிலா
காதலெனும் சோலையிலே
அடிவாழை
எனக்காகவே நீ
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
முன்னாளில் படித்த கதைகளில் வரும் சில நிகழ்வுகள் மனதில் பதிந்து அவ்வப்போது ஞாபகம் வரும்… அவை மிகவும் சாதாரண விஷயங்கள் தான்..
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நிறைய புதிய எழுத்தாளர்கள் வருகிறார்கள்… வித்தியாசமான முயற்சி செய்கிறார்கள்… சமூகவலைத்தளங்களின் மூலம், ஒரு சிலரைத் தவிர எழுத்தாளர்கள் வாசகர்களோடு மிகவும் நன்றாக உரையாடுகிறார்கள்.. சில சந்தேகங்கள் கேள்விகளுக்கு அவர்கள் தரப்பை விளக்குகிறார்கள்…. எங்களுக்கெல்லாம் இது வித்தியாசமான அனுபவமாகவும் மிகவும் பிடித்தும் இருக்கிறது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
ஆரம்பத்தில் ஒரு சில ஆசிரியர்கள் கதைகளை மட்டும் படித்து வந்த நான் இப்போது நிறைய ஆசிரியர் கதைகளை பின் தொடர்கிறேன்… முகநூல் விமர்சனங்கள் நட்பு வட்டத்தில் கூறும் நல்ல கதைகளை படித்து, அந்த ஆசிரியர்களை பின் தொடரவும் செய்கிறேன்… சில நேரம் நேரமின்மை அடுத்தடுத்த கதைகள் முதலில் பிடித்த அளவு சிலநேரம் பிடிக்காமல் போகும் சமயங்களில் இடைவெளி விடுவதுண்டு… அதே போல் எனக்கு பிடித்த கதைகளை நட்பு வட்டத்தில் பகிரவும் செய்கிறேன்… என்ன ஒன்று முகநூல் குழுக்களில் வெளிப்படையாக போஸ்ட் போடுவதில்லை…
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்களில் இவர்கள் கதை தான் படிப்பேன் என இருந்ததில்லை… கிடைக்கும் கதை புத்தகங்கள் அனைத்தும் படிப்பேன் லக்ஷ்மி, ரமணியம்மா, காஞ்சனா ஜெயதிலகர் கதைகளை விரும்பி படிப்பேன்.
இன்று தமிழ் மதுரா, ராணித்தென்றல், மல்லி மேம், சரண்யா ஹேமா, வனிஷா, வேதா விஷால், எழிலன்பு, பவித்ரா நாராயணன், தேவி மனோகரன், ராகவி, ஸ்ரீநவினு லிஸ்ட் பெரிசா போகும்… எல்லாரையும் பின் தொடருகிறேன்…
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
ஸ்வாரஸ்மான நகர்வு, பிழையில்லாத அழகான எழுத்து நடை …
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
தெரியவில்லை பா….
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
எழிலன்பு சிஸ் அவர்கள் கையெழுத்திட்ட பரிசுப்புத்தகம் இருக்கிறது… இன்னாரென்று இல்லாமல் பிடித்த எழுத்தாளர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்க ஆசை…
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
ஆசிரியர்கள் தங்கள் கற்பனையில் கதையின் போக்கிற்கு ஏற்ப வைக்கிறார்கள் தான்… ஆனால் எதிர்மறையான முடிவு என் மனநிலையை சற்று பாதிக்க தான் செய்கிறது… சில நாட்களுக்கு மூளையில் ஓடிக்கொண்டிருக்கும்… இதற்காகவே ஹாப்பி என்டிங் கதைகளை மட்டுமே படிப்பது… ஆன்கோயிங்கில் எப்போதாவது தான் எதிர்மறையான முடிவு வரும்…
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஒன்றிரண்டு ஆடியோ கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன்… கதைகளை கேட்பதை விட படிப்பது தான் பிடிக்கும்…
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
முதல் கதை பிடித்தால் அதில் இருந்து தொடங்கும் கதை/கிளைக்கதை படிக்க ஆவல் வரும்… அதே அளவு ஸ்வாரஸ்யத்தோடு ஆசிரியர் கதையை கொண்டு போக வேண்டும்…
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
சில விஷயங்களை இது சாதாரணம் என்கிற மாதிரியும், பெரிய தவறில்லை என்கிற மாதிரியும், எழுதுவதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்…
மிகவும் எதார்த்தமான உரையாடல் அமுதா சிஸ்.. உங்க மனசுல இருக்கறத அப்படியே சொன்னது ரொம்ப மகிழ்ச்சி. புத்தகம், e-book இரண்டுளையுமே முழுமை உணர்வதா சொன்னது மகிழ்ச்சி. உங்களுக்கு முழுமை உணர்வு குடுத்த எழுத்துக்கள் உண்மையில் வரம் தான்.
வரலாறு மட்டும் ஏன் விட்டீங்க ? இது பாடம் இல்லையே .. கதை ஸ்வாரஸ்யமா தானே இருக்கும். நம்ம எழுத்தாளர் சகோக்கள் நிறைய பேர் வரலாற்று புனைவு எழுதறாங்க. அதையும் நீங்க படிச்சி கருத்துக்கள் சொன்னா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க..
உங்களுக்கு வாசிக்க இன்னும் நிறைய நேரம் கிடைக்கட்டும். நிறைய புது எழுத்துக்களை நீங்க படிக்கணும், ஆதரவு குடுக்கணும்-ன்னு கேட்டுக்கறேன்.
உங்க நேரத்தை எங்களோட செலவழிச்சது ரொம்பவும் சந்தோஷம் சிஸ். நனி நன்றி.
வாசிப்பை நேசிப்போம்…
நன்றிகள் …
சூப்பர். நல்ல மனம் திறந்த உரையாடல். வாழ்த்துக்கள் 🌹💐💐🌺
சுந்தர் ஜி