What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
காதல் பொய்த்து போனது …..
வாழ்க்கை பொய்த்து போனது ….
நம்பிக்கை பொய்த்து போனது …
உறவுகள் பொய்த்து போனது ….
உறுதியாக நினைத்த சில நட்பும் …
இறுதியாக பொய்த்து போனது …
உள்ளிருந்து வெளிப்பட்ட சிரிப்பு …
அதன் காரணம் அறியேன் …
நிற்காமல் வரும் சிரிப்பை நிறுத்தவும் விழையேன் ….
மூடனாக இருந்திருந்தால் சிறுஅமைதி கிட்டியிருக்கும் …
கண்மூடித்தனமான மூடனாய் கடந்துவிட்டேன் இத்தனை காலமும் … – நான்
தனித்திருப்பது புதிதல்ல ….
குழுவாய் இருந்தபோதும் தனித்தே இருந்திருக்கிறேன் ….
மகாதேவா …..
நீயின்றி எவரும் எனக்கு உறவுமில்லை … நட்புமில்லை …..
இன்னும் என்ன ஏமாற்றுப்பாடம் காத்திருக்கிறதோ ?
நின் பாதம் சரணடைந்தபின்னே ….
இத்தனை வேதனைகளும் எனை அதிகம் வாட்டுவதில்லை ஏனோ ?
நிதர்சனம் உணர்ந்ததாலா …… ?
என் நிலையை உணர்ந்ததாலா…..?
பைத்தியகாரன் என உனை அழைத்தவர் யாரடா ?
இப்புவியில் வாழும் பைத்தியங்கள் எங்களைவிட ……
சிரிப்பு ……
இன்னும் நிற்காமல் வருகிறது ….
ஒவ்வொன்றாய் …
ஒவ்வொன்றாய் ….
ஒவ்வொன்றாய் …. – நீ
என் கண்கட்டுக்களை அவிழ்க்கும்போது ….
இறுதியில் உறுதியாக இயற்கையன்றி ஏதுமில்லை உண்மையென்று ….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….