Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
3
+1
1
+1
+1
+1
+1
+1
கறிக் குழம்பு
தேவையான பொருட்கள் :
மசாலா தயாரிக்கும் முறை :
இந்த குழம்பிற்கு பச்சையாக மசாலாவை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மசாலா அரைக்க தேவையான பொருட்கள், கொத்தமல்லி,சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, கசகசா, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, ஏலக்காய், துருவிய தேங்காய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் மரமரப்பாக இருந்தால் நன்று.
செயல்முறை :
முதலில் அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது பாத்திரம் வைத்துக் கொள்ளவும். அது நன்றாக சூடானதும் 5 t.spoon கடலெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும். கடுகு நன்றாக பொரிந்ததும், உரித்து வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்…
பிறகு நறுக்கி வைத்த தக்காளி போட்டு அது வெந்ததும் கருவேப்பிலை இரண்டு கொத்து போடவும்.
கழுவி வைத்த கறியை வாணலியில் போட்டு நன்றாக கிளறிவிடவும். கறி நிறம் மாற ஆரம்பித்ததும், விளக்கெண்ணெய் 50மில்லி ஊற்றி நன்றாக கிளறிவிடவும். மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய் தூள் 3 – 4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு நன்றாக அடி பிடிக்காமல் கிளறியபடி இருக்கவும்.
கறியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறிவிட்டு கொண்டே இருக்கவும். அதன் பின் கறி மூழ்கும் அளவு தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிடவும்.
கறி முக்கால்வாசி வெந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விட்டு, குழம்பு கெட்டி பட்டதும், கடுகு, உளுத்தம்பருப்பு, 3 கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றவும். கொஞ்சமாக கொத்தமல்லி தழை இறுதியாக போடலாம், இல்லையென்றாலும் தேவையில்லை.
இதோ கறிக் குழம்பு ரெடி….
சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்திற்கும் இந்த கறிக்குழம்பு அற்புதமாக இருக்கும். நேரம் செல்ல செல்ல குழம்பின் ருசி கூடும் என்பது முக்கியமான விஷயம்.
இந்த குழம்பை குக்கரிலும் வைக்கலாம் ஆனால் சற்று நீர் போல இருக்கும். அடி கனமான பாத்திரத்தில் வைத்தால் கறியின் ருசியும், மசாலாவின் கலவையும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.
அடுத்த முறை இப்படி செய்து பாருங்களேன்…..
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Arumaiyana elimaiyana seimurai Villakam..