Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
கருவிழியில் தோன்றியது காதல்…..!
இன்னதென்று அறியாமலே வளர்கிறது…..!
நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்…..
இரண்டும் வேறல்ல – ஆனால்
இரண்டும் ஒன்றல்ல……
இதன் பிரிவினை தெரியாமல்…
திண்டாடுகிறது மனம்…..
மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?
நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?
குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்………..
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….