Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ எனது அடுத்த புத்தகம் “நெடுமொழி”. கிராமிய பின்னணியில் எனது சிறிய முயற்சி . இப்போது உங்கள் கைகளில் சேர்க்கிறேன்..
இந்த புத்தகத்தை வாங்க..
Notion Press:
https://notionpress.com/read/nedumozhi
இக்கதையின் சில துளிகள்..
“அவ முந்தானைல இரண்டாயிரம் முடிஞ்சி வச்சிருக்கா. நேத்து ராவுல பாத்தேன். உனக்கு இரண்டு புடவை அதிகமா வேணும்னா வாங்கிட்டு வா”, விட்டேத்தியாக கூறிவிட்டு தனது டூவீலரிடம் சென்று நின்றான் வேணு.
“இந்தாடி உன் முந்தில இருக்க பணத்த கொண்டா சீக்கிரம்”, கமலம் கத்தியபடியே வந்தார்.
“அது எதுக்கு சின்னம்மா?”, அவள் கலக்கமாகக் கேட்டாள்.
“ஏன்…. எதுக்குன்னு என்னை கேள்வி கேக்கற அளவுக்கு வந்துட்டியா நீ? ஒழுங்கா குடு டி”, என அவளின் முந்தியை இழுத்தாள் கமலா.
“சின்னம்மா அது என் பணம் இல்ல. இன்னிக்கு மில்லுல கேப்பாங்க. நான் திருப்பி குடுக்கணும்”, அவள் கத்துவதைக் காதில் வாங்காமல்
முந்தியில் முடித்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் தாளை பிடுங்கிச் சென்று தன் மகனிடம் கொடுத்தாள்.
“கனலு…. எனக்குன்னு யாரும் இல்லை…. உனக்கு தெரியும்ல”, பேச்சை ஆரம்பித்தான்.
தெரியும் என அவள் தலையசைத்தபின் ,” எனக்கு எல்லாமா இனிமேட்டு நீ இருப்பியா ? “, என தன் எண்ணத்தைத் சிதறு தேங்காய் போல உடைத்தான்.
அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் சில நொடிகள் முழித்தவள் புரிந்ததும் அதிர்ந்து இரண்டடி பின்னே நகர்ந்து நின்றாள்.
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….