58 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

58 - ருத்ராதித்யன்  ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அனைவரும் ஒரு மணிநேரத்தில் தேனி சென்று, அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி நோக்கி பறந்தனர். முன்பு நானிலன் தனியாக வந்து  கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த திசையில் இவர்களும் பயணித்தனர். அன்று தனியாளாக வந்து கடலில் சென்று பார்க்க எண்ணிய இடத்தை இன்று ஒரு குழுவாக சேர்ந்து, தங்களின் நோக்கம் அறிந்து சென்று கொண்டிருந்தான். ஆதி ஆருத்ரா கூறியபடி, கன்னியாகுமரியில் இறங்கியதும், சொகுசு படகின் உரிமையாளர் எண்ணிற்கு அழைத்து பேசினான். ஊருக்கு ஒதுக்குபுறமான கடற்கரை ஓரத்தில் நிழல் தரும் இடத்தில் அனைவரையும் அழைத்து வந்து நிறுத்தி,...

57 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

57 - ருத்ராதித்யன் “ரிஷி……”, என ராஜ் கர்ணா அவனை கண்டதும் சென்று கட்டிக்கொண்டான். “உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ராஜ்..”, என ரிஷித்தும் அவனை தழுவிக்கொண்டான். “அங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா…..? நாம அவங்கள்ள ஒருத்தர கூட சும்மா விடவே கூடாது ரிஷி…. அதுவும் அந்த புலிய பார்ட் பார்ட்டா கழட்டி எடுக்கணும்….”, என கண்களில் பழி வெறி மின்ன கூறினான்.“நீ சொல்லவே வேணாம் ராஜ்… அவங்களுக்கான ஸ்கெட்ச் நான் போட்டுட்டேன்… அதோட முதல் படியா உன்னை கொண்டு வந்துட்டேன். அடுத்து என் மாயா டார்லிங் அண்ட் அந்த...

56 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

56 - ருத்ராதித்யன் “ இன்னிக்கி நைட் யார் எல்லாம் கெளம்பணும் நுவலி?”, வல்லகி யோசனையுடன் உள்நுழைந்தவளை கேட்டாள். “நீங்க, நான், நாச்சியார் அக்கா, கண்மயா அக்கா, நானிலன் அண்ணா, ஆதி சார், அர்ஜுன் அண்ணா….”, என கூறிவிட்டு ஆருத்ரா அருகில் சென்றவள் அவள் கையை பிடித்துக் கொண்டு, “ நீங்க இன்னிக்கி ஜாக்கிரதையா இருக்கணும் ம்மா…”, என கவலையுடன் கூறினாள். “ஹே என்ன நுவலி நான் இல்லாம நீங்க எல்லாம் கிளம்பினா எப்படி?”, யாத்ரா கேட்டாள். “நீங்க தேவி குகைக்கு போய் நாங்க வர வரைக்கும் தியானம் பண்ணனும் யாத்ரா க்கா…”“அப்போ நாங்க?”, என...

55 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

55 - ருத்ராதித்யன் “என்னால தான்  ஒவ்வொரு தடவையும் சிங்கன் வெளிய வரது தடைபடுதுல்ல நானிலா?”, ஆச்சி வருத்தத்துடன் கூறினார். “அமரபுசங்கன் உங்கள கவனமா பாத்துக்கணும்ன்னு நெனைக்கராரு பாட்டி…. அதனால தான்…”, நானிலன் அவர் வருத்தம் கண்டு அவரின் கைப்பிடித்து கூறினான். “அவன் சொன்னா சரி…. அவனோட இந்த நிலமைக்கும் நான் தானே காரணம்……”, என மீண்டும் வருத்தம் கொண்டார். “அடடே… என்னா பாட்டி நீங்க? எனக்கு நல்லா சமைச்சி குடுத்து என்னை தெளிவாக்குவீங்கன்னு நினைச்சி நான் வந்தா நீங்க இப்படி அழுறீங்க….. “, வல்லகி அவரை மெல்ல கைப்பிடித்து தூக்கி நிறுத்தினாள். “வா ராசாத்தி… உன்னால...

54 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

54 - ருத்ராதித்யன்   மகதன் ஓடி வருவது கண்டு தர்மதீரன் நாச்சியார், வல்லகியின் முன் வந்து மறைத்துக் கொண்டு நின்றான். மகதனின்  உருமலில் பாலாவிற்கு மயக்கம் வருவது போல இருந்தது. வல்லகியின் கையை இறுக்கி பிடித்தபடி பின்னால் சென்றாள். மகதன் அர்ஜுனை பிடிக்க அவனை மட்டுமே குறியாக பார்த்துக்கொண்டு நின்றது. அர்ஜுன் மகதனை வெறுப்பேற்றிய படி ஆதியின் அருகில் சென்று நின்றான். ஆதியின் முன்னால் மகதனும், பின்னால்  அர்ஜுனும் இப்போது நின்று இருந்தனர். “டேய்…. நீ அவன வெறுப்பேத்தறேன்னு சொல்லி என் சோலிய முடிக்க பாக்கறியா டா?”, ஆதி மகதன் கண்களில் இருக்கும் கோபத்தைப் பார்த்துக்...

53- ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

53- ருத்ராதித்யன்  அதிபன் அலைபேசிக்கு விதுரன் கட்டப்பட்டுக்கிடக்கும் புகைப்படம் வந்தது. அதைக் கண்டவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் எழுந்தது. அந்த ரிஷித்தை தன் கைகளாலேயே கொல்லும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ஆனால் அவன் பலம் கண்டு கையை கட்டிக்கொண்டு தன் மனதை சமன்படுத்த முயன்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ருதஜித்திற்கு அழைத்தான். “நான் போறதுக்குள்ள அந்த சக்தி வந்து அந்த பையனை கூட்டிட்டு போய்ட்டான். நீங்க விதுரன கடத்தறதால எந்த பிரயோஜனமும் இல்ல…”, அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினான். “அவனால உனக்கு எந்த பயனும் இல்லாம இருக்கலாம் அதிபன். எங்களுக்கு இருக்கு….. நாங்க சொல்றத நீ...

52 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

52 - ருத்ராதித்யன் “எங்க போகணும் ? நாங்க சேனாதிபதிகளா?”, அர்ஜுன் அவன் அருகில் வந்து அஜகரனை தடவியபடி கேட்டான். “ஆமா… எனக்கு கிடைச்ச சுவடில அப்டி தான் இருக்கு… ரெண்டு வரிக்கு மேல அத என்னால படிக்க முடியல…. ரொம்ப பழைய வார்த்தைகளா  இருக்கு…. “, நானிலன் பயந்தபடியே கூறினான். “மொதல் வந்து ரெஃபிரேஷ் ஆகி சாப்பிடுங்க… அப்பறம் பேசலாம்….”, என யாத்ரா அவனை தன் பின்னால் வரும்படி கூறிவிட்டு கிராமத்திற்குள் நுழைந்தாள். “உங்க பேரு என்ன?”,, யாத்ரா அவனை ஆராய்ந்தபடி கேட்டாள். “நானிலன் மேடம்….”, இப்போது சற்று பயம் விலகி மனம் அமைதியானது.. “எந்த ஊரு?”“திருச்சி...

51 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

51 - ருத்ராதித்யன்  அருணாச்சலப் பிரதேசம்…..பனி மலையும், பச்சை கம்பளி போன்ற மலையும் எதிரெதிர் நிமிர்ந்து நின்றது. குளிரும், வெயிலும் ஒரே நேரத்தில் வர, இதமான வெப்பம் அங்கே பரவி இருந்தது. ரிஷித் அங்கே தனது இன்னொரு தேடல் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான். ராஜ் கர்ணா இல்லாமல் இரண்டு கைகளும் உடைந்தது போல தான் இருந்தது. அவனிடம் அவனுக்கு ஒன்று வேண்டுமென்று கூறிவிட்டால் போதும் அது எப்படியேனும் அவன் கரங்களுக்கு வந்து விடும். சட்ட விரோதமான பல மருந்துகளை கண்டுபிடித்து, அதை நிழலுலகில் விற்று வந்த பணத்தை வைத்து தான் அவன் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி...

50 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

50 - ருத்ராதித்யன்  நானிலன் சக்தி அவனிடம் பேசியபடியே தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.  தாயின் உடல்நிலை திடீரென மோசமானதும் என்ன செய்வதென அவனுக்கு புரியவில்லை… பாதிக்கும் மேலாக உடல் தேறி வந்திருந்தார். அன்று தந்தையுடன் மெல்ல நடந்து வருகிறேன் என அருகில் இருக்கும் பூங்காவிற்கு எப்பொழுதும் போல தனது ஊன்று கோலை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றார். “ஹலோ….. இஸ் திஸ் மிஸ்டர் சக்தி ?”, என அலைப்பேசியில் பேச ஆரம்பித்தான். “ஆமா நானிலன்…. நான் சக்தி தான் …. உங்க மேனேஜேர் உங்ககிட்ட விஷயத்த சொல்லி இருப்பாரு…. நீங்க நாளைக்கு...

49 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

49 - ருத்ராதித்யன்  சக்தி திருச்சி நோக்கி தனது பயணத்தை துவக்கியதும், அவனை தொடர்ந்து ஒரு கார்  சென்றது. நானிலன் பற்றிய குறிப்பு ரிஷித்திற்கும் அந்த சுவடிகள்  மூலம் தெரிய வந்தது. அவனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொல்லி அதிபனிடம் கூறினான். “நான் எதுக்கு உங்களுக்காக வேலை செய்யணும் மிஸ்டர் ரிஷித்?”“நீ உயிரோட இருக்கறதுக்கு அதிபன்… உன்னோட ஆதாயம் என்னனு கணக்கு போட்டு தானே ராஜ் கர்ணாகிட்ட ஆருத்ரா பத்தி சொல்ல வந்த…. இப்போ உன்னோட பெரிய லாபம் உன் உயிர் இந்த உடம்புல எந்த சேதாரமும் இல்லாம இருக்கறது தான்….”, என...

Page 12 of 58 1 11 12 13 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!