84 – ருத்ராதித்யன்
84 - ருத்ராதித்யன் கிழக்கு மலைகளில் இருந்து வெளியே வந்ததும் நரசிம்மனும், மகதனும் தென்கிழக்கு திசை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களை தேடி சென்ற சேயோன் ஒரு நாள் பொழுதை காடுகளில் கழித்து விட்டு இல்லம் சென்றான். அவனைத் தேடி அரசனின் பணியாளும் வந்து நின்றான். “அரசர் தங்களை உடனே வரச்சொன்னார்..” பணியாள். “இரண்டு நாழிகையில் வருகிறேன். இப்போது தான் காட்டில் இருந்து வந்தேன் என்று அரசரிடம் தெரிவி..” எனக் கூறியவன் அவசரமாக குளித்து உடைமாற்றிக் கொண்டு தன் ஆட்களில் சிலரை அழைத்து காட்டினில் வேட்டையாடிய மிருக உடல்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...