102 – ருத்ராதித்யன்
102 - ருத்ராதித்யன் “தமையரே.. அந்த இடத்தினை பாருங்கள் சிவப்பாக ஏதோ மிளிர்கிறது.. அந்த இடத்திற்கு அருகே செல்லுங்கள்..” என ஆருத்ரா கூறினாள். “எனக்கு ஒன்றும் தெரியவில்லையே சிங்கமாதேவி..” அமரன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி கூறினான். “உங்களுக்கு வலது பக்கம் நூறடி தூரத்தில் அந்த வெளிச்சம் தெரிகிறது இளவலாரே..”“இங்கே உனக்கு தான் முக்கியபணி இருப்பதாக அரசர் கூறினார். இது அதுவாக இருக்கலாம். எனது கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நீ கூறும் இடத்தில் தரையிறங்குகிறேன் இளவரசி..” எனக் கூறிவிட்டு சிறிது தூரம் கடந்து மெல்ல தரையிறங்கி அவளையும் இறக்கிவிட்டான். “இந்த இடத்தில் வித்தியாசமான வாசனைகள் வருகிறது. உங்கள்...



