16 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

16 - ருத்ராதித்யன் "குட் ஈவினிங் சார்….. ", என கண்மயா கூறிவிட்டு சக்ஸராவை இடித்தாள்.சகஸ்ரா பேசமுடியாமல் வாயும் தலையும் மட்டும் அசைத்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.சகஸ்ராவைக் கூர்ந்துப் பார்த்தபடி, "இன்னும் உனக்கு இந்த வியாதி சரியாகலியா சகஸ்ரா? நான் குடுத்த டேப்லட் சாப்டல போலவே?", என கண்கள் விரித்து மென்னகைப் புரிந்தபடிக் கேட்டான்.ஒருவாறு தன் இதயத்தை இயல்பாக துடிக்க வைத்து, "நான் ஏற்கனவே எடுக்கற மெடிசன் நல்ல ரிசல்ட் குடுக்கறதால அதை நான் எடுக்கல சார்", என மெல்லக் கூறினாள்."இஸ் இட்?", என அவர்களை சுற்றி வந்து அந்த தேளைப்...

15 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா உனக்கு அறிவில்ல.. உன்  பைக் வீட்ல இருந்து எடுத்துட்டு போனல்ல.. அது எங்க?""பைக் பூவழகி சொன்ன இடத்துல நிறுத்திட்டு வந்துட்டேன் பாஸ்…. இன்னொரு மிஷன் வந்திருக்காம்…. அதான் முன்னேற்பாடு பண்றோம்", என அவன் திறந்த புத்தகமாக...

14 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

14 - ருத்ராதித்யன் மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.சட்டென ஓடும் பாம்பையும், கத்தும் பறவைகளின் ஒலியையும்  கண்டு அருகில் வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தான்.எதிரே ஏதோ அசைந்து சென்றதை பார்த்தான் அல்லவா அது அவன் அருகில் வந்திருந்தது.ஆனால் அதன் உடல் தூரமாக தான் இன்னும் தெரிகிறது. தலைமட்டும் இவன்...

13 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

13 - ருத்ராதித்யன் "ஒரு நிமிஷம் நிறுத்து டா.. . நீயும் நானும் பேசற கேப்புல இரண்டு பேரு ஓடிட்டாங்க பாரு", என நந்து யாத்ரா, ஆதியை பற்றிக் கூறினான்."நீயே போய் பாரு.. எனக்கு உள்ள ஒரு வேலை இருக்கு வரேன்", என அர்ஜுன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிரஞ்சீவை அழைத்தான்."மாப்ள…. சிவி….. டேய் சிவி …. மாப்ள….", என அழைத்தபடி சென்றவன் எதிரில் தாய் கயல் வந்து நின்றார்.ஒரு கையை இடுப்பில் வைத்து, மறுகையில் கரண்டியை இறுக்கமாகப் பிடித்தபடி, "என்ன கூப்ட?", எனக் கேட்டார்."மாப்ளைய கூப்டேன் மா..  அவன்...

12 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

12 - ருத்ராதித்யன் ருதஜித் அடுத்த விலங்கினை அடையாளம் கண்டு கடத்த மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தான்.அவனது ஆட்களை பல இடங்களுக்கு மாறுவேடத்தில் அனுப்பி சோதித்தும், ஒருசில ஊரில் உள்ளவர்களிடம் வாய்பிடுங்கவும் வைத்தான்."ஏன் பெருசு… நம்ம ஊரு பக்கம் எதாவது வித்தியசமா விலங்கு பொறந்ததா?", மாட்டுச்சந்தையில் ஒருவன் வந்து அந்த பெரியவரிடம் கேட்டான்."வித்தியாசமாவா?", பெரியவர் யோசனையுடன் கேட்டார்."அதான் பெருசு இப்பகூட ஒரு மாடு மூனு கண்ணோட பொறந்திருக்குன்னு பேப்பர்ல டீவில கூட சொன்னாங்களே.. அப்படி எதாவது வழக்கத்து மாறா நடந்துக்கறது, வித்தியாசமான தோற்றம்னு எதாவது இருக்கா?"."அப்படியெதுவும் தெரியல… ஆனா போன மாசம்...

11 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

11 - ருத்ராதித்யன் மீண்டும் ஆயுஸால் கடத்தப்பட்ட மகதன் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.ஆயுஸ் கீழே கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் மகதனை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். அருகில் கிஷான் காயப்பட்டுப் படுத்துக்கிடந்தான்.அடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மகதன் மயக்கமருந்தின் வீரியத்தால் படுத்துக் கிடந்தது.இரத்த வாடை அதன் உடலில் இருந்து வந்தபடியே இருக்க, அந்த மயக்கத்திலும் அது முகத்தை சுளிப்பது ஆயுஸின் கண்களிலும் பட்டது.பொதுவாகவே புலிகள் தூய்மை விரும்பிகள். தன்னை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.ஒவ்வொரு முறை வேட்டையாடி உண்டபின் நீர்நிலைக்கு சென்று தன் கைகால் உடல் என அனைத்தும் கழுவிகொள்ளும். பெறும்பாலும் அது முழுதாக நீரில் குளித்து ஆட்டம்...

10 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

10 - ருத்ராதித்யன் நந்துவைக் கண்டதும் கண்மயாவும் சகஸ்ராவும் எழுந்து நின்றனர்.."நந்தன்…  ஏன் அவங்கள மெரட்றீங்க?", எனக் கேட்டபடி யாத்ரா பின்னே வந்தாள்."அவங்க ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தாங்க அதான் என்னனு கேட்டேன்…..", எனக் கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்."இந்தாள பாத்தாலே பத்திகிட்டு வருது…. ஆளும் மூஞ்சியும்", என சகஸ்ரா நந்துவை பார்த்தபடி கண்மயாவிடம் முணுமுணுத்தாள்."திட்றதா இருந்தா நேரடியா திட்டுங்க சகஸ்ரா மேடம்…. ஏன் அவங்க காத கடிக்கறீங்க?", நந்து சகஸ்ராவை அளந்தபடிக் கூறினான்."அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நந்தன் சார். அவ ஊருக்கு கிளம்பலாம்னு சொல்றா", என கண்மயா பேச்சை ஆரம்பித்தாள்."மாயா டார்லிங்…...

9 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

9 - ருத்ராதித்யன் பைரவக்காட்டில் அருவம் தன் முன்னால் உள்ள சுயம்பு லிங்கத்திடம் தன் துயரத்தை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.அருவமாயிற்றே….. அதன் கண்ணீர் யாருக்கும் தெரியாது அல்லவா?ஆனால் எல்லாம் அறிந்த ஈசனுக்கு தெரியாமல் இல்லையே…. அவனே அதன் துயரத்தை துடைக்க வேண்டும்.வெளியே உறுமல் சத்தம் கேட்டும் அருவம் இன்னும் திரும்பவில்லை.கார்மேகன் உள்ளே வந்து அருவத்தை மோப்பம் பிடித்து அதன் அருகில் நின்றது.அருவத்தின் கண்ணீர் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அதன் மனவேதனையை நன்றாக உணர்ந்து கொண்டது கார்மேகன்."ஏன் இத்தனை துயரம் அமரரே ?", கார்மேகன்."மீண்டும் வஞ்சிக்க, வங்கை கொண்டு வீழ்த்த முயல்கின்றனர் கார்மேகா…....

பிணம்….

மரத்து விட்டது மரணமும்…..இனி குத்த இடமில்லை தான்…ஆனாலும் கூர்முனை கத்திகள் குத்திக் கிழிக்கிறது மனதை…..தாயோ தந்தையோ உடன்பிறந்தோரோ….இம்மாய பூமியில் அனைவரும் ஒன்று தான்….வலி மட்டும் முக்கிய பொதுச் சொத்து….வேண்டாத போதும் மலையென குவிந்து வந்துவிடும்….சுமக்க முடியாமல் சுமந்து…மூச்சு நிற்கும் கணத்தில் சிறிது ஆசுவாசத்தோடு…..எலிக்கு வைக்கும் தேங்காய் துண்டு போல….மகிழ்ச்சியும் வந்துபோகும்….பித்துப் பிடித்த மனம்….அதன் பின்னால் செல்லும்போதே….பெரிதாக நம் பின்னால் வாளேந்தி நிற்கும்….ஒவ்வொரு முறையும் இதே இனிப்புத் துண்டு‌….அதே கத்திகுத்து….ஹாஹாஹா…..பைத்தியமென கூறு தப்பில்லை …..நிற்காமல் சில நொடிகள் சிரித்து விட்டு….மீண்டும் வலியேந்த தயாராகி விடு….நன்றாக புரிந்துக் கொள்….நீ சாகவும் முடியாது….வாழ்வும் முடியாது….கர்மங்கள்...

8 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

8 - ருத்ராதித்யன் மகதன் அந்தச் சிறுக்குன்றைத் தாண்டி மறுபக்கம் செல்லும் போது ஆயுஸ் கூட்டம் அவனைப் பார்த்துவிட்டது.கிஷான், "மிட்டல் நீங்க நாலு பேரும் அந்த பக்கமா சுத்தி வளைங்க…. ", எனக் கட்டளையிட்டு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகள் இரண்டெடுத்து ஆயுஸிடம் ஒன்றைக் கொடுத்தவன், மற்றொன்றுடன் மகதனைப் பின்தொடர்ந்தான்.மகதன் சுற்றிலும் ஆட்கள் நடமாடும் அரவமும் வாசனையும் உணர்ந்ததும், அதன் பச்சைக் கண்கள் கோபத்தில் மின்னத் தொடங்கின.அடி வயிற்றிலிருந்து எவரையும் நடுங்க வைக்கும் உறுமல் சத்தத்துடன், பதுங்கி நடக்க ஆரம்பித்து சுற்றிலும் பார்வையைச் சுழற்றியது.கிஷான் அதன் பின்னால் சற்று தூரத்தில் மறைந்து...

Page 4 of 45 1 3 4 5 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!