21 – அகரநதி

3 – அகரநதி

21 - அகரநதி அடுத்த நாளில் இருந்து அகரனும் சரணும் தங்களது அலுவலக பணியில் மும்முறமாகினர்.நதியும் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற வேண்டிய ஏற்பாடுகள் செய்துக் கொண்டே பரிட்சைக்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்.ஸ்டெல்லா ஹாஸ்டல் பணியை முடித்துக் கொண்டு பெற்றோர்களை, தாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வந்தாள்."ஸ்டெல்லா இவ்வளவு பெரிய வீட்லயா இருக்கப்போறீங்க?", தாய் மேரி."ஆமாம்மா. இது ரிஸ் கட்டிக்க போறவரோட  கெஸ்ட் ஹவுஸ்.. சும்மா தான் இருக்குன்னு அவங்க வீட்லயே எங்கள இங்க தங்க சொல்லிட்டாங்க. அடுத்த மாசத்துல இருந்து கம்பெனிக்கு போகணும் அதனால வெளியே தங்கினா...

20 – அகரநதி

3 – அகரநதி

20 - அகரநதி மரகத கம்பளி போன்ற ஊரை விட்டுச்  சென்றுக்  கொண்டிருந்த வாகனத்தில், நதியாள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடிக்  கண்களில் ஒருவித ஏக்கத்துடன் பின்னால் பார்த்தபடி வந்தாள்."என்ன வண்டி சைலண்ட்ஆ வருது", சரண் கூறியபடி பின்னால் திரும்பிப்  பார்த்தான்.நதியாள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருவதைப்  பார்த்துவிட்டு,"ஓய் யாள்….என்ன அமைதியாகிட்ட? ஊரை விட்டு வர மனசு இல்லையா?", சரண்."ஆமா சரணா….. ரொம்ப வருஷம் கழிச்சி இந்த தடவை தான் ஊருல ரொம்ப சந்தோஷமா நிறைவா இருந்தேன். மறுபடியும் இந்தமாதிரி எப்ப இருக்கும்னு தெரியாதுல்ல",நதியாள். "ஏன் நதிமா இப்படி...

19 – அகரநதி

3 – அகரநதி

19 – அகரநதி அங்கிருந்து கிளம்பிய நதி நேராக சரணின் இல்லத்திற்கு சென்றாள்."சரணா…. டேய் சரணா….", என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்."அடடே…. வாடா யாள் குட்டி….இப்பதான் இந்த பெரியப்பா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சா?",பரமசிவம் கேட்டபடி அவளைத்  தோளில் சாய்த்துக் கொண்டார்."நான் எப்ப லீவுக்கு வந்தாலும் வந்துட்டு தானே இருக்கேன் பெரியப்பா", அவளும் சலுகையுடன் அவர் தோளில் இடித்தாள்."ஹாஹா… ஆமா… சரி இன்னிக்கு இராத்திரி இங்கயே தங்கிக்க குட்டி. நாம இராத்திரி மாடில உக்காந்து சாப்பிட்டுகிட்டே பேசி எத்தனை மாசம் ஆச்சி…. நீ இல்லாம உன் பெரியம்மாவும் வரமாட்டேங்குற மாடிக்கு", பரமசிவம்."இன்னிக்கு முடியாது...

18 – அகரநதி

3 – அகரநதி

18 – அகரநதி குண்டத்தைத் தாண்டி கோவிலுக்குள் வந்தவள், சாமி தரிசனம் முடித்துவிட்டுப்  பிரகாரத்தைச்  சுற்றும் சமயம் நடைத்  தள்ளாட, மயக்கம் போட்டு விழுந்தாள்.அவள் பின்னே வந்த அகரனும் சரணும் அவளைத்  தாங்கிப்  பிடித்தனர்."நதிமா… நதி….", அகரன் அவளின் கன்னத்தைத்  தட்டினான்."யாள்குட்டி… குட்டிமா… கண்ண தொற டா. என்னாச்சி உனக்கு?", சரண்."என்னாச்சி அகர்?", என்றபடி தேவ் வர, அவனின் பின்னே வந்தவர்கள் அனைவரும் கூடி நின்று விட்டனர்.பின் மரகதம்மாள் அந்த பக்கம் வர, கூட்டம் கூடி நிற்பதைப்  பார்த்துவிட்டு நதியாள் மயங்கிக் கிடப்பதையும் கண்டார். பின் ," எல்லாரும் நகருங்க. காத்து...

17 – அகரநதி

3 – அகரநதி

17 – அகரநதி காதலில் விழுந்த அகரன் முதல் முறையாக நதியாளின் முன்நெற்றியிலும், கன்னத்திலும் இதழ் முத்திரைப் பதித்தான்.அகரனின் செயலில் திகைத்து நின்ற நதி என்ன சொல்வதென அறியாது உறைந்து நின்றாள்.அகரனும் அவ்விடம் விட்டு நகராது அங்கேயே அவளின் முகத்தை பார்த்தபடி நிற்க, இப்படியே இன்னும் சில நொடிகள் சென்று இருந்தாலும் என்ன நடந்து இருக்குமோ?நல்லவேலை சரண் சத்தம்போட்டு அவர்களின் நிலையைக்  கலைத்து," யாள்...உன்ன பாக்க வரதன் வந்து இருக்கான். போய் பேசு..  நான் ஜுவல்ஸ் எடுத்துட்டு வரேன். டேய் அகர் தேவுக்கு உன் டிரஸ் குடு. சேஞ்ச் பண்ணணுமாம்". நதி சற்றுக்...

16 – அகரநதி

3 – அகரநதி

16 – அகரநதி பூஜைகள் முடிந்து வந்த அனைவரும் அன்னதான கூடத்தில் நடந்துக்  கொண்டிருந்தக் கலாட்டாவை சில நொடிகள் நின்றுப் பார்க்க, அங்கு வந்த நதியாள் அங்கிருந்தவர்களைத் தாண்டி முன்னே வந்து அங்கே கலாட்டா செய்துக் கொண்டிருந்த ஒருவனைப் பிடித்துக் கன்னத்தில் ஒரு அடியை விட்டாள்.அன்னதான கூடத்தில் ஏற்கனவே சாப்பாடு அனைத்தும் தயார் செய்து எடுத்து வைத்திருந்தனர்.சமையல் செய்தவரில் ஒருவன் தான் சாராயம் குடித்துவிட்டு வந்து அங்கே இருப்பவர்களிடம் தகராறுச் செய்துக் கொண்டு இருந்தான்.குடித்துவிட்டு தகராறு செய்பவனை வெளியேற்ற முயன்றபோது தான் ஆட்களுக்குள் கைகலப்பு ஏற்பட அந்த சமயம் நதியாள் உள்ளே...

15 – அகரநதி

3 – அகரநதி

15 – அகரநதி அடுத்த நாள் காலையில் அனைவரும் கோவிலில் இருந்து கலச குடத்தை எடுத்துக் கொண்டு தீர்த்தம் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தனர்.அகரனும் சரணும் வேஷ்டி கட்டி, இடுப்பில் துண்டு கட்டியபடி கைகளில் குடத்தை எடுத்துக்கொண்டுப்  பெரியவர்களைப்  பின்தொடர்ந்தனர்."சித்தப்பா… யாள் எங்க காணோம்?", சரண் கண்ணனிடம் கேட்டான்."ரெடி ஆகிட்டு இருந்தா சரண். நேரா ஆத்தங்கரைக்கு வந்திடறேன்னு என்னை முன்ன அனுப்பிட்டா", கண்ணன்."தண்ணி எடுக்க என்ன அப்படி ரெடி ஆகறா?", சரண்."வருவா டா. நீயே கடைசி நிமிஷத்துல தான் வந்த. உன் தங்கச்சி எப்படி இருப்பா?",அகரன் கேலியாக கூறினான்."அதான் வந்துட்டேன்ல. அவ இன்னும்...

14 – அகரநதி

3 – அகரநதி

14 – அகரநதி பார்ச்சூனர் காரில் இருந்து இறங்கியவன் பின் கதவைத் திறந்து உள்ளிருப்பவர்கள் இறங்க உதவி செய்தான்.உள்ளிருந்து நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும், ஐம்பதை கடந்த ஆணும் இறங்கினர். பின் எழுவது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவரும் இறங்கினார்."வணக்கம் மரகதம்மா…. வாங்க...எப்படி இருக்கீங்க? வா சந்திரகாந்தா… வாம்மா… வாங்கப்பா", என சுந்தரம் தாத்தா எழுந்து நின்று வரவேற்றார்."மச்சான் இவனுங்க தான் இன்னொரு குடும்பமா?", சரண் அகரனின் காதைக் கடித்தான்."அப்படி தான் போல மச்சான். இவங்களை இதுவரை நான் பார்த்ததா நியாபகம் இல்லை. அந்த பாட்டிய மட்டும் எங்கயோ பாத்தமாதிரி...

13 – அகரநதி

3 – அகரநதி

13 – அகரநதி "டேய் இப்படி சொன்னா எப்படி டா? ஒன்னு லவ் பண்றேன்னு சொல்லு இல்லையா பிரண்ட்னு சொல்லு.இரண்டுக்கும் சேராம இப்படி சொன்னா நான் எப்படி எடுத்துக்க?", சரண் தலையை சொறிந்தபடிக் கேட்டான்."எனக்கே தெர்ல மச்சான். அவகிட்ட நான் எத எதிர்பார்க்கிறேன்னு. ஆனா அவகூடவே நான் எப்பவும் இருக்கணும். அது மட்டும் தான் என் மனசுல இருக்கு. அவள யாரும் ஹர்ட் பண்ணாம பாத்துக்கணும், அவ ஆசைபடறது எல்லாமே செஞ்சி குடுக்கணும், அவ எது கேட்டாலும், அந்த செகண்ட் வாங்கி தரணும், அவ என்ன செய்ய ஆசைபடறாளோ அதையெல்லாம் செஞ்சிகுடுக்கணும்....

12 – அகரநதி

3 – அகரநதி

12 – அகரநதி மீனாட்சி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு நதியும் அகரனும் முன்னே செல்ல நதிக்கு குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு பின்னே நடந்தான் சரண்."டேய் மச்சான்….", அகரனை பின்னால் இழுத்து அழைத்தான்."என்னடா?", அகரன்."என்ன இப்படி தண்ணி பாட்டில் தூக்க விட்டுட்டியே உனக்கே நியாயமா ?", சரண்."நீ பேசின பேச்சுக்கு இதோட போச்சேன்னு சந்தோஷப்படு", அகரன்."என்னடா நீயே இப்படி சொல்ற? நான் உண்மைய தான்டா சொன்னேன். அவள உள்ள விட்ட நம்ம வண்டவாலம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் டா", சரண்."ஏன்டா நான் என்ன கள்ளக்கடத்தலா பண்றேன் இப்படி சொல்ற?", எனச் சரணின்...

Page 52 of 58 1 51 52 53 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!