31 – அகரநதி
31 - அகரநதி சரணுக்கு போன் கால் வந்தததும் பதற்றமாய் மூவரும் கிளம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மதுரன் வரவேற்பறையில் நின்றிருந்தான். அவனைக் கண்ட நதியாள் யோசனையாக அகரனைப் பார்க்க , அகரன் சரணைப் பார்த்தான். "அவர் தான் கால் பண்ணாரு. அப்பாக்கு ஆக்சிடெண்ட்னு…", சரண் பதில் கொடுத்தபடி அவனருகில் சென்றான். "பெரியப்பாக்கா? என்னாச்சி?", நதியாள் பதறிப்போய் கேட்டாள். "ஆமா. சஞ்சய், மாமா ,அப்பா எல்லாரும் ரோட் ஓரமா நின்னுட்டு இருந்து இருக்காங்க. ஈ.சி.ஆர்ல ஏதோ ரேஸ் நடந்து இருக்கு. அப்ப ஒரு பைக் அப்பா மேல மோதிரிச்சாம். மதுரன் அங்க பக்கத்துல இருந்தப்ப...


