What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
கதை தலைப்பு : பிறவித்துயர்
கதாசிரியர் : நித்யா மாரியப்பன்
“பிறவித்துயர் “ இந்த தலைப்பு பாத்ததும் எனக்கு ஞாபகத்துல வந்தது பொண்ணுங்க தான் . பிறவியே துயரம் நிறைஞ்சதுன்னு தன் வாழ்க்கைல ஒரு முறையாவது எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க..
ஏன்டா பொறந்தோம்ன்னு வலியோட கதறுரவங்களும் 99.99% பொண்ணுங்க இருக்காங்க .. அந்த கதறல் இந்த கதை படிக்கறப்பவும் நான் உணர்ந்தேன்.
இன்னிக்கி இருக்கற கால கட்டத்துல பொறந்த குழந்தைல இருந்து 70 வயசு பாட்டி கூட தப்பிக்க முடியறது இல்ல .. அந்த அளவுக்கு ஒரு சமுதாய கட்டமைப்புல வாழ்ந்துட்டு இருக்கோம் .
இந்த கதையோட ஆசிரியர், அழகா சொல்ல வேண்டிய விஷயங்களை தெளிவா சொல்லி இருக்காங்க . ஒரு 13 வயசு பொண்ணு சந்திக்கற பிரச்சனை , அதுக்கு அந்த பொண்ணோட மனநிலை , தொடுகை சம்பந்தமான பாடம் எடுத்த அப்பறம் அந்த குழந்தைக்கு வந்த தெளிவு , அந்த குழந்தை தன்னை எப்படி தற்காத்துகிட்டது..
வசுந்தரா கதாபாத்திரம் கடைசியா சொன்ன விளக்கங்கள் எல்லாம் வலிய உணர முடிஞ்சது .
பெண் குழந்தை மட்டும் இல்ல ஆண் குழந்தையும் இன்னிக்கி இந்த துயரில் விழுந்துட்டு வருது .
இந்த கதை மூலமா ஆசிரியர் , பாலியல் கல்வி எத்தனை முக்கியம்ன்னு அழகா காட்டிடாங்க.. எந்த குழந்தையா இருந்தாலும் நம்பிக்கையும் , தைரியமும் குடுத்து வளக்கணும்..
சின்ன கதை தான் .. பிரதிலிபில இருக்கு , படிக்க நினைக்கறவங்க படிக்கலாம்..
லிங்க் :
இந்த கதை ஆசிரியர் பத்தி தெரிஞ்சிக்கணுமா ???
இதோ லிங்க்குள்ள போய் பாருங்க:
நித்யா மாரியப்பன்
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….