Tag: சுயம்

1 – வேரோடும் நிழல்கள்

6 – வேரோடும் நிழல்கள்

6 - வேரோடும் நிழல்கள் “எனக்கு பைத்தியம் பிடிச்சிரிச்சின்னு கூட்டிட்டு வந்தீங்களா?” என நிழலினி அந்த இடத்தினைப் பற்றி தெரிந்ததும் கேட்டாள். “இப்படியே போனா கண்டிப்பா  நீ பைத்தியம் ஆகிடுவ.. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னேன்.. இது மெண்டல் ஹாஸ்பிடல் இல்ல.. உள்ள வா..” என சக்தி கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றான். “பாரேன் நம்ம ரூல்ஸ் ரங்கசாமிக்கு இங்க வந்ததும் கோவமெல்லாம் வருது.. கண்டிப்பா இவர் நல்ல டாக்டர் அஹ் தான் ...

1 – வேரோடும் நிழல்கள்

5 – வேரோடும் நிழல்கள்

5 - வேரோடும் நிழல்கள்  “இருக்கட்டும் பார்த்தி.. அதுக்காக விருப்பம் இல்லாத பொண்ணு பின்னாடி சுத்தறதும், கல்யாணம் பண்ணிக்க சொல்லி நெருக்கறதும் ரொம்ப தப்பு.. நானும் ஒரு பொண்ண பெத்தவன். எம்பொண்ணு பின்னாடி ஒருத்தன் இப்படி கேட்டுட்டு வந்தா நான் சும்மா விடுவேணா? அதே போல தான் மத்த வீட்டு பொண்ணுங்களும்..” என பாலதேவன் சூடாக பதில் கொடுத்தார். “கொஞ்சம் பொறுமையா இருங்க.. நம்ம பையன் ஒண்ணும் பொண்ணுங்க பின்னாடி சுத்தறவன் இல்ல.. ...

1 – வேரோடும் நிழல்கள்

4 – வேரோடும் நிழல்கள்

4 - வேரோடும் நிழல்கள்  “மிஸ்டர்.. யாரு நீங்க? ஒரு பொண்ணு தனியா இருந்தா இப்படி தான் பேசுவீங்களா?” கோபமாக கேட்டாள். “நான் இப்ப என்ன கேட்டேன்? கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு தானே கேட்டேன். அதுக்கு ஏங்க இப்படி முறைக்கறீங்க? விருப்பம் இருந்தா இருக்குன்னு சொல்லுங்க.. இல்லைன்னாலும் யோசிச்சி சொல்லுங்க…” நீரஜ் அவளிடம் வேண்டுமென்றே வம்பிலுக்க பேசுவது போல இருந்தது. “ச்சே.. நான்ஸென்ஸ்…” என அவ்விடம் விட்டு வேறிடம் சென்று  அமர்ந்தாள். “ஹலோ மிஸ்.. மிஸ் ...

1 – வேரோடும் நிழல்கள்

3 – வேரோடும் நிழல்கள்

3 - வேரோடும் நிழல்கள்  நீரஜ் அன்று மாலை வேலை முடிந்து நண்பனுடன் கிளம்பினான். பார்த்திபன் அவனது சிறுவயது முதலே நண்பன். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதினால் நெருக்கமும் அதிகம். சலீமா அவர்கள் கல்லூரியில் தோழியாகி இன்றும் இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறாள் கணவனுடன் அமர்ந்து.. “டேய் பார்த்தி.. உனக்கு ஏண்டா கிரிஜாவ பிடிச்சிருக்கு ?”, பார்த்திபன் மெல்ல வண்டியை அவனுடன் ஒட்டியபடி காலால் தள்ளிக்கொண்டு கேட்டான். “இது என்னடா கேள்வி ? எனக்கு அவள ...

1 – வேரோடும் நிழல்கள்

2 – வேரோடும் நிழல்கள்

2 - வேரோடும் நிழல்கள்  “அழாத டா….. அம்மா எப்பவும் உங்கூடவே தான் இருப்பாங்க…. சாமி பக்கத்துல இருந்து உன்னை இன்னும் நல்லா பாத்துக்கணும்ன்னு சாமிக்கு பக்கத்துல நின்னு சொல்லிட்டு இருப்பாங்க… இனிமே இப்படி அழ கூடாது.. நீ அழுதா அம்மாவுக்கும் அழுகை வருமாம்… அம்மாவ அழவைக்கலாமா நீ?”, விஷாலி கேட்டாள். “ஹூஹூம்… அம்மா அழக்கூடாது.. நானும் அழமாட்டேன்…. அம்மாவ நான் பாக்கவே முடியாதா மிஸ்?”, அழுகையைக் கட்டுப்படுத்தியபடிக் கேட்டாள். “கனிஷ்கா….. என்னாச்சி?”, எனக் ...

1 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ ஒரு புது கதையுடன் வந்துள்ளேன். இது தற்காலத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய "truama"  சார்ந்த கதைக்கரு. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் நம்மையோ, நம்மை சுற்றி உள்ளவர்களையோ காட்டலாம்.. மனம் சார்ந்த காயங்களுக்கான மருந்தை தரும் அத்தியாவசியத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். எப்பொழுதும் போல இதிலும் தங்கள் அனைவரின் ஆசியும், ஆதரவும் நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி கதைக்குள் பயணிக்கலாம் ..  1 ...

கலந்துணர்வோம்

கலந்துணர்வோம் கரையுடைத்து உனையணைத்து ....உனக்குள் பயணித்து.....நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்....கண்டுணர்ந்தபடி....நம்மிடையே உருவாகும்...கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு....உனக்குள் நானும்....எனக்குள் நீயுமாக....கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா.......- ஆலோன் மகரி 

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள திரியில் உள்செல்லவும் .. https://notionpress.com/read/meelnuzhai-nenje

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் இருந்து....அக்குரல் மொழியும் வழியே....இவளை இவளே தெளிவுப்படுத்தி....திடம் கொடுத்தபடி.....அஞ்சிய மனதை அதட்டி.....உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து....இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்....இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்....எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்....மொத்தமும் வீண் தான்....அவளின்  இப்பிறவி..... - ஆலோன் மகரி

Page 1 of 8 1 2 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!