28 – ருத்ராதித்யன்
28 - ருத்ராதித்யன் காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர். அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது. "சொல்லு கருப்பண்ணா….""பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா", என தயங்கியபடியே கூறினார். "என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…", என தன் பதற்றம் மறைத்தபடி கூறினாள். "இல்ல பாப்பா… நீங்க கிளம்புனதுல இருந்து எல்லா இடத்துலையும் தேடிட்டோம். எங்கேயும் அவன காணோம். கொம்பன் ...