77 – ருத்ராதித்யன்
77 - ருத்ராதித்யன் “தங்களுக்கு பரிட்சயம் தேவையில்லை என்று புரிகிறது. ஆனால் வனயட்சி இப்படியொரு முகம் கொண்டிருக்கிறார் என்று இன்று தான் நான் அறிகிறேன்.. நான் சிங்கத்துரியன் பற்றி கூறும்பொழுது கூட தாங்கள் தெரிந்ததாய் கூறவில்லையே தமையா ?”, ஆருத்ரா கேட்டாள். “இவரின் ஓவியம் நமது தலைமை வைத்தியசாலையில் இருக்கிறது ருத்ரா... அங்கே பார்த்திருக்கிறேன்.. வனயட்சி எனும் பெயர் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்கவில்லை. நேரில் கண்டதும் தான் தெரிந்தது ...