வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ எனது அடுத்த புத்தகம் “வலுசாறு இடையினில்”.. எனது எழுத்தில் எனக்கு ஒரு புதிய முயற்சியாக இந்த கதையை எழுதினேன். இயல்பான வாழ்வை காட்ட முயற்சித்து இருக்கிறேன்.
இந்த புத்தகத்தை வாங்க..
Notion Press:
https://notionpress.com/read/valusaaru-idaiyinil
Amazon.in :
Flipkart:
Amazon.com :
Amazon.co.uk :
இக்கதையின் சில துளிகள்..
“என்னடா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாகக் கேட்டான்.
“உன் அப்பத்தா வாங்கி போட்ட மரத்த ஏன் இப்படி சக்கையாட்டம் ஒடச்சி போட்டு இருக்க ?”
“அந்த கெழவி எதுக்கு வாங்கி வச்சி இருக்கு ?”
“போய் அத தான் கேக்கணும் .. போச்சி என்னை தோல் உறிக்காமயே உப்பு கண்டம் போட போகுது .. நான் வேற மரலோடு வந்துரிச்சின்னு இப்பதான் சொல்லிட்டு வந்தேன் .. “, எனத் தலையில் துண்டைப் போட்டு அமர்ந்தான் .
“விடு .. இன்னொரு லோடு அனுப்ப சொல்லு .. அப்பறம் அந்த ராஜன் சூப்பர்மார்க்கெட் ஆளோட எல்லா வெவரமும் நாளைக்கு எனக்கு வரணும் . அந்த ஆள தொட்டா எவன் வருவான், வரமாட்டான் , எங்க எல்லாம் அந்த ஆளு வம்பு வளத்து இருக்கான் எல்லாமே தெரிஞ்சிட்டுவந்து சொல்லு .. நான் பக்கத்து ஊரு பஞ்சாயத்துக்கு போறேன் .. கெழவிகிட்ட சொல்லிடு “, அங்கிருந்த குழாயில் முகம் கைக்கால் கழுவி , 5 நிமிடத்தில் தனது வாகனத்தில் கிளம்பிவிட்டான்.
அவன் செல்வதையே பார்த்தபடி நீலாயதாட்சி அங்கே வந்தார்.
“எங்க டா போறான் ?”, என வட்டியிடம் கேட்டார்.
“உன் பேரனையே கேக்க வேண்டியது தானே .. போற வரைக்கும் வேடிக்கை பாத்துட்டு , அவன் அங்க போனதும் நீ இந்த பக்கம் வர்ற “
“கொழுப்பு கூடிபோச்சி உனக்கு .. எங்கடா மரம் வந்துச்சின்னு சொன்ன .. எல்லாம் சில்லு துண்டா கடக்குது “
“வீடியோ படம் எடுக்கறவன எத்தன மணிக்கு வர சொல்லி இருக்கீங்க?”, எனக் கேட்டான்.
“இந்த கலாட்டா கல்யாணத்துல இது ரொம்ப அவசியம் தானா மச்சான்?” ,எனக் கேட்டபடி வட்டி அங்கே வந்தான்.
“எல்லாமே அவசியம் தான் மாப்ள.. இந்த பொன்னான தருணங்கள படம் புடிச்சி வச்சா தானே காலம் முழுக்க பாத்து சந்தோஷப்பட முடியும்”
“ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான் மச்சான். என் தங்கச்சி உன்ன கிட்ட சேக்குமா இல்லயானே தெரியாது.. ஆனாலும் நீ இவ்ளோ பேசற..” ,என வேல்முருகன் வர்மனை வாரினான்.
“அவ எங்க போயிட போறா மச்சான்.. இதுலாம் தான் நாளைக்கு நம்ம பேர பசங்க கிட்ட கதையா சொன்னா நல்லா இருக்கும்”, என வர்மன் பேசியபடி பின்னால் பார்த்தான்.
அங்கே மருதனுடன் பானு நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன பானு இந்த நேரத்துல இங்க வந்து இருக்க? “, எனக் கேட்டான்.
“முக்கியமான விஷயம் பேசணும் அண்ணே “, எனக் கூறிவிட்டு மற்ற இருவரையும் பார்த்தாள்.
“எல்லாம் நம்ம ஆளுங்க தான்.. எல்லாமே தெரியும் இவங்களுக்கு.. உன்கூட வந்தவன மட்டும் தான் நம்ப முடியாது”, எனச் சிரித்தபடி வர்மன் கூறவும், மருதன் அவன் காலில் விழுந்தான்.
“அண்ணே.. என்னை மன்னிச்சிடு.. நான் புரியாம அப்புடி பண்ணிட்டேன்”, என மனமார மன்னிப்புக் கேட்டான்.
“சரி விடு.. உங்க அண்ணே ஒத்தையா இல்ல-ன்னு நீ அன்னிக்கி செஞ்சது எனக்கு சொல்லுச்சி.. ஆத்தா அப்பன் இல்லாதவன்னு அவன வேலகாரனா மட்டும் பாக்காம உன் ரத்தமா நெனைச்சி என்ன கொல்ல வந்த பாத்தியா.. உன் அண்ணே பாசம் எனக்கு பிடிச்சி இருந்தது.. அதான் உன்ன அன்னிக்கி லேசா தட்டிட்டு அனுப்புனேன் “, என மருதனை தோளோடு அணைத்துக்கொண்டு விடுவித்தான்.
“உங்க பாசமழை முடிஞ்சா இத பாருங்க அண்ணே..” ,என பானு சில போட்டோக்களைக் காட்டினாள்.
a feel gud story