வழக்கமாக அவள் அமரும் இடத்தில் நான் முந்திக்கொண்டு அமர்ந்து விட்டேன்….
முறைத்தாள்…. – பின்
மெல்லிய கீற்றாக மென்னகை ஒளிர்ந்தது…
அவள் என்னை நகர கூறும் முன்….
பக்கவாட்டு இடத்தை காட்டிவிட்டு ‘டீ’யில் மூழ்க தொடங்கிவிட்டேன்….
ஐநூறு ஊருக்கு அரசாங்கம் செய்யும் இடமோ அது? – எனக்
கேட்டு வக்கணைத்தாள்…..
எனது பதில் என்னவாக இருக்கும்??
வஞ்சப்புகழ்ச்சி என்றான பின் கஞ்சத்தனம் எதற்கு?
பிரபஞ்சமே என்னுடையது தான் என்றுவிட்டேன்….
சரி தானே நான் கூறியது…?!
இப்பிரபஞ்சம் என்னுடையது அல்லவா ?!
– ஆலோன் மகரி