• About us
  • Contact us
Friday, April 24, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

வினோலியா

March 16, 2024
Reading Time: 1 min read
0
இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் .. 

 

1. பெயர் – வினோலியா பர்னாந்து

 

2. படிப்பு – பள்ளி படிப்பு மட்டுமே

 

3. தொழில் / வேலை – உதவி கணக்காளர்

 

4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 

ம்ம்ம்…  7ம் வகுப்பு படிக்கும் போது ஆனால் திருமதி ரமணிசந்திரன் அவர்களின் புத்தகம் ஒன்று பக்கத்து வீட்டு அக்காவிடம் இருந்து வாங்கி படித்தது, ஆனால் வாசித்து முடிக்க கிடைக்கவில்லை.. கதையின் பெயரும் தெரியாது…. பள்ளிக்காலம் முடிந்ததும் அக்கதையை தேடி தேடியே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன் இன்றுவரை தொடர்கிறது 😍

 

5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?

தனிமையில் இருக்கும்போது…

 

6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?

தற்போது கணினி வழியாக மட்டுமே..

 

7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?  

வாங்க ஆசைதான் ஆனா ஒன்னு கூட வாங்கினதில்லை 😔😔😔

 

8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்? 

Paper book ஏனென்றால் நாம் நினைக்கும் போதெல்லாம் புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொள்ளலாம்.

 

9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?

எவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தையை விடகூடாதுன்னும், நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போல் எந்த ஒரு செயலுக்கும் அவங்கவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கும்னும் தெரிந்து கொண்டேன்.

 

10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன? 

முன்ன எல்லாம் அடுத்தவங்க என்ன சொல்லுவாங்களோனு ரொம்ப யோசிப்பேன் ஆனால் இப்போ என்னோட சுயத்தை விடகூடாதுனு முடிவில் இருக்கேன்.

 

11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )

ஏற்கனவே வாசித்துள்ள ஆசிரியராக இருந்தால் யோசிக்காம வாசிப்பேன்… புது ஆசிரியர் எனில் தலைப்பு அல்லது முன்னுரை மூலம்..

 

12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….) 

இதுல எதுவாக இருந்தாலும் ஓகே ஆனால் விறுவிறுப்பா சுவாரசியம் குறையாம இருக்கணும்.

 

13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்? 

நம்ம மனதை மாற்றக்கூடியவராக…. ஏனெனில் அவங்க எழுதும் விதத்தில் நம்மை சிரிக்க வைக்கிறார், அழ வைக்கிறார், காதலில் மூழ்கவைக்கிறார், கோபப்படவைக்கிறார், இதெல்லாத்தையும் விட சிலநேரங்களில் எதிர்மறை பாத்திரங்களை நாம திட்டுறோமே இதெல்லாமே நம் மனதின் வெளிப்பாடுதானே..

 

14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?

ஆரம்பத்தில் புத்தகம் வாசிக்க கிடைக்காது ஆனால் தற்போது முகபுத்தகத்தில் நிறைய கதைகள் படிக்கும்போது அய்யோ இது முன்னமே படித்திருந்தா அந்த இடத்தில் இப்படி நான் ரியெக்ட் பண்ணாமல் இருந்து இருக்கலாமேனு நினைப்பதுண்டு.

அதனால் திருப்பங்கள் எதுவும் இல்லை.. 

 

15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன? 

அன்றைய எழுத்தாளர்கள் எனக்கு அவ்வளவா தெரியாது..  ஏனெனில் திருமதி ரமணிசந்திரன் அவர்களின் கதை மட்டுமே படிப்பேன்…

வித்தியாசம் எல்லாம் தேடமாட்டேன் பிடித்ததா படிப்பேன் அவ்வளவே..

 

16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா? 

அவ்வளாவாகஇல்லைனுதான்சொல்லனும்.

இன்னும் கொஞ்சம் எழுத்து பிழைகளுடன் எழுதுபவர்களும் உண்டு.  சிறந்த எழுத்தாளர் நிறைய அழகான கதைகளை தந்தவங்ககூட அவன் வரவேண்டிய இடத்தில் அவள் இருக்கும் அவள் வரவேண்டிய இடத்தில் அவன் வரும். (முகப்புத்தகத்தில் மட்டுமே நான் சொல்லுவது)

 

17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” 

இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்? 

பேச்சு மொழி ரொம்பவே நெருக்கமாக உணரலாம்….

வட்டாரமொழிவழக்கு மொழி புதிதாக சிலவார்த்தைகள் கற்றுக்கலாம்.

செந்தமிழ் வாசிக்கும்போது அழகாய் இருக்கும்…

 

18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்? 

வாசிக்க பிடிக்கும் ஆனால் இதுவரைக்கும் வாசித்ததில்லை 😔😔

 

19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன? 

தற்காலத்திற்கு தேவையான நிறைய விடயங்கள் இருகிறது (பெற்றோர் பிள்ளைகளை நம்பவேண்டும் / பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் / பதின்பருவத்தில் தவறான வழியில் போனால் என்ன நடக்கும் இது போல் நிறைய)

ஒரு சில விடயங்கள் பொருந்தவில்லையெனில்

அன்னப்பறவைப்போல் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வதே சிறந்தது..

 

20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா? 

சுவாரசியமாக இருப்பின் கட்டாயம் வாசிப்பேன்..

 

21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்? 

அப்படி நேரம் ஒதுக்கி வாசிப்பதில்லை…… ஓய்வுகிடைக்கும் நேரங்களில் வாசிப்பேன்……இல்லையெனில் கட்டாயம் இரவு நேரத்தில் இரண்டு மணித்தியாலங்கள் சரி வாசித்தால் தான் தூக்கமே வரும்..  சில நேரங்களில் நடுநிசி தாண்டியும் வாசிப்பது உண்டு..

 

22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?

முடிந்தவரை விமர்சனம் கொடுப்பேன்……

தவறுகளை கட்டாயம் சொல்லவேண்டுமெனில் தனிப்பட்ட முறையில் சொல்வேன்..

 

23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)

ஒரு கல்யாணத்தின் கதை 

தேடி வந்த தேவதை

மந்திரம் சொன்னேன் வந்துவிடு

கொய்யும் கண்கள்

பிரம்மன்

விழியோரம் சிறையானேன்

துஷ்யந்தா துஷ்யந்தா

கண்டேன் காதலை

கிட்கெட் கஸாட்டா..

இன்னும் நீளுமே இன்னும் சிலகதைகள் இருக்கு ஆனால் தலைப்பு நினைவும் இல்லையே 🤔🤔( நீங்க வேற 5 னுகேட்டா எப்படி சொல்லுவேன் என்னனு சொல்லுவேன் எதெதனு சொல்லுவேன்😏😏😏)

 

24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன? 

ஒவ்வொரு கதையில் ஒவ்வொன்று என்று நிறைய இருக்கே..

 

25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன? 

இவ்வளவு கதையாசிரியர்களா என்று வியக்கும் நிலையில் உள்ளது.

 

26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ? 

நீங்கள் கூறும் விடயம் சரியே ஆனால் நான் அப்படி அல்ல நான் இந்த வாசிப்பில் இணைந்ததே அறிமுகம் ஏதும் இல்லாமலே போட்டி கதைகளை வாசித்தே..  ஆகையால் முடிந்தவரை வாசிப்பேன் அதிலும் புதுவிடயமாக உள்ள பட்சத்தில் கட்டாயம் வாசிப்பேன்… ஆனால் என்ன சுவாரசியம் இருக்க வேண்டும்..

 

27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர்&இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன? 

அன்றைய ஐவர் எனக்கு தெரியாதே திருமதி ரமணிசந்திரன் அவர்கள் மட்டுமே….

தற்போதோ லிஸ்ட் பெருசுடா..

 

28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன? 

எந்த விதமான கதையாக இருந்தாலும் ஆசிரியர் அவர்களின் கண்ணோட்டத்தில் நம்மை கொண்டு போக வேண்டும். இது நேர்மறை எதிர்மறை எந்த முடிவாக இருந்தாலும் அவர்கள் சரியாக அங்கே நம்மை கூட்டிச் செல்லவேண்டும்..

 

29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?

அதெல்லாம் தெரியல்ல கதை நல்ல இருந்தா வாசிப்பேன்😁😁😁

 

30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை? 

Always favorite  திருமதி ரமணிசந்திரன்

 

31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது? 

அது அந்த ஆசிரியர் நம்மை கொண்டு சென்ற வழி சரியாக இருப்பின் எதிர்மறை முடிவை ஏற்றுக் கொள்ளலாம் (கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் கூட)

 

32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.

இதுவரை ரொம்ப கேட்டதில்லை… கேட்ட வரைக்கும் வாசிப்பையே விரும்புகிறேன்..

 

33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ? 

ரொம்ப பிடிக்கும். ஏன்னெனில் ஒரு கதையை வாசித்து முடிவு வரும்போது ஐயோ முடிகிறதேனு இருக்கும்.  ஆனால் அதன் தொடர்வரும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்😍😍

 

34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ? 

என்ன நிறைய பேர் அவங்க கதையை பற்றி ஏதாவது comments சொல்ல சொல்கிறார்கள் அப்படி வாசகர்கள்  comments போட்டால் அதுக்கான பதில் ஆசிரியர்களிடம் இருந்து வரது இல்லை. ஒரு குறிப்பிட்ட சிலவாசகர்களுக்கு மட்டுமே பதில்வரும். ஆகவே உங்கள் வட்டத்துக்கு அப்பாற்பட்ட வாசகராக இருந்தால் கூட அவர்களுக்கும் பதில் அளியுங்கள்……உங்களுக்கே தெரியாமல் எத்தனை வாசகர்களை நீங்கள் இழக்குறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை………

இது குற்றச்சாட்டு இல்லை எனது ஆசை.. 

( நானும் இப்படி யோசித்தவள்தான் ஆனால் ஆசிரியர் ஆனந்தஜோதிகா தான் சைலண்ட்ரீடரா இருந்த என்னை முதலில் comment போட வைத்தார்கள் பின் விமர்சனம் எழுத ஊக்குவித்தார்கள். அவங்க ஊக்குவிப்பால நான் எழுதின முதல் விமர்சனம் எஸ்எம்எஸ்போட்டிகதைகளுக்கு அதில் மாஞ்சோலைமயிலே, தித்திக்கும் தேனமுதே, காற்றின் நுண்ணுறவு ஆகிய கதைகளின் ஆசிரியர் விமர்சகருக்கான பரிசளிப்பர்களில் ஒருவராக நானும் இருக்க காரணம் ஜோகாதான்….)

 

 

மிகவும் எதார்த்தமான உரையாடல் வினோ சிஸ்.. உங்க வார்த்தைகள் silent readers வாய்ஸ்-அ தான் இருக்கு. பாகுபாடு பாத்து எத்தன ரைட்டர்ஸ் கமெண்ட்ஸ்கு பதில் குடுக்கராங்கன்னு தெரியல, ஆனா நெறைய கமெண்ட்ஸ் காக காத்திருக்க எழுத்தாளர்கள் நெறைய பேர் இருக்காங்க. தவிர முடிஞ்சவரை பதில் சொல்றவங்களும் இருக்காங்க, நேரமின்மை காரணமாக பதில் சொல்லமுடியலன்னு வருத்தப் படற நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க..

 

உங்க கதையின் மீதான ஆர்வம் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. நீங்க தேடற அந்த கதையை நீங்க சீக்கிரமே கண்டுபிடிச்சி முழுசா படிச்சி மகிழ்ச்சி அடைவீங்க..

 

எஸ்எம்எஸ் ல என் கதைக்கும் நீங்க விமர்சனம் அழகா குடுத்து இருந்தீங்க. என் கதையை ஓரளவு சரியா கணிச்சி, புரிஞ்சிக்கிட்டதும் நீங்க தான் அப்போ..

 

உங்களோட அழகான இந்த நிமிடங்களுக்கு நன்றிகள் சிஸ்.. எப்பவும் வாசிப்போட சந்தோஷமா இருங்க..

 

மீண்டும் ஒரு அருமையான வாசகருடன் உங்களை சந்திக்கிறேன்..

 

வாசிப்பை சுவாசிப்போம்..

Click to rate this post!
[Total: 3 Average: 3.7]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 2,846

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    553 shares
    Share 221 Tweet 138
  • 1 – அகரநதி

    501 shares
    Share 200 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    472 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    430 shares
    Share 172 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply