ஏதோவொன்று முடியும் போது மற்றொன்றின் தொடக்கம் இயல்பே….
இயல்பின் குணங்கள் அறிய விழைகிறேன்….
இத்தனை நாள் நம்பிய நிஜங்கள் பொய்யென உணரும் தருணம்….
அவ்வியல்பு எத்தகையது?
ஏதோவொன்றை அறிய நேரும் தேடலில் முடிந்தவைகள் தொடரப்படுகிறது….
எதிர்காலத்தின் புதைகுழிகள் இறந்தகாலத்தில் அறியப்படலாம்…
நிகழ்வில் நடப்பவை அனைத்தும் முற்றிலும் வேறொன்றே….
நீ நினைப்பதும் அல்ல…
நான் நினைப்பதும் அல்ல….
ஓர் கனவின் முடிச்சுகள் அவிழும் தருணம்….
இறந்தகாலத்தின் துரோகமாக….
எதிர்காலத்தின் முக்கிய திருப்பமாகவும் இருக்கலாம்……
விழித்திடு மனமே….
இயல்பை உணர்ந்திடு….
– ஆலோன் மகரி