Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
யார் மனிதன் ?
ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் – தன்னை
குடும்பத்தில் புதைத்துக் கொண்டான்….
இயற்கையுடன் சந்தோஷித்து….
அழுக்கேறிய வேட்டியும்….
தோளில் கிடந்த துண்டுமாக….
வாழ்ந்திருந்தவரையும்….
உழைத்து களைத்து களத்துமேட்டில் – தன்
கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….
பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…
நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..
தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….
தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…
அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….
தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….
அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….
தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..
அத்தைமகளின் வீம்பு…
மாமன்மகளின் வக்கனைப்பு….
சுற்றத்தாரின் எதிர் பார்ப்பில்லா அன்பு….
அனைத்தும்…
அனைத்தும்…..
அவனருகில் இருந்தவரையில்….
மனிதனாக வாழ்ந்தான்…
ஊர் மறந்து….
சுற்றம் துறந்து….
தாய் தந்தையை கைவிட்டு….
உடன்பிறந்தோரை விரோதமாக்கி…
தான் என்ற சுயநலத்தில்…..
தன்னலம் மட்டுமில்லாது சமூக நலமும் நசியவிட்டான்….
இன்று நடக்கும் அவலங்களுக்கு மத்தியில்….
பிஞ்சுகளின் கதறல்களில்….
வயோதிகத்தின் புலம்பல்களில்…
உயிர்வதையன்றி உணர்வுகளும் வதைப்பவனாக….
மனிதம் அற்ற மனிதனாய் ….
வா(வீ)ழ்கிறான் மனிதன்…..
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….