Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
என்னுடன் நான் உரையாடும் வேளையில் ..
கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. – ஏனோ
திரை ஒன்று தடுத்து நிற்கிறது ..
மனசாட்சி என்ற ஒன்று .. – நான்
அதுவாகவோ ? அது நானாகவோ ?!
எதுபோல் ஆனாலும் உண்மையை உரைத்திட வேண்டும் ..
ஆரம்பத்தில் ஆடிய கபடி இன்றில்லை ..
எனை நான் பார்க்க நினைக்கும் நொடி ..
எத்திரையும் என் மனத்திரையை மறைப்பதில்லை ..
வேறொரு திரை என்னை மறைப்பதை காண்கிறேன் ..
என்ன அது ???
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….