நீயாக….

ஏதொன்றின் சாயலாகவும் வேண்டாம்.... - நீநிஜத்தில் நீயாகவே இரு போதும்....உன் அணுக்களில் நிறைந்திருக்கும்உன்னை.....வேறெவ்வித ஒப்பீடும் இல்லாது....உன்னை....உனக்காகவே காதல் செய்ய வேண்டும்.... உன்னில் இருக்கும் வெற்றிடத்தை....என் நிஜத்தை நிரப்பி வாழ்ந்து கொள்ளலாம்....வேறெந்த பொய்யும் வேண்டாம்....புனைவும் வேண்டாம்.... நீ.... நீயாகவே இரு....நீயாக மட்டுமே இரு.....- ஆலோன் மகரி

7 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

7 - ருத்ராதித்யன் ஆருத்ரா மலைக்கு சென்ற முதல் நாள்…….மகதன் இரண்டு நாட்களாக ஏதும் உண்ணாமல் கண்களில் வெறியுடன் வெளியே செல்லும் மார்க்கத்தைப் பார்த்தபடி இருந்தது.அருவம் பைரவக்காட்டில் இருந்து மகதனைக் காண அவ்விடம் வந்தது,"மகதா….. நீ ஏன் இங்குள்ளாய்?", அருவம்."ர்ர்ர்…….", மகதன் உறுமி தன் கோபத்தை வெளிப்படுத்தியது."இந்த மனித பதர்கள் உன்னையும் அடைத்து வைத்து விட்டனரா? இது…. இது…. நிச்சயமாக அவர்களின் செயலாகத் தான் இருக்கும்….. உன்னை இன்னும் கொல்லாமல் வைத்திருப்பதன் அர்த்தம் யாதென அறிய விழைகிறேன்…….!!!? இறைவா…….", என கேள்விக் கேட்டபின் இறைவனைத் தியானித்து மகதன் வெளியேறும் மார்க்கம் காட்டிக்...

6 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

6 - ருத்ராதித்யன் பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்."என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?", செந்தில். "அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..", பரிதி யோசனையுடன் கூறினாள்.சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்."குட் ஈவினிங் ஷின்டே", என இருவரும்  கூறி அமர்ந்தனர்."ஈவினிங்….. என்ன நடக்குது உங்க டிபார்ட்மெண்ட்ல? யார கேட்டு இந்த கேஸ்-அ...

5 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

5 - ருத்ராதித்யன் வேலையாள் அழைத்ததும் கயல் அவசரமாக வெளியே சென்றுப் பார்க்க, அவர்கள் புதிதாக வாங்கியிருந்த பசு கன்றை ஈன்று இருந்தது. குட்டி என்று கூறினால் நம்புவது மிகவும் கடினம் அப்படி ஒரு திடத்துடன் கூடிய உயரம் கொண்டு பிறந்திருந்தது. அந்த சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்து பிறந்திருந்த கன்று பார்க்கவே அத்தனை கம்பீரமாகக் காட்சியளித்தது. "என்ன சாமியய்யா….. எதுக்கு இத்தனை பதட்டமா கூப்பிட்ட? என்னாச்சி? ", என தமிழன்பன் கேட்டார். "ஐயா நம்ம தேனு கன்னு போட்டுரிச்சிங்க…. ஆனா பாக்கவே வித்தியாசமா இருக்குங்க", எனக் கூறியபடி தொழுவம் நோக்கி அழைத்துச் சென்றார். "நல்ல விஷயம் சொன்னீங்க…....

4 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

4 - ருத்ராதித்யன் "உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?", என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்."நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் எல்லாத்தையும் இடம் மாத்திட்டு தானே வரமுடியும்…. காலைல சொல்லிட்டு ஒரு மணிநேரத்துல நான் இங்க இருக்கணும்னா மேஜிக்கால தான் நடக்கும்….. ", சக்தி உரிமையாக சலித்தபடி டைனிங் டேபிளிலில் வந்தமர்ந்தான்."டேய்…. நில்றா…. ", ரணதேவ்."என்ன தாத்தா? எனக்கு கால் எல்லாம் வலிக்குது…. காலைல இருந்து ஒரு நிமிஷம் கூட உட்காராம வேலை பாத்துட்டு இருக்கேன் தெரியுமா? ", சக்தி வாய் ஓயாமல்...

3 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

3 - ருத்ராதித்யன் ஊர் எல்லையில் இருந்து ஒருவித கனமான நினைவுடனேயே பயணப்பட்டாள் ஆருத்ரா.பச்சைக் கம்பளமாக விரிந்து இருபக்கமும் பசுமையும், இனிமையும், மண்வாசமும் பரப்பியபடி வந்த சில்லென்ற காற்றும், ரணதேவ்வை வேறு நினைவுகளில் மூழ்கடிக்க, ஆருத்ராவோ எதுவும் நினைவுக் கூற விரும்பாத பாவனையில் லிங்கம் வைத்திருந்த பெட்டியை இறுக்கிப்பிடித்தபடி எல்லையெற்ற பார்வையை வீசிக்கொண்டிருந்தாள்.ரணதேவ் கண்களில் பல நினைவுகள் நிழலாடியது. மனைவியுடன் இனிமையாய் கழிந்த நாட்கள் முதல் மகனுடன் நடந்த உரையாடல்கள் வரை…..தன் மகன் குடும்பத்துடன் இன்பமாகச் சுற்றிய தோப்பு, வயல் வரப்பு, என நினைவுகளோடு பின்னோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்.இந்நேரம் தன் மனைவி, மகன்,...

2 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

2 - ருத்ராதித்யன் அகன்று பரந்த வெட்டவெளியில் கோடானு கோடி விஷயங்கள் நிறைந்துள்ளது. அதே போல பூமியின் சில இடங்களில் சிற்சில தடயங்களும் விடப்பட்டு இருக்கிறது. அதில் கோடியில் ஒரு பங்காக நம்மில் சிலர் அத்தடயங்களை அறிந்தவர்கள். அதிலும் சிலரே அதை புரிந்தவர்கள். இயற்கையை அழித்துவரும் மனிதமிருகங்களின் பிடியில் சிக்காமல்  இன்றும் ஆங்காங்கே பல அற்புதங்களும், அதிசயங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த பலநூறில் ஒரு பங்கு செயற்கை  கலக்காத பவித்திரமான இடமாக அவ்விடம் திகழ்ந்தது. பைரவக்காடு…… தென்மேற்கு மலைத்தொடரில் ஒரு பகுதி பைரவக்காடு எனப்படும். பல அறியமிருகங்களும், அழிந்து போனதாக இவ்வுலகம் நினைத்துக்கொண்டிருக்கும் பல உயிரினங்களும்...

நாளைய தலைமுறை….

விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....‌முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது காதில் விழுந்த முதல்முறையை நினைக்கையில்....செயலன்றி ஏதும் மாறாது....ஏதுவான சிந்தனையன்றி நாமும் மாறுவதில்லை....நிச்சயமாக நாளை அடுத்த தலைமுறைக்கும் இதே வார்த்தைகள் சென்றடையத்தான் போகிறது....அதற்குமுன்.....இன்று நம் விடியலைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்போம்.....பிடித்தமோ பிடித்தமல்லதோ....நல்லதோ நன்றல்லதோ....ஒன்றுமோ ஒன்றாதோ.....நடக்குமோ நடக்காதோ.....யாவையும் மீண்டுமொருமறை சிந்தித்து செயல்படலாம்.....கடந்துவிடபோகும் வார்த்தையில் வலு சேர்த்துவிடலாம் நாளைய தலைமுறைக்கு.... - ஆலோன் மகரி

ஒற்றையாய்….‌

சற்று நேரம் முன்பு தான்....உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்....கடந்து போன காலத்தை நினைத்து....அப்படி நடந்திருந்தால் ....இன்று நீயும் நானும்....ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்.....ஓர் மழை மாலை வேளையில்....எனது தேநீரில் உன் இதழும் சுவைத்திருக்கலாம்.....எனக்கு பிடித்த புத்தகத்தின் வரிகளை....உன்னுடன் கலந்துரையாடி ஊடல் கொண்டிருக்கலாம்....நீயோ நானோ....கோபமாய் அருகில் அமர்ந்து முகம் திருப்பும் போதெல்லாம்.....'இச்'சென்ற சத்தமில்லா சமாதானங்களை செய்திருக்கலாம்.....இருக்கலாம்....இருக்கலாம்...இப்படி பலதை நினைத்து பொய்யாய் மனதை சமாதானம் செய்த வேளையில்.....நீயும் உன் துணையும் ஒன்றாய் வெளிக்கிளம்புவதை பார்த்தபின்.... பொட்டில் அடித்து இதயத்தில் பரவியது ஓர் வலி.....ஒரு வேளை அன்று நான் பேசியிருந்தால்....இன்று நான்...

ஏகாந்தமல்ல…

போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்‌......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில் ஒன்றோ அல்லது அனைத்துமோ.....அனைத்து பாத்திரத்திலும் அன்பு பெற்று நிறைந்தால் அன்றி....ஏகாந்தமென்ன ‌.....வாழ்தலே சாபம் தான்....இவை ஏதுமின்றியோ....காலத்தின் தேவையானதின்றியோ வாழ்ந்தால்....அது வாழ்தலல்ல....அத்தனிமை ஏகாந்தமுமல்ல.... -ஆலோன் மகரி

Page 18 of 58 1 17 18 19 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!