மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மகரியின் கிறுக்கல்கள் பாகம் -1" புத்தகம் வெளிவந்துள்ளது.  சில நேரங்களில் தோன்றிய சில கிறுக்கல்கள் எல்லாம் இப்போது புத்தக வடிவு பெற்று உங்கள் கைகளில் தவழ காத்திருக்கின்றன.  நோஷன் பிரஸ் தளத்தில் இப்புத்தகத்தை வாங்கி கொள்ளலாம். திரி கீழே :  https://notionpress.com/read/magariyin-kirukkalgal

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள திரியில் உள்செல்லவும் .. https://notionpress.com/read/meelnuzhai-nenje

1 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்...."அர்ஜுன நந்தன்" எனது முதலாவது நாவல். அதன் தொடர்ச்சியாக இந்த கதை பயணம் செய்யும். அதனால் அந்த கதையை படிச்சிட்டு இதை படிக்க வாங்க... வாரம் ஒரு அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்... இத்தனை கால காத்திருப்புக்கு நன்றி, இனி கதையை தொடங்கலாம் வாங்க......1 - ருத்ராதித்யன்"காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே….. காற்றில்லா இடத்திலும் உந்தன் அருள் பரவி நிறைந்திருக்கும்….. எத்தனை பிறவிகள் எடுத்தும்…. எத்தனை குணங்கள் கொண்டும்…. மாறாத ஆன்ம ஒளியாய் உந்தன் மேல் நான் வைத்த காதல் மட்டும் நீங்காமல் தொடர்ந்து வருகிறதடா….. இன்னும்...

உழைப்பு

உழைப்பின் மீதிருக்கும் காதல் - இப்போதுஉழைப்பை காதலிப்பவர்கள் மீதும் வருகிறது...இறுக்கியணைத்து தோளில் தூக்கி வைக்க வேண்டும்....ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாய் மறைந்திருப்பவர்களை எல்லாம்....தோள் கொடுத்து கொண்டாடவேண்டும்.... உழைப்பின் மீதான காதலை அருகிருந்து....வியர்வையின் வாசம் நுகர்ந்து.... கடினமென்றதெல்லாம் சுக்குநூறாக்கும் லாவகத்தைக் கண்டு....உழைக்க உழைக்க உணரும் நுணுக்கங்களைக் கண்டு.... எப்படியெல்லாம் காதல் வருகிறது பாருங்கள்.... உழைப்பை காதல் செய்கிறேன்.... உழைக்க நினைக்கும் மனதையும்....உழைக்க துவங்கும் உடலையும் விட....எதுவும் கவர்ச்சி இல்லை.... - ஆலோன் மகரி

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது போல‌..‌.கூட்டமாக சிரித்து பேசுபவர்கள் அருகில் இருந்தும்.....அச்சிரிப்பு என்னை எட்டாத காரணம் என்ன?ஏன்....?அச்சூழல் மனதை எவ்விதத்திலும் தாக்காது போனது...உணர்ச்சிகளற்ற மனதாக...உணரமுடியாத...

நீர் வழிகிறது…

கருவுறாத முட்டை .....உதரத்தில் நில்லாது....உதிரமாய் வழிகிறது...மற்றொரு மாதமும் கழிந்தது....அவள்(ன்) ஆசையும் உதிர்ந்தது.....வலி பொறுத்தும்.....மனம் பொறுக்காததால்.....மற்றிரண்டு துவாரத்தில்....(கண்)நீர் வழிகிறது.....-ஆலோன் மகரி

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் இருந்து....அக்குரல் மொழியும் வழியே....இவளை இவளே தெளிவுப்படுத்தி....திடம் கொடுத்தபடி.....அஞ்சிய மனதை அதட்டி.....உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து....இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்....இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்....எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்....மொத்தமும் வீண் தான்....அவளின்  இப்பிறவி..... - ஆலோன் மகரி

30 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

30 - வலுசாறு இடையினில்  காலை முதல் எல்லோரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தனர். நங்கை மெல்ல எழுந்து கீழே வந்துப் பார்த்தாள். நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் வீட்டின் முன் பந்தல் போடும் வேலையை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டு  இருந்தனர்.“டேய் பழனி.. இந்த பக்கம் முட்டு சாயுது பாரு.. ஒழுங்கா பிடிச்சி கட்டு டா.. டேய் டேய்.. அங்க பாரு அந்த பக்கம் ஸ்கிரீன் துணி தண்ணீல விழுகுது.. ஒழுங்கா பிடிச்சி போடுங்க டா.. என்னடா வேல பாக்கறீங்க?”, என இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று வேலை செய்பவர்களைத்...

29 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

29 - வலுசாறு இடையினில் “என்ன மச்சான் இது புதுசா இருக்கு?”, என வட்டி கேட்டான்.“இந்த ஊர்ல இது ஒரு பழக்கம் பங்காளி.. மொத பொண்ணு பொறந்தா அத தத்து குடுத்தா தான் ஆம்பள புள்ள பொறக்கும்ன்னு பொறந்த உடனே குடுப்பாங்க.. ஆனா வளக்க கூட காசு வாங்கறது இப்ப தான் நானும் கேள்வி படறேன் பங்காளி”, என தனக்குத் தெரிந்ததை வேல்முருகன் கூறினான்.“என்ன மூட நம்பிக்கை இது?”, என வர்மன் கேட்டான்.“சொன்னா நம்மல தான் திட்டுவானுங்க மச்சான்.. நம்ம இனிமே நம்ம வீட்டு பொம்பளைங்கல நடத்துறதுலையும், பொண்ண வளக்கறதுலையும் தான்...

28 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

28 - வலுசாறு இடையினில் “நீங்க?” , என வேல்முருகன் யோசனையுடன் பார்த்தான்.“பானு பேச சொன்னப்ப உங்ககிட்ட பேசினது நான் தான். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஆள நீங்க இங்க லாக் பண்ணது ரொம்ப சந்தோஷம்.. “, எனக் கூறி அனைவரிடமும் கைக்குலுக்கிக் கொண்டான் தன்ய கிருஷ்ணன்.“வாணி அத்தையோட புருஷனா நீங்க?” , என வர்மன் கேட்டான்.“ஹாஹாஹா.. என்னை பாத்தா அப்படியா வயசான மாதிரி தெரியுது? நான் அவரோட டீம்ல இருக்கேன். நார்காட்டிக்ஸ் டிபார்ட்மெண்ட்..”, எனக் கூறித் தனது ஐடி கார்ட் காட்டினான்.“வணக்கம் ஆபீசர்...

Page 19 of 58 1 18 19 20 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!