24 – மீள்நுழை நெஞ்சே

24 - மீள்நுழை நெஞ்சே ஓயாமல் அடிக்கும் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும் கனிமொழி சரமாரியாக அவளை வசைப்பாடத் தொடங்கினாள். "எங்க டி போய் தொலைஞ்சு? எத்தனை மணி நேரமா உனக்கு போன் பண்றேன்… என்ன கிழிச்சிட்டு இருந்த இவ்ளோ நேரம்? பேயே …பிசாசே…. எருமையே…. ", இப்படி அவள் அங்கே கத்திக்கொண்டிருக்க இவள் போனை கையில் ஆட்டியபடி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். பத்து நிமிடம் முடிந்த பின் காதில் போனை வைக்கவும் கனிமொழி சற்று கோபம் மட்டுப்பட்டு பொறுமையாக பேச ஆரம்பித்தாள். "எங்க போன?""நான் தான் வில்ஸ்...

7 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

7 - வலுசாறு இடையினில்  ஒரு வாரம் கடந்த நிலையில் ஏகாம்பரம் ஒரு வழியாக பணத்தைப் பிறட்டி தணிகாச்சலம் கைகளில் கொடுத்துவிட்டு இல்லம் வந்தார்.“சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா ?”, மனைவி உள்ளிருந்து கேட்டார்.“எடுத்துவை .. “, எனக் கூறிவிட்டு முகம் கழுவச் சென்றார்.தட்டில் சாதம் வைத்துக்கொண்டு, “ஏங்க இருந்த பணத்தை கொண்டு போய் கொடுத்துட்டீங்க .. திடீர்னு நம்ம பொண்ணுக்கு வரன் கூடி வந்துட்டா என்னங்க பண்றது ?”, எனக் கேட்டார் காமாட்சி.“அந்த சனியன் நம்மல விட்டு போறதுக்கு எப்டி வேணா பணத்த பொறட்டிக்கலாம் .. அவர் பொண்ணுக்கு கல்யாணம்...

நடனம்

நடனம்....எத்தனை அற்புதமான கலை....மனதின் லயத்திற்கு ஜதி மாறாமல் ஆடிவிடும்....கோபமோ....அழுகையோ....வேண்டலோ....ஒதுக்கமோ...இணக்கமோ....ஆனந்தமோ....எல்லாம் அதன் வெளிப்பாட்டில் கோபுர உயரம் தான்.....மெல்ல மெல்ல அஸ்திவாரத்தை பலமாக்கி...உயர்ந்தோங்கி நின்று தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துவிடும்....அப்படித்தான் .... மாமாங்கமாக மறந்து போயிருந்த உற்சாகம்...சட்டென மேலெழும்பி வந்துவிட்டது.... - என்அஸ்திவாரத்தை கருவியாக இயக்கி ஆடவைத்தது..‌சிறிது நேரம் தான்.... இன்னும் கூட கொஞ்சம் நீண்டிருக்கலாம்...மறந்துவிட்ட உற்சாகத்தை....தொலைத்துவிட்ட சுயத்தை.....கட்டப்பட்டிருந்த மனதை.... எதுவோ.... என்னவோ.... மீண்டும் கிடைத்த உணர்வு.....இன்றோர் நாள் மட்டுமா? இனி எப்போதும் நீளுமா ??? அஃதறியேன்.....சுழன்றாடிய நொடிகளில் .....இழந்த அனைத்தும் மீட்டுவிட்ட சந்தோஷத்தை நுகர்ந்தது......உண்மை தான்....துளி போதும் தானே?வெள்ளமாய் ஊற்றெடுக்க......!!!- ஆலோன்...

அன்பு கொண்டாயா ?

மாட்டிக்கொண்ட மனமும்.... மீளாதிருக்கும் நினைவும்.... வெட்டிப் பேச்சு பொழுதும்....என்பதாய் சென்ற நாட்களில் தான்....நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை...இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது.... தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு... ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்....ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை....களங்கிய சகதி குளத்தில்.... மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல... - உனது நினைவும் தெளிவாகிறது.... இப்போதும் சொல்கிறேன்.... - நீ எனக்காய் ஒன்றுமே செய்யவில்லை ... உன்மீதான அன்பு.... உனக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டேன்... ஒன்று மட்டும் சொல்.... என் மேல் நிஜமாய்...

மிச்சம்

அமர்ந்தே இருக்கிறேன்.... ஒற்றைக்கால் திடத்தில்.... மூன்று கால்கள் சமாளித்திருக்கும் இருக்கையின் மேல்... ஓடத் தொடங்கும் முன் நின்ற ஓட்டம்.... கீற்றாக நினைத்த வெளிச்சம்.... கைப்பிடித்து அழைத்துச் சென்று சூன்யத்தில் தள்ளிவிட்டது.... சூன்யமென்றால் வெறிக்க வேண்டுமா? மாட்டேன்.... அனைவரும் செய்வதைச் செய்யமாட்டேன்.... சூன்யத்தைச் சுற்றி வர ஆசைப்பட்டேன்... சூன்யத்தில் தானே பிரபஞ்சம் உருவானது.... வெற்றிடத்தில் தானே அனைத்தும் மிதக்கிறது...?! வெற்றிடம்..... வெறுமையான இடம் அல்லவா? இதை வெற்றியின் இடம் என்றும் கூட சொல்லலாம் தானே? எந்த கோணத்தில் இவ்வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பர்? இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? பார்வையில் மாறுபடும் கோணங்கள்.... கோணத்தில்...

செளந்தர்யா.நெ

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - செளந்தர்யா.நெ 2. படிப்பு - எம்.ஏ.ஆங்கிலம் 3. தொழில்/வேலை - ஆசிரியை 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  பள்ளி காலத்தில் இருந்து..  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்? எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாசிப்பை தான் நாடுவேன். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா? பள்ளி காலத்தில் நூலகத்தில் எடுத்து வாசித்த பழக்கம் உண்டு. இப்போது நேரமின்மை காரணத்தால் பெரும்பாலும் கணினி வழியே.. 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள்...

போதும் …

காதல் வேண்டாம் .. கல்யாணம் வேண்டாம் .. சடங்குகள் வேண்டாம் ..  - அதில் வரும் சந்தோஷம் வேண்டாம் .. நான் வேண்டும் .. என்னை நான் மீட்டெடுக்க வேண்டும் .. யாரும் இல்லா வாழ்வில் .. - எனக்கு நான் போதும் .. - எனையன்றிஎன்னை அதிகமாக நேசிப்பவர் யார் ??? - ஆலோன் மகரி 

நேசம்

நீயும் விடவில்லை ....நானும் பற்றிக் கொள்ளவில்லை .... நமக்குள் புகைந்தபடி இருக்கிறது .... நமது நேசம் ...... !!!  - ஆலோன் மகரி 

திரும்பி விடாதே

நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது போல ... என் நினைவுகளையும் தொலைத்து போ ... காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை ... மறந்தும் சுவாசித்திடாதே ... பாவம் .. நான் தான் .. அது என்னைக் காட்டிவிட்டால் ... - மீண்டும் நான் நொறுங்கிப் போகக் கூடும் ... !!!  - ஆலோன் மகரி 

23 – மீள்நுழை நெஞ்சே

23 - மீள்நுழை நெஞ்சே பஸ் விட்டு இறங்கும் சமயம் வில்சன் அவளுக்கு அழைத்தான். "ஹேய் ராக்ஸ்… எங்க இருக்க? ஆபீஸ் விட்டு கிளம்பிட்டியா?", எனக் குரலில் சிறிது வருத்தத்துடன் கேட்டான். "நம்ம அபார்ட்மெண்ட் கிட்டயே வந்துட்டேன் வில்ஸ்…. நீ என்ன பண்ற? எல்லாரும் வந்துட்டாங்களா?""இல்ல ராக்ஸ்…. ஃப்ளைட் டிலே… லெதர் சரியில்லன்னு இரண்டு நாள் தள்ளிட்டாங்களாம்… அண்ணன் வரமுடியலன்னு சொல்லிட்டான்… அம்மா பாக்க போறானாம்….", என‌க் கூறியதில் வருத்தம் அதிகளவில் இருந்தது. "தங்கச்சி இரண்டு நாள்ல வந்துடுவா தானே?""வந்துடுவான்னு தான் நெனைக்கிறேன்", என்றவன் குரலில் சுரத்தே இல்லை. "பனி தான் இப்படி கொட்டுதே ப்ளைட் பறக்கிறது கஷ்டம்...

Page 26 of 58 1 25 26 27 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!