என்ன அது ?

என்னுடன் நான் உரையாடும் வேளையில் .. கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. - ஏனோ திரை ஒன்று தடுத்து நிற்கிறது .. மனசாட்சி என்ற ஒன்று .. - நான் அதுவாகவோ ? அது நானாகவோ ?!எதுபோல் ஆனாலும் உண்மையை உரைத்திட வேண்டும் .. ஆரம்பத்தில் ஆடிய கபடி இன்றில்லை .. எனை நான் பார்க்க நினைக்கும் நொடி .. எத்திரையும் என் மனத்திரையை மறைப்பதில்லை .. வேறொரு திரை என்னை மறைப்பதை காண்கிறேன் .. என்ன அது ???  - ஆலோன் மகரி 

நுகரலாமோ ???

உன் கண்களில் பூக்கள் மட்டும் தெரிய .. - அதில் பயணிக்கும் எனக்கு அடியில் இருக்கும் முட்களே தெரிகிறது .. முட்களை நினைத்து மலரின் மணத்தை நுகராமல் செல்ல ..உன் முகம் வாடியாது .. உன் மனம் முகர்ந்த நான் .. - மலரின் நறுமணம் நுகரலாமோ ???  - ஆலோன் மகரி 

நொடி

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி 

என் வழி..

என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் .. முகமறியா நட்பும் .. முகமறிந்த மோதலும் .. காதலில் தோல்வியும் .. மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் .. விடையறியா கேள்விகள் .. கேள்விகள் இல்லா விடைகள் .. எனக்கும் உனக்கும் இடையே .. தடுமாறும் மனிதர்கள் !! சொல்வது தத்துவமல்ல .. சொல்லாதிருந்தால் தவறும் அல்ல .. ஆயினும், சிறு சிறு மௌனங்கள் .. சில பல கேள்விகள் .. ஞான மார்க்கத்தை தேடவில்லை .. அங்குள்ள அன்பு மார்க்கத்தை உணர்கிறேன் .. உணர்ந்த அன்பானது .. பரமாத்மாவின் தாயன்பு .. அதை...

சுவாசம்

மனதில் பல சஞ்சலங்கள் .. உனக்காக பல முயற்சிகள் .. நிறை தழும்பா மனிதனாய் நான் .. அலையுறும் ஜன்மமானேன் .. இன்றும் .. உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக .. இன்னும் அலையுறுவேன் .. பெண்ணே .. காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு .. எனது கடைசி சுவாசம் உனதாய்  இருக்க ... !  - ஆலோன் மகரி 

இருதலைக்கொள்ளி

சொல்ல ஏதும் இல்லை .. ஏதோ மனதை கவர்கிறது .. விரக்தியும், ஆர்வமும் .. மாறி மாறி ஆள்கிறது என்னை ..!! புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது .. மறந்து விட ஆர்வம் மறுக்கிறது .. இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் .. எதை நாடி போவேனோ இறுதியில் ..??? - ஆலோன் மகரி 

அழை

கனவில் வாழ்கிறேன் .. நித்தம் உன்னை காண்கிறேன் .. பதில் கூறா கேள்விகள் .. ஓடும் யுகங்கள் .. காண்பவை யாவிலும் விரக்தி .. விரயமாகும் காலங்கள் .. ஒளிக்காட்டி ஓடி மறையாது .. வழிக்காட்டி அழைத்து செல் .. !!!  - ஆலோன் மகரி 

6 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

6 - வலுசாறு இடையினில் ஏகாம்பரத்தினை பற்றிய முழு விவரமும் வர்மனின் காதுக்குள் ஊதி விட்டான் வட்டி.“சரியான எடக்கு பிடிச்ச ஆளா தான் இருக்கான்ல .. இவனுக்கு எப்டி அந்த பொண்ணு பொறந்துச்சி ?”, வர்மன் நடந்தபடியே பேசினான்.“போய் படைச்சவங்கள கேளுங்க மச்சான்.. சின்னபுள்ளைல அந்த பொண்ணுகிட்ட வம்பு இழுத்தீங்க சரி.. இப்பவுமா ? ஏன் இப்டி கோவத்துல சறுக்க பாக்கறீங்க ?”, வட்டி நூல் விட்டான்.“அது என்னமோ அந்த புள்ள கிட்ட வம்பிலுத்தா நல்லா இருக்கும். முழிய உருட்டாம அது பாக்கறதும், அதிராம பேசறதும் கொஞ்சம் வித்யாசமா இருக்கும்.. அதான்...

Page 27 of 58 1 26 27 28 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!