இறுதியில் உறுதியாக

காதல் பொய்த்து போனது …..வாழ்க்கை பொய்த்து போனது ….நம்பிக்கை பொய்த்து போனது …உறவுகள் பொய்த்து போனது ….உறுதியாக நினைத்த சில நட்பும் …இறுதியாக பொய்த்து போனது …உள்ளிருந்து வெளிப்பட்ட சிரிப்பு …அதன் காரணம் அறியேன் …நிற்காமல் வரும் சிரிப்பை நிறுத்தவும் விழையேன் ….மூடனாக இருந்திருந்தால் சிறுஅமைதி கிட்டியிருக்கும் …கண்மூடித்தனமான மூடனாய் கடந்துவிட்டேன் இத்தனை காலமும் … - நான்தனித்திருப்பது புதிதல்ல ….குழுவாய் இருந்தபோதும் தனித்தே இருந்திருக்கிறேன் ….மகாதேவா …..நீயின்றி எவரும் எனக்கு உறவுமில்லை … நட்புமில்லை …..இன்னும் என்ன ஏமாற்றுப்பாடம் காத்திருக்கிறதோ ?நின் பாதம் சரணடைந்தபின்னே ….இத்தனை வேதனைகளும்  எனை...

வலி

தடம் மாறிப் போக நினைத்தது இல்லை ......வாழ்வின் அரவனைப்பில் .... - திடம்குறையாது ஓடுகிறேன் ....வலியனைத்தும் வலிமையாக ......எதிர்கொள்ள காத்திருக்கிறேன் .....எதிர்வரும் வலிகளுக்காக ..... - ஆலோன் மகரி 

அர்த்தம்

அன்பே ! ஆருயிரே ! என்றபோது சிரித்தாள் .... !!அவள் சிரிப்பினில் மயங்கினோர் ஏராளம்....... - அதைஅறிந்தபோது நொந்து சிரித்தேன் !அவள் சிரித்ததன் அர்த்தம் புரிந்தேன் இன்று !!! - ஆலோன் மகரி

வெள்ளை ரோஜா

வெண்பட்டு சூடி தன்னுடல் மறைக்கும் பெண் போல .....உன் முகம் மறைத்து ....நாணச் சிவப்பை ஒளித்து ....புறக்கண் பார்வைக்கு வெள்ளைச்சோலையாய் மாறினாலும் ...என் அகக்கண் கொண்டு .... - உன் பொய்யெனும் துகிலுறித்து உனது வர்ணஜாலங்களை கண்டுவிட்டேன் ....... !!!! - ஆலோன் மகரி

நிஜத்தில்

கனவினில் கானும் உன்னை.........நினைவினில் நிறுத்த முயல்கிறேன்........... - தினம்தினம் முயற்சித்து தோற்கிறேன்....நிச்சயம் கைகோர்ப்பேன் .....ஓர் நாள் நிஜத்தில்....... - ஆலோன் மகரி

கருவறை

பார்க்காது போவாயோ ?பார்வை பறிமாறாமல் ....பரவாயில்லை ...... - நீபார்த்த சுவடுகள் என் இருதய கருவறையில் ...பெண்ணாய் இருப்பதால் மட்டுமல்ல ...உன்னை கருவறையாய் நினைப்பதால் .... - ஆலோன் மகரி

Page 29 of 58 1 28 29 30 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!