காணவில்லை…

தொலைந்து கொண்டிருக்கின்றன நொடிகள் ...தொலைகிறதென எப்படி உணர்ந்தாய் ?எனக்காய் கழியவில்லை ....அது தான் காரணமா ?என் பிடித்தங்களிலும் கழியவில்லை ...அவ்வளவு தானா ?கழியும் நொடிகளில் என்னை காணவில்லை ...உன்னையா ?ஆம் ....தொலையும் நொடிகளில் எள்ளளவும் என் மனம் லயிக்கவில்லை ....பிறகு..... ? !என்னையும் காணவில்லை ...எனக்கான க(ன)ணங்களும் காணவில்லை .... - ஆலோன் மகரி

எதுவோ… நானோ….

வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ....இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் ...வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது ...மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது ...அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ....பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் ...அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது ...இந்நிலை தொடர்வதன் காரணம் அறியேன் ....எதுவோ ...எதுவாகவோ ....மனமோ ... நானோ ....பரிணாமம் கொள்ள போகிறது .... - ஆலோன் மகரி 

தூரம்

என்னவென்று அறியும் முன்னே ....உன்னில் இருந்து என்னைப் பிரித்தாய்....இன்றே உணர்ந்தேன் உந்தன் காதலை...மீண்டும் இணையமுடியா தூரத்தில்.... - ஆலோன் மகரி 

நிலை கொள்ளா ஆன்மா

மனதில் ஆடும் சொற்கள்..... ஊசலாடும் உணர்வுகள்..... வருணனின் வருடல்கள்.... காலதேவனின் ஒளடதங்கள்.... இவற்றுக்கிடையில்....... நிலைகொள்ளா ஆன்மாவாக நான்.... - ஆலோன் மகரி

அன்பின் ஆழம் என்னவோ?

உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்..... உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்..... பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட..... மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்.... முடியாதென முதல் முறை - என் முயற்சியை கைவிடுகிறேன்..... அன்பு ஆழப்பாய்வதற்காக..... - ஆலோன் மகரி 

நீ யார்?

கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி 

ஆசை

உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி

வெற்றி

காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி

பிறந்தநாள் வாழ்த்துகள்

அறியா பருவம் முதல் என் மனதின் முதல் அன்பனானவன்…. உன்னருகில் இருந்த தருணங்கள் குறைவே - அதில் நான் நிறைவாய் இருந்ததும் நிஜமே… என்னவென்று அறியும் முன்னே உண்டான அன்பு…. இடையில் சிலகாலம் காணாத போதும் மனதின் ஆழத்தில் வேரூன்றி நின்றுவிட்ட அன்பு…. ஏழு வருடங்கள்….. உன்னை காணவில்லை… உன் குரல் கேட்கவில்லை… உன் அன்பான கண்டிப்பும் சந்திக்கவில்லை… ஆழியின் ஆழத்தில் மூழ்கிய முத்தாய் இருந்த உன் எண்ணம் … திடீரென மேலெழுந்து வந்த சமயம்…. யாதென்று அறிமாலே உன்னை தேடினேன்… மீண்டும் உன் அன்பு வலையில் என்னை பின்னிக்...

Page 30 of 58 1 29 30 31 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!