82 – ருத்ராதித்யன்
82 - ருத்ராதித்யன் சேயோனும் அவனது தந்தையும் கிழக்கு காடு நோக்கி பயணத்தை தொடங்கினர். அந்த நேரத்தில் தான் மகதனை அந்த விடலை சிறுவன் வேட்டையாட முனைந்து நரசிம்மனிடம் சிக்கியதும் நிகழ்ந்தது. “தாங்கள் யார்?” அதிகுணன் ஆர்வமுடன் கேட்டான். “நான் வனத்தில் திரிபவன்.. இந்த புலிக்கு இணை தேடி வந்தேன்.. யார் நீ? விஸ்வக் கோட்டையை சேர்ந்தவனா? அந்த வீரன் யாரை சேர்ந்தவன்?”, என மகதன் பிடித்து வைத்திருந்தவனை பார்த்தபடி கேட்டான். “அவர் எனது அத்தான்.. அவர் அரசவை அதிகாரி சேயோனின் கீழ் பணிபுரியும் வீரர்.. நன்றாக வேட்டையாட தெரிந்தவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று...