வினை

வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத‌ மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்‌...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...‌ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும் வினையின் ஆரம்ப புள்ளியில்....அதற்கான எதிர்வினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிடு.... - ஆலோன் மகரி

16 – மீள்நுழை நெஞ்சே

16 - மீள்நுழை நெஞ்சே பின்பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்தவன், சத்தம் செய்யாமல் கனிமொழியின் அறையைக் கணித்தபடி அந்தப் பக்கம் நடந்தான்.ஜன்னலைத் திறந்துவைத்தபடி உள்ளே கனி, துவாரகா, மைனா மூவரும் ஒரே கட்டிலில் படுத்திருந்தனர். மைனாவை நடுவில் விட்டு இருபக்கமும் தோழிகள் அணைக்கட்டி இருந்தனர்."இந்த கனிமொழிய ஒரு நாள் நல்லா கவனிக்கணும்… நம்ம பண்றதெல்லா துவாரகா காதுல போட்டதே இவதான்… ", எனப் பொறுமியபடி அந்த அறையின் பின்பக்கக் கதவைத் திறக்க முயன்றான்.கனிமொழியும், துவாரகாவும் கதவு திறக்கும் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்துப் பார்த்தனர். மனோஜ் அங்கே நின்றிருப்பதைக் கண்டு...

27 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

27 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு நாச்சியார் தலையில் கை வைத்ததும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தவள் முன்னே பரதேசி கோலத்தில் இருவர் நின்றிருந்தனர். அந்நேரத்தில் அவர்களைக் கண்டதும் மிரண்டு பின் சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக்கொண்டாள். "நீங்க யாரு?", தைரியமாகவே கேட்டாள். "பராசக்தியின் ஸ்வரூபத்திற்கு தைரியத்திற்கு குறைவில்லை தான். நீ காக்க வேண்டிய பொக்கிஷம் உன்னை தேடி வரப்போகிறது. அதை பத்திரமாக பார்த்துக்கொள்", ஒருவர் சிரித்தபடிக் கூறினார். "பொக்கிஷமா? என்ன அது? நீங்க எப்படி இங்க வந்தீங்க? ", நாச்சியார் இதுவும் ம்ரிதுள்ளின் நாடகமோ என்ற நினைப்பில் சந்தேகக் கண் கொண்டே அவர்களைப் பார்த்தாள். "சந்தேகம் உன் ஆத்மாவோடு...

26 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

26 - காற்றின் நுண்ணுறவு "சொன்னா கேளு பாலா…. உன் உயிருக்கே ஆபத்து வரலாம்…. அந்த மனுஷன் என்ன பண்ணப்போறார்-னு எனக்கும் தெரியல. அப்பா அம்மாவுக்கு நாச்சியாவாது முழுசா கிடைச்சிட்டா பரவால்ல…. அப்பா எப்படி இந்தாள நம்பினாருன்னு தெரியல. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது… யாராவது அவங்க பக்கத்துல இருக்கணும்", வல்லகி தலையைப்  பிடித்தபடிக்  குனிந்துக்கொண்டுப்  பேசினாள். "அவங்கள நாங்க பாத்துக்கறோம் வல்லகி….. நீங்க இப்ப எங்களோட கிளம்புங்க", என ஏஞ்சல் அவ்விடம் வந்தாள். புதிதாக ஒரு யுவதி நிற்பதுக்  கண்டு தோழிகள் இருவரும் சந்தேகமாகப்  பார்த்தனர்."யார் நீங்க?", பாலா தான் முதலில் கேட்டாள். "இத பாத்தா...

25 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

25 -காற்றின் நுண்ணுறவு "பெரியப்பா…. பெரியப்பா…. எங்க இருக்கீங்க?", பாலாவும் வல்லகியும் பிறைசூடனைத் தேடியபடி அந்த ரிசர்ச் லேப்பில் நுழைந்தனர்.அங்கே அவர் கணினியில் எதையோ பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். "இராத்திரி முழுக்க தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க பெரியப்பா? நேத்து நாங்க இங்கிருந்து போனப்ப உட்கார்ந்து இருக்கற பொசிஷன்லயே நீங்க இன்னும் இருக்கீங்க ……", பாலா அங்கலாய்த்தபடி அவரின் அருகில் வந்து அவரைத்  தங்கள் பக்கம் திருப்பினாள்."வேலைன்னு வந்தா நான் தமிழன்டா", என கெத்தாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டார். "அது வெள்ளைக்காரன்னு தானே சொல்லுவாங்க", பாலா தன் சந்தேகத்தைக் கேட்டாள். "வெள்ளைக்காரன் என்னிக்கு உடம்பு வலஞ்சி வேலை...

24 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

24 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரன் தன் வேலையை விட்டு வந்ததில் இருந்து நாச்சியார் கடத்தப்பட்ட இடம், நேரம், அவளை தூக்கிச் சென்ற வாகனம், சென்ற வழி என அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாகத்  துப்பறிந்துக் கொண்டிருந்தான். மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் அவர்களைக்  கொண்டுச்  சென்று இருக்க வேண்டும் என்ற யூகத்துடன், ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து ஆட்களை வைத்து இனியனும், தர்மனும் தேடிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு சோழனும், மாவழுதியும் பெரும் தூண்களாக மறைந்திருந்தே வழிகாட்டி வருகின்றனர்.சோழன் பல சிக்கலான வழக்குகளை தீர்க்க உதவியதால் அவருடன் பணிபுரிந்த போலீஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும்...

23 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

23 - காற்றின் நுண்ணுறவு வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர். "என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?", பிறைசூடன் இருவருக்கும் பரிமாறியபடிக் கூறினார். "எப்படி பெரியப்பா அரை மணிநேரத்துல இத்தனை டிஷ் செஞ்சீங்க?", பாலா. "காலைலையே எல்லாம் மேரினேட் பண்ணிட்டேன். மீதி எல்லாம் ரோபோ பாத்துட்டு இருந்தது. நான் வந்ததும் பூஸ்ட் அப் செஞ்சி ரெடி பண்ணிட்டேன் அவ்வளவு தான். இதுலாம் நம்ம உடம்புக்கு தினமும் தேவைபடுற சத்துக்கள் இருக்கற உணவு வகைகள்… ", என கிட்டதட்ட பதினைந்து வெரைட்டி வைத்தார். "இத்தனையும் சாப்டா ஒரே வாரத்துல...

22 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

22 - காற்றின் நுண்ணுறவு "ஹேய்…. லிவ் மீ….. என்ன பண்ணீங்க என்னை?", நிரல்யன் குரல் பலவீனமாக ஒலித்தது. "நீ பேசினத வச்சி நீ என்ன முடிவுக்கு வந்திருந்தன்னு எனக்கு தெரியும் நிரல்யன். என் ஆராய்ச்சிக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்கள சும்மா விடமாட்டேன். அந்த பொண்ண நீ கொண்டு வரல…. ஆனா நானே அவள இங்க கொண்டு வரமுடியும்… பாக்கறியா?", மாமல்லன் அதிகபட்சத் தலைகனத்துடனும், திமிருடனும் கூறினான்."உன்னால முடியாது", என நிரல்யன் கஷ்டப்பட்டுப்  புன்னகைத்துக் கூறினான். "எதையும் முடிச்சி காட்றது தான் என் பழக்கம்", எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். நிரல்யன் மீண்டும் மயக்கத்திற்கு...

21- காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக்  கிளம்பினான். "அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….", என சாக்க்ஷி வாழ்த்துக்  கூறி வழியனுப்பி வைத்தாள். மாமல்லனிடம் எப்படி வல்லகி வராததன் காரணம் கூறுவது என்கிறக்  குழப்பத்துடன் கார் ஓட்டியபடி வந்தான். பிறைசூடன் மாலை கிளம்பி இரவிற்குள் சென்னை வந்து சேர்ந்தவர் பெண்கள் இருவரையும் தன் இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் தங்க ஒரு தளத்தையே கொடுத்தவர். அதில் அனைத்து வசதிகளும் செய்துகொடுத்தார். அவர்கள் இருவரும் தங்கியிருந்தது இரண்டாவது தளம். அவர் முதல் தளத்தில் தங்கி இருந்தார். அது தவிர...

20 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

20 - காற்றின் நுண்ணுறவு "சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்", என பாலா அவன் அருகில் வந்து விசாரித்தாள். "தேவைபடறப்ப வேஷம் போட்டு தான் ஆகணும்…. வல்லகி எப்படி இருக்க? உடம்பு பரவால்லயா?", என அக்கறையுடன் விசாரித்தான். "நல்லா இருக்கேன் மிஸ்டர் தர்மதீரன். சுதாகர் சார் எப்படி இருக்காரு…. உங்கள வேலைய விட்டு தூக்கிட்டதா யாழினியன் சொன்னாரு… என்ன பண்றீங்க? இப்ப எங்க இருக்கீங்க?", வல்லகி அவனை அமரச்சொல்லிவிட்டு கேள்வி கேட்டாள். "நான் ஆஸ்பத்திரில இருந்தப்ப தம்பி தான்மா அப்பாவுக்கு...

Page 37 of 58 1 36 37 38 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!