ஆசுவாசம்

கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ... - உன்னைஉணரத் தவறிய வாழ்வில்... - ஆலோன் மகரி

33 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

33 - காற்றின் நுண்ணுறவு பிறைசூடனுடன் வல்லகி மற்றும் பாலாவைக்  கடத்திச் சென்றவர்கள் அங்கே ஒரு கட்டிடத்தில் அவர்களை அடைத்துவிட்டனர்."வகி…. எதுக்கு நம்மல இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க…. இது என்ன இடம்?", பாலா."இது அராப் கண்ட்ரி…. தோஹான்னு நினைக்கறேன்", பிறைசூடன் சுற்றிலும் பார்வையைச்  சுழற்றியபடிக் கூறினார். "கத்தார் தானே", பாலா. "ஆமாம்மா…. என்னை இரண்டு பேரும் மன்னிச்சிடுங்க", என கைக்கூப்பி வணங்கினார். "உங்களுக்கும் எதாவது ப்ளாக்மெயில் ப்ளாஸ்பேக் இருக்கா பெரியப்பா?", பாலா அசட்டையாகக்  கேட்டாள். "ரொம்பவே தேறிட்ட பாலா… அழவே இல்ல நீ… அவர அசால்ட்டா ப்ளாஸ்பேக் கேக்கற…. க்ரேட்", என வல்லகி அவளைப்  பாராட்டினாள். "கூத்தாடிய கட்டினா...

32 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

32 - காற்றின் நுண்ணுறவு பல்லவபுரத்தில் தமிழோவியனும், நிலவரசியும் பின்பக்க கதவை திறந்துக்கொண்டுச்  சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா எனப்  பார்த்தபடி வெளியே வந்தனர். நிலவரசி இப்போது நன்றாகவே நடந்தார். தமிழோவியனை உள்ளே செல்லக் கூறிவிட்டு அவர் மட்டும் வாழை மரங்களுக்கு மத்தியில் இருந்த மோட்டார் ரூமைத்  திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். சத்தம் செய்யாமல் அடியில் இருந்த பாதாள பாதையை திறந்தவர் உள்ளே இறங்கி நடந்து பாலாவின் வீட்டு மாட்டு கொட்டகையில், தரையில் இருந்த கதவை திறந்து மேலே ஏறி வந்தார். பாலாவின் வீடு அதே தெருவில் அவர் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி...

31 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக்  கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அங்கு வந்தவர்களுக்குப்  பெரும் பொக்கிஷமே கிடைத்தது போல் இருந்தது. அந்த இடத்தை சுற்றி வந்துக் கொண்டிருந்த தர்மனுக்கு, அங்கே தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவின் கழுத்தில் ஏதோ மின்னுவது போல தெரிய அதன் அருகில் சென்றுப் பார்த்தான்.அது...

30 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

30 - காற்றின் நுண்ணுறவு "நாச்சியா", என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது. "வல்லா", என அவளும் பிடியைத்  தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே அவளைக் கட்டிக்கொண்டான். "நீ எங்க இருக்க? எப்படி இருக்க? அம்மாவ போய் பாத்தியா? அப்பா எப்படி இருக்காரு?", வரிசையாகக்  கேட்டாள். "அவங்க நல்லா இருக்காங்க நாச்சியா…. நீ ஏன் அவனுக்குள்ள நிக்கற வெளியே வா", என வல்லகி அவள் நிற்கும் நிலையைச்  சுட்டிக்காட்டினாள். "விடு என்ன", என திமிறினாள். "கொஞ்சம் விட்டா ரொம்ப தான் துள்ளுற நீ…. விடமுடியாது", என ம்ரிதுள் சிரித்தபடிக் கூறினான். வயிற்றில் முஷ்டியால் குத்த...

18 – மீள்நுழை நெஞ்சே

18 - மீள்நுழை நெஞ்சே வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் படி, ஆனால் வயது கோளாறு அது இது என்று சாக்குக் கூறி, அவனை அப்போதிருந்து அக்காவும், தன் தாயும் தாங்கியதால் வந்த வினை என்று உணர்ந்தார்.அதற்கு பின் அவன் சென்ற இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு தவறைச் செய்து இன்றுவரை மாமன்களின் மானத்தை வாங்கிக்கொண்டு இருக்கிறான்.இந்த நிலையில் மாமன் மகளை கட்டலாம் என்கிற பேராசையும் அவனுக்கும், அவனது தாயிற்கும் இருப்பது தான்…...

29 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நாக் எதுவும் செய்யமுடியாமல் திணறினான். இளவெழிலியும், ரிஷியும் போகும் வழியெல்லாம் அடையாளத்தை விட்டபடிச் செல்ல, நாக் அதை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்துச்  சென்றான். இரண்டு மணி நேரத்தில் காட்டைக் கடந்து ரோட்டிற்கு வந்து பத்து லாரியில் அவர்களைப் பிரித்து பிரித்து ஏற்றினார்கள். அவர்களின் பொருட்களும் அவர்கள் ஏறிய வண்டியிலேயே ஏற்றப்பட்டது. ம்ரிதுள் அங்கே அமர்ந்தபடி இங்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தான். "ரிஷி…. ரிஷி….", இளவெலிழி அழைத்தாள். "ஒவ்வொரு...

விழித்திருத்தல்….

விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....‌பிரபஞ்சத்தின் பெருங்கதவு திறக்கிறது....எத்தனை வியப்பான நிகழ்வுகள்....விழித்திருத்தல் என்பது...மெய்யான விழிப்பாக ....மெய்யை உணர்ந்த விழிப்பாக இருத்தலே உயிர்களின் உச்ச லட்சியம்..... - ஆலோன் மகரி

17 – மீள்நுழை நெஞ்சே

17 - மீள்நுழை நெஞ்சே "துவாரகா‌…‌ துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? ", என‌ வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் கனியைப் பார்க்க, துவாரகா தட்டில் இருந்த நெத்திலி மீனை உறிஞ்சிக்கொண்டே எழுந்து கதவிடம் சென்றாள்."நீ உள்ள போ துவா… நான் பேசிக்கறேன்…", கனி அவளைத் தடுத்தபடிக் கூறினாள்."உன்ன முன்ன விட்டு என்னை பின்ன நிக்க சொல்றியா? நீ உள்ள போ… இத நான் பாத்துக்கிறேன். இந்நேரம் எங்கப்பாவும் இங்க வந்திருப்பாரு…. ", துவாரகா கண்டிப்புடன் கூறி, அவளை முற்றத்தில் நிறுத்திவிட்டுக் கதவைத் திறந்தாள்...

28 -காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், "இவளுக்கு மாத்து மருந்து போடுங்க", என வல்லகி சினந்தாள். "எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தா தான் இவளுக்கு மாத்து மருந்து குடுப்போம்", என ஏஞ்சல் வரவழைக்கப்பட்டக்  கடுமையுடன் கூறினாள். வல்லகி அவளை சில நொடிகள் கூர்ந்துப் பார்த்துவிட்டு,"இவளுக்கு மருந்து போட்டா தான் இங்க இருந்து நான் கிளம்புவேன்", என ட்ரைவர் சீட்டில் இருந்தவன் கழுத்தைத்  திருகிவிட்டு ஏஞ்சலின் கழுத்தில் கத்தியை வைத்தாள். "வகி…. எனக்கு என்னமோ மாறி இருக்கு…. தண்ணி வேணும்", என தீனமானக் ...

Page 36 of 58 1 35 36 37 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!