19 – காற்றின் நுண்ணுறவு
19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக் கவனியாமல் கண்மூடி அர்த்த - சயனநிலையில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், "ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க", எனக் கூறியபடி அவள் எதிரில் அமர்ந்தார். தமிழோவியன் மென்னகைப் புரிந்துவிட்டு, "பாலா…. செல்லம்மா …", என இருவரையும் அழைத்துவிட்டு தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தார். தந்தை அழைத்ததும் கண்விழித்தவள் எதிரில் இருப்பவரைக் கண்டு எழுந்து நின்றாள். பாலாவும் வல்லகியும் அவரை மரியாதை நிமித்தமாக வரவேற்றனர்....



